ணிப்பூர் மாநிலத் தில், 2023, மே மாதத்தில், மைத்தேயி இன மக்க ளுக்கும், குக்கி இன மக்களுக்கு மிடையே உருவான கலவரம் இன்றுவரை கட்டுக்குள் வராமல், பலி எண்ணிக்கை 200-ஐ தாண்டி அதிகரித்து வருகிறது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், அம்மாநிலத்திலேயே அமைக்கப் பட்ட நிவாரண முகாம்களிலும், இன்னும் சிலர், பக்கத்து மாநிலங்களிலுள்ள முகாம்களிலும் தஞ்சமடைந்து, எதிர்காலமே கேள்விக்குறியாகி பித்துப் பிடித்தது போன்ற மனநிலையில் இருக்கிறார் கள். மணிப்பூரின் போராட்டக்களம் தற்போது குக்கி இன மக்கள் வசிக்கக்கூடிய மலை மாவட்டங் களைத் தனியாக யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்பதாக மாறியிருக்கிறது. இங்குள்ள மக்களுக்கு எதிர்காலத் தின் மீதான நம்பிக்கையை ஊட்டுவது அவசியம். அந்த நம்பிக்கையை, அம்மாநிலத்திலும், இந்தியாவிலுமாக ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க. தலைமை தான் ஏற்படுத்த வேண்டும். அவர்களிடம் தான் அதிகாரம் குவிந்திருக்கிறது. ஆனால் மணிப்பூர் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதற்காக ஒருமுறைகூட அம்மாநிலத்துக்கு செல்ல மோடி விரும்பவில்லை. அவரது கணக்குப்படி, அம்மாநி லத்தில் இரண்டே இரண்டு மக்களவைத் தொகுதிகள் தான். அங்கே போகாவிட்டாலும், மக்களின் கோபத்துக்கு ஆளானாலும் இழப்பென்னவோ இரண்டு தொகுதிகள் மட்டுமே. அதை கருத்தில்கொண்டு, அம்மாநிலத்துக்குள் செல்வது குறித்து சிந்திக்கவேயில்லை மோடி.

dd

ஆனால் கடந்த ஆண்டே கலவரத்தினிடையே பதட்டத்தோடு நிவாரண முகாம்களில் அடைக்கலமான மக்களைச் சென்று சந்தித்தார் ராகுல் காந்தி. மீண்டும் தனது நடைபயணத்தின் போதும் மணிப்பூர் மக்களைச் சந்தித்து ஆறுதல்படுத்தினார். இதோ, இப்போது எதிர்க்கட்சித் தலைவரான சூழலில் மீண்டும் மணிப்பூருக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு நம்பிக்கையூட்டியிருக் கிறார். ஒரு பிரதமர் செய்ய வேண்டிய பணியை, மக்களின் பிரதமராக ராகுல் காந்தி செய்கிறார். கடந்த எட்டாம் தேதி திங்களன்று, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அஸ்ஸாம் மாநிலத்துக்கு சென்ற ராகுல், வெள்ளச்சேதத்தைப் பார்வையிட்டு, லக்கிபூரிலுள்ள வெள்ள நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்து, "அஸ்ஸாம் மக்களுடன் நான் தோளோடு தோள் சேர்ந்து நிற்கிறேன்'' என்று ஆறுதல் கூறினார்.

பின்னர் அங்கிருந்து மணிப்பூரில் ஜிரிபாம் மாவட்டத்துக்கு சென்றவர், அங்குள்ள நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மணிப்பூர் மக்களிடம் அவர்களது துயரங்களைப் பற்றி கேட்டறிந்து, ஆறுதல் கூறினார். பின்னர் இம்பாலுக்கு சென்றவர், அங்கிருந்து சுரசந்த்பூர் நகரிலுள்ள நிவாரண முகாம்களைப் பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்து பிஷ்னுபூர் சென்று, அங்குள்ள நிவாரண முகாம்களிலுள்ள மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன்பின்னர் மீண்டும் இம்பால் சென்று மணிப்பூர் மாநில கவர்னரை சந்தித்து, மணிப்பூர் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். பிரதமர் மோடி மணிப்பூருக்கு வராதபோதும், ராகுல்காந்தியின் விசிட், அம்மாநில மக்களுக்கு நம்பிக்கையளிப்பதாகக் கூறினர். ராகுல் காந்தி மூலமாகத் தங்களது நிலைமை ஒன்றிய அரசின் பார்வைக்கு செல்லக்கூடுமென நம்பிக்கையோடு தெரிவித்தனர்.

மணிப்பூர் விசிட்டுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, "கலவரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும். இங்கு நடக்கும் வன்முறைகளால் ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த மாநிலமே இரண்டாகப் பிளவு பட்டிருக்கிறது. நான் உங்கள் சகோதரனாக இங்கு வந்திருக்கிறேன் என்பதை மணிப்பூரில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மணிப்பூரில் அமைதியான சூழலைக் கொண்டுவர என்னால் என்ன செய்ய முடியுமோ, அத்தனையையும் நிச்சயம் செய்வேன். மணிப்பூரில் அமைதி திரும்புவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கை களையும் காங்கிரஸ் கட்சி மேற் கொள்ளும்'' என உறுதியளித்தவர், "பிரதமர் மோடி மணிப்பூர் மாநிலத்துக்கு வந்து மக்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

மணிப்பூர் மக்களுக்கு ராகுல் காந்தி ஆறுதல் சொல்லிக் கொண்டி ருக்கும் தருணத்தில் பிரதமர் மோடியோ ரஷ்யாவில் நடைபெறும் 22வது உச்சி மாநாட்டுக்காக மாஸ்கோ சென்றுள்ளார். அங்குள்ள இந்திய வம்சாவளி மக்களுடன் கலந்துரையாடி னார். இது தற்போது கடும் விமர் சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா வில் கலவரத்தால் ஒரு மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மக்களைச் சந்தித்துப் பேசி பிரச்சனைக்கு தீர்வு காண முயலாமல், உள்நாட்டு மக்களின் துயரத்தைத் துடைக்க முயலாமல், வெளிநாடுவாழ் இந்திய வம்சாவளி யினரோடு ஏதேதோ பேசிக்கொண்டி ருக்கிறார். அங்கு சென்றும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி குறித்து குறை கூறிக்கொண்டிருக்கிறார். நேர்மையான பிரதமரென்றால், இந்த கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்து, மக்களின் இயல்பு வாழ்க்கையைத் தொடரச் செய்திருக்க வேண்டும். ஆனால் அதுகுறித்து சிறிதும் சிந்திக்காத பிரதமரை பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்!

Advertisment