பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர், தமிழக காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் போலீ சார் குறித்து அவதூறாக பேசியதாக கடந்த மே 4 ஆம் தேதி, தேனியில் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன் றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சவுக்கு சங்கர்.. கோயம் புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், பெண் போலீஸாரை சவுக்கு சங்கர் அவதூறாகப் பேசியதாக, முசிறி டி.எஸ்.பி. யாஸ்மின், திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் போலீ ஸில் அளித்த புகாரின் பேரில், சவுக்கு சங்கர் மீதும், அவரது பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப ரான ஃபெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. டெல்லியில் பெலிக்ஸ் ஜெரால்டை, திருச்சியிலிருந்து சென்ற தனிப்படை போலீஸார் கைதுசெய்து கொண்டுவந்து 3லிவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தினர். அவரை 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவ லில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில், சவுக்கு சங்கரின் அவதூறு பேட்டியை தனது யூடியூப் சேனலில் ஒளிபரப்பிய பெலிக்ஸ் ஜெரால்டின் நுங்கம்பாக்கத்தில் உள்ள வீடு மற்றும் அலுவலகத்தில் போலீசார் சோதனை செய்தனர்.
இந்த சோதனை குறித்து பேசிய யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டின் மனைவி.. "அலுவலகத்திலிருந்த நான்கு கேமராக்கள், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட 29 பொருட் களை போலீசார் கைப்பற்றி எடுத்துச் சென்றனர். இத்துடன் எனது மொபைல் போனையும் போலீசார் எடுத்துச்சென்ற னர்'' என கூறியிருந்தார். இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக வழக்கறிஞர் சுபாஷ் பா.மோகனிடம் கேட்டபோது, "ஒரு ஊடக அலுவலகத்தில் நுழைந்து போலீசார் சோதனை செய்வதென்பது மிகவும் சீரியசான விஷயம். போலீசாரின் சோதனை சரியானதாகவே இருந் தாலும், குற்றத்திற்கு தொடர்புடைய கருவிகளை மட்டும்தான் எடுத்துச் செல்லவேண்டும். தொடர்பில்லாத ஹார்ட் டிஸ்க், மொபைல், கேமரா போன்றவற்றை எடுத்துச் சென்றிருக்கக் கூடாது. ஒருவேளை எடுத்துச்சென்றே தீர வேண்டும் என்றால், அது ஃபாரன்சிக் அதிகாரி களின் மேற்பார்வையில்தான் நடந்திருக்கவேண் டும். போலீஸ் அதிகாரிகள் கைப்பற்றும் ஹார்ட் டிஸ்க், மொபைல், கேமரா உள்ளிட்டவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும். நீதிமன்றம் அதை ஃபாரன்சிக் லேப்புக்கு அனுப்பி, ஙண்ழ்ழ்ர்ழ்ண்ய்ஞ் முறையில், இரண்டு காப்பி எடுத்து.. ஒன்றை நீதிமன்றத்துக்கும் மற்றொன்றை போலீசுக்கும் அனுப்பிவைப்பார்கள். இதில், போலீசுக்கு அனுப்பிவைக்கப்படுவதை மட்டுமே போலீசார் சோதிக்கமுடியும். இதைவிட்டு நேரடியாக போலீஸ் அதிகாரிகளே எடுத்துச்செல்வது சட்டத்திற்கு புறம்பானது" எனத் தெரிவித்தார்.
ஆனால், சட்டப்படியாகவே ரெய்டில் அனைத்து நடவடிக் கைகளும் மேற்கொள்ளப்பட்டி ருப்பதாக போலீஷ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
-ப்ரித்விராஜன்