லோ தலைவரே, அமித்ஷா விசிட் எப்படி இருந்தது?''

""மேடையிலேயே கூட்டணி அறிவிப்பை அ.தி.மு.க தலைமை வாயால் சொல்ல வச்சிட்டாரே?''

""அது ஓ.கே.தாங்க தலைவரே... ஆனா, அ.தி.மு.க.வுடனான கூட்டணியைவிட, அ.தி.மு.க எதிர்ப்பு வாக்குகள் தி.மு.க.வுக்குப் போகாமல் சிதறடிப்பதுதான் பா.ஜ.க. நோக்கம். இதில் முதல் சாய்ஸ் ரஜினி. அவர் பிடி கொடுக்காத நிலையில், தனது விசிட்டின்போது சந்திக்க alagiriநினைத்தார் அமித்ஷா. கொரோனா காலத்தில் மிகவும் கவனமா இருக்கும் ரஜினி, தனக்குக் காய்ச்சல்னு சொல்லி, பண்ணை வீட்டுக்குப் போய் கதவைச் சாத்திக்கிட்டார். லீலா பேலஸ் ஓட்டலில் இருந்த அமித்ஷா வீடியோ காலில் ரஜினியிடம் பேசியபோதும், வலையில் சிக்கலை. "வாய்ஸாவது கொடுங்க'ன்னு அமித்ஷா சொன்னப்பவும், "உங்க அழைப்புக்கு நன்றி. என் உடல் நிலை சரியானதும் நானே உங்களை டெல்லியில் வந்து சந்திக்கிறேன்'னு ரஜினி சஸ்பென்ஸ் வச்சிட்டாராம்.''

""மு.க.அழகிரியும் அமித்ஷாவிடமிருந்து எஸ்கேப் ஆயிட்டாரே?''

Advertisment

""அமித்ஷா சென்னைக்கு வருவதற்கு முதல்நாள், வீட்டில் இருந்து அழகிரி கிளம்ப, தி.மு.க.வில் சித்தரஞ்சன் சாலை கிச்சன் கேபினட்வரை பி.பி. எகிறிடிச்சாம். அழகிரியோ செல்போனை ஆஃப் செய்துட்டு கொடைக்கானல்ல போய் தங்கிட்டாரு. உளவுத்துறை முயற்சித்தும், அழகிரியை அமித்ஷா தரப்பால் தொடர்பு கொள்ள முடியலை. அதேபோல் தி.மு.க.வுக்கு ஆதரவான இஸ்லாமிய ஓட்டுக்களைப் பிரிச்சிடலாம்கிற எண்ணத்தில் பீகாரில் களமிறக்கிய ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஒவைசியை அமித்ஷா முயல, அவரும், தமிழ்நாட்டில் நமக்கு கிளை இல்லைன்னு ஒதுங்கிக் கிட்டாராம். அதனால் பா.ஜ.க உருவாக்க நினைத்த பி டீம், அமித்ஷா விசிட்டில் செட்டில் ஆகலை. இருந்தாலும் தமிழ்நாட்டில் உள்ள உதிரிக்கட்சிகளை அடுத்த ரவுண்டில் கரெக்ட் பண்ண வியூகம் வகுக்கப்படுதாம்.''

""அமித்ஷா முன்னாடி ஓ.பி.எஸ். ரொம்பவே பவ்யம் காட்டியிருக்காரே?''

rran

Advertisment

""ஆமாங்க தலைவரே.. பவ்யம் காட்டி, அமித்ஷாவைத் தனியாக சந்திக்க ஓ.பி.எஸ். நேரம் வாங்கினார். இதையறிந்த எடப்பாடி, நாங்க ரெண்டு பேரும்தான் உங்களைச் சந்திக்க வர்றோம்ன்னு அவருக்குத் தகவல் அனுப்பி, ஓ.பி.எஸ்.சின் முயற்சியை முறியடிச்சிட்டாராம்.''

""தி.மு.க.வில் மாவட்ட நிர்வாகங்கள் பிரிக்கப் பட்டு, பொறுப்பாளர்கள் போடப்பட்டிருக்காங்களே?''

""அதில் சில இடங்களில் சலசலப்பு தெரியுது. மதுரை மாநகர வடக்கு மாவட்ட பொறுப்பாளராக 82 வயதைக் கடந்த பொன் முத்துராமலிங்கமும், தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளராக 75 வயதைக் கடந்த ஏனாதி பாலசுப்பிரமணியமும் நியமிக்கப்பட்டிருக்காங்க. சீனியர்களுக்கு பொறுப்புன்னாலும், வயது முதிர்ந்த இவர்களால் கொரோனா காலத்தில், எப்படி கட்சிப்பணியைக் களமிறங்கி செய்யமுடியும்ன்னு அந்தப் பகுதிகளைச் சேர்ந்த தி.மு.கவினர் கேள்வி எழுப்பறாங்க. தேர்தலில் சீட் வாங்கும் வேட்பாளர்கள் விறுவிறுப்பாக செயல்படுவதற்கு, அனுபவசாலிகளான இவர்கள் வழிகாட்டியா இருப்பாங்கன்னு சொல்லுது அறிவாலய வட்டாரம்.''

""சென்னை மாவட்ட நிர்வாகமும் பிரிக்கப்பட்டிருக்கே?''

rang

""சென்னை வடக்கு மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, 3 சட்டமன்றத் தொகுதி களைக் கொண்ட வடக்கு மாவட்டப் பொறுப் பாளராக இளைய அருணா என்பவரையும், 2 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட வடகிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக மாதவரம் சுதர்சனத்தையும் நியமிச் சிருக்கு கட்சித் தலைமை. தி.மு.க.வில் இருக்கும் வன்னிய சமூகப் பிரமுகர்கள் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த சுதர்சனத்துக்கு குறைந்த தொகுதியும், நாடார் சமூகத்தவரும் புதியவருமான இளைய அருணாவுக்கு அதிக தொகுதியும் ஒதுக்குவதான்னு ஆதங்கக் குரல் எழுப்பறாங்க. அதேசமயம் ஸ்டாலினுக்கு சென்னையில் ரைட் அண்ட் லெஃப்ட்டா இருக்கும் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோரின் மாவட்டங்கள் பிரிக்கப்படாததும் தலைநகர தி.மு.க.வில் விவாதிக்கப்படுது.''

""நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். அமித்ஷாவுடனான சந்திப்பின் போது முதல்வர் எடப்பாடி, ஏழுபேர் விடுதலையில் சி.பி.ஐ. தங்களுக்கு எந்தவித தனிப்பட்ட பங்களிப்பும் இல்லைன்னும் கவர்னர் அவர் விருப்பப்படி முடிவெடுக்கலாம்னு சொல்லிடிச்சி. அதனால் பந்து கவர்னர் கைக்கே வந்திருக்கு. இந்த விவகாரம் தேர்தல் இஷ்யூவாக மாறக்கூடியது. அதனால் அவர்களை விடுவிக்கனும்னு கேட்டிருக்கிறார். அமித் ஷாவோ, விரைவில் நல்ல முடிவைத் தருகிறேன்னு சொல்லியிருக்கிறார். அதனால் 7 பேர் விடுதலை இப்போதே இருக்குமா? அல்லது வாக்குகளை அறுவடை செய்யும் நேரத்தில் இருக்கு மாங்கிற விவாதம் தமிழுணர்வாளர்கள் மத்தியில் எழுந்திருக்கு.''

___________________

abaக்கீரன் இணையதளத்தில் பகுதி நேர Environment Reporter ஆக செயல்பட்ட கோவை சிவா என்பவரின் பணிக்காலம் ஏற்கனவே நிறைவடைந்துவிட்ட நிலையில் பழைய அடையாள அட்டையுடன் நக்கீரன் பெயரை தவறாகப் பயன்படுத்தி வருவதாக அறிகிறோம். இதன் காரணமாக அவரைப் பற்றி புகார்கள் வருவ துடன், காவல்துறையில் வழக்கும் பதிவாகியுள்ளது எனத் தெரிகிறது. நக்கீரன் நிறுவனத்தில் சிவா தற்போது பணியில் இல்லை. செய்திகளுக்காக யாரும் அவருடன் தொடர்புகொள்ள வேண்டாம் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

-ஆர்