சென்னையிலுள்ள தமிழ்நாடு ஆசிரியர் பல் கலைக்கழகம் சமீபத் தில் நடத்திய செமஸ்டர் தேர்வு களின் கேள்வித்தாள் லீக் ஆன விவகாரம் உயர் கல்வித் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத் தியது. இதனையடுத்து, பல்கலைக் கழகத்தின் பதிவாளர் ராமகிருஷ்ணனை இடமாற்றம் செய்தார் துறையின் செயலாளர் பிரதீப்யாதவ் ஐ.ஏ.எஸ். புதிய பதிவாளராக ராஜசேகர் நியமிக்கப்பட்டார். கேள்வித்தாள் லீக் ஆன விவகார வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

tt

கேள்வித்தாள் லீக் விவகாரத்தின் பின்னணிகளை நக்கீரன் தான் முதன்முதலில் அம்பலப்படுத்தியது. நமது தகவல்கள் பல்கலைக்கழகத்தரப்பிலும், சி.பி.சி.ஐ.டி. தரப்பிலும் விரிவாக எடுத்துக்கொள்ளப்பட்டி ருக்கிறது. இந்த நிலையில், கேள்வித்தாள் விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் பல்கலைக் கழகத்தில் தீவிர விசாரணை நடத்தியிருக்கிறார்கள் சி.பி.சி.ஐ.டி. போலீஸார்.

இதுகுறித்து விசாரித்தபோது, "பல்கலைக் கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர்கள் நாராயணன், நடேசன் இருவரிடமும், முன் னாள் பதிவாளர் ராமகிருஷ்ணனை வைத்துக் கொண்டு நிர்வாகத்தில் அவர்கள் நடத்திய லீலைகளையும், கேள்வித்தாள் லீக் வில்லங்கத் தையும் பற்றி கடுமையாக விசாரித்திருக்கிறது போலீஸ். அதுமட்டுமல்லாமல், லீக் விவ காரத்தில் தொடர்புடையதாக 165 கல்லூரி களின் தேர்வு மையங்கள் பற்றியும் விசாரணை நடந்திருக்கிறது. இதில், சிண்டிகேட் உறுப் பினர்கள் சிலரின் 7 கல்லூரிகளும் அடக்கம். அந்த கல்லூரியில் நடந்துள்ள முறைகேடுகள் சி.பி.சி.ஐ.டி.யின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது''’என்கிறார்கள் உயர்கல்வித் துறையினர்.

Advertisment

பல்கலைக்கழகத் தரப்பில் விசா ரித்தபோது, "போலீஸ் விசாரணை யில் வேறு சில விவகாரங்களும் வெளிவந்திருக்கிறது. அதாவது, கல்லூரிகளுக்கு தொடர் இணைவு ஆணை கொடுப்பதற்கு முன்னாள் பதிவாளர் ராமகிருஷ்ணனும், சிண்டிகேட் உறுப்பினர் நாராயணனும் பெரிய அளவில் ’ஸ்வீட் பாக்ஸ்‘ வசூலித்துள்ளனர். ஆனால், அந்த ஆணை யை ரிலீஸ் செய்வதற்குள் கேள்வித்தாள் லீக் விவகாரத்தில் அவர் மாற்றப்பட்டுவிட்டார்.

இந்த நிலையில், அந்த ஆணையை வழங்குமாறு பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளரான ராஜசேகருக்கு அழுத்தம் கொடுத்துவருகிறார் ராமகிருஷ்ணன். இதற்காக சில பேரங்கள் நடந்திருக்கிறது. இந்த வில்லங்கத்தையும் போலீசார் கண்டுபிடித் திருக்கிறார்கள். விரைவில் இது பூதாகரமாக வெடிக்கும்''’என்கிறார்கள்.

தமிழக அரசின் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் நடந்துள்ள முறைகேடு கள் தற்போது கவர்னர் மாளிகைக்கும் சென் றுள்ள நிலையில், முறைகேடுகளில் தொடர் புடையவர்கள் அரசு மேலிடத்தின் உதவியைப் பெற முயற்சித்து வருகின்றனர். கல்வியில் ஊழல் என்பது ஜீரணிக்க முடியாத விசயம். ஒரு தலைமுறையையே பாழ்படுத்திவிடும் என்பதால் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறையின் செயலாளர் பிரதீப்யாதவ் ஆக்ஷன் எடுப்பாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Advertisment

-இளையர்