Skip to main content

சொத்து யாருக்கு? நடராஜன் மரணச் சான்றிதழ் சர்ச்சை!

Published on 22/06/2018 | Edited on 23/06/2018
மூளைச் சாவடைந்த இளைஞரின் குடும்பத்தினரை மசிய வைத்து, விதிமுறைகளுக்கு மாறாக உறுப்புத்தானம் பெற்று, கல்லீரல்-கிட்னி பொருத்தப்பட்ட ம.நடராஜன், கடந்த மார்ச் 20-ந்தேதி குளோபல் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு எதிரான சில வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன. கடந்த 1994-ல் போலி ஆவணங்கள் ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

மிஷ்கினுக்கு ஷாக் கொடுத்த மணிரத்னம்...!!

Published on 20/09/2020 | Edited on 20/09/2020
 Mani Ratnam gave a sock to Mishkin ... !!

 

இயக்குனர் பாலாவின் தயாரிப்பில், இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்து வரவேற்பை பெற்ற திரைப்படம் 'பிசாசு'. இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், இசையமைப்பாளர் இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா இசையமைப்பில் பிசாசு 2 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

அதேபோல் இன்று இயக்குனர் மிஸ்கினின் பிறந்தநாளும் கூட, இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் பெரிய பார்ட்டி ஏற்பாடு செய்து இயக்குனர் மிஷ்கினுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார். இந்த விருந்தில் தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்கள் பங்கெடுத்துள்ளனர். இந்த விருந்தை இயக்குனர் மணிரத்னம் முன்னின்று வழங்க, இயக்குனர்கள் ஷங்கர், கவுதம் வாசுதேவ் மேனன், சசி, பாலாஜி சக்திவேல், லிங்குசாமி என முக்கிய இயக்குனர்களும் கலந்து கொண்டனர்.

 

 Mani Ratnam gave a sock to Mishkin ... !!


தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இயக்குனர் மிஷ்கினின் பிறந்தநாளைக் கொண்டாடி இருக்கும் நிலையில், இந்த சந்திப்பில் தமிழ் சினிமாவின் நகர்வுகள், முக்கிய நிலைகள் குறித்து பேசப்படாமலா இருந்திருக்கும் என்கிறது கோலிவுட் வட்டாரம். 

 

Next Story

துலாபாரத்தின் போது தராசு அறுந்து விழுந்ததில் காங்கிரஸ் எம்.பியின் மண்டை உடைந்தது

Published on 16/04/2019 | Edited on 16/04/2019

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் எம்பி ஆக  இருப்பவா் சசிதரூா். இவா் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மத்திய மந்திாியாகவும் இருந்துள்ளாா். தற்போது திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராகவும் களத்தில் உள்ளாா். 

         

இந்த நிலையில் நேற்று சசிதரூா் திருவனந்தபுரம் வழுதக்காடு பகுதியில் தோ்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டியிருந்ததாா். அப்போது அந்த பகுதியில் உள்ள காந்தாாி தேவி கோவிலில் காங்கிரஸ் பிரமுகா் ஒருவா் சசிதரூாின் எடைக்கு எடை வாழைப்பழம் துலாபாரம் மூலம் கொடுப்பதாக நோ்த்தி கடன் போட்டியிருந்தாா்.  

         

mp

 

அதன் படி இன்று அந்த  பகுதியில் பிரச்சாரத்துக்கு வந்த சசிதரூரை  அழைத்து கோவிலுக்கு சென்றனா். பின்னா் எடைக்கு எடை வாழைப்பழம் கொடுப்பதற்காக சசி தரூரை தராசில் உட்கார வைத்தனா். தராசின் ஓரு பக்கத்தில் வாழை பழங்களை குலையாக அடுக்கி வைத்தனா். அந்த நேரத்தில் இருபக்கம் எடையுடன் தொங்கி கொண்டியிருந்த தராசு திடீரென்று அறுந்து சசிதரூாின் தலையில் விழுந்தது. இதில் சசி தரூாின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

              

mp

 

இதனால் மயக்கமடைந்த அவரை உடனடியாக அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் கொண்டு சோ்த்தனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.