வேலுமணி, வீரமணி வீடுகளில் நடத்திய ரெய்டுகளைப் போல தகவல் லீக் ஆகிவிடாமல், விஜயபாஸ்கர் விவகாரத்தில் மிகவும் கவன மாகவும், தெளிவாகவும் காய் நகர்த்தியிருக் கிறார்கள் லஞ்ச ஒழிப்புத்துறையினர். அதிலும் விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு இயக்குநர் பரமசிவன், "கந்தசாமி' படத்தில் வரும் விக்ரமைப் போல சர்ப்ரைஸ் சோதனை செய்து அதிரடி காட்டியிருக்கிறார்.

இந்தமுறை சோதனை செய்வ தில் எந்தவித முன்னறிவிப்பும் இருந்து விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், தங்கள் டி.ஜி.பி. கந்தசாமியின் திட்டத்தை வெற்றிகர மாக செயல்படுத்தியுள்ளனர். நுண்ண றிவுப் பிரிவுக்குக்கூட தகவல் தராமல் நடத்தப்பட்ட இந்த சோதனைக்கு 12 மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, யாருடைய கவனத்தையும் ஈர்க்காமலிருக்க, நகரப் பகுதியில் அல்லாமல் புறநகர்ப் பகுதியில் தங்கவைத்து, திட்டமிட்டபடி கிட்டத்தட்ட 50 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனையைத் தொடங்கியிருக்கின்றனர்.

vv

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் இராமச்சந்திர நகர் அடுக்குமாடி குடியிருப்பில் விஜயபாஸ்கரின் அண்ணன் உதயகுமாரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. மணிகண்டன், ஆய்வாளர் அருள்ஜோதி உள்ளிட்டவர்களின் தலைமையில் ஒரு குழு சோதனையைத் தொடங்கியது. அவருடைய வீட்டிலிருந்து 100 சவரன் நகை மற்றும் 1 லட்சத்து 10 ஆயிரம் பணம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisment

bb

விஜயபாஸ்கரின் உறவினரான தர்மலிங்கம் அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த நிலையில், அவருடைய வீட்டிலும் அதிகாரிகள் தங்களுடைய சோதனையை நடத்தி னார்கள். அவருடைய வீட்டிலிருந்து 105 சவரன் தங்க நகையும், 1 லட்சத்து 30 ஆயிரமும், 2 சொகுசு கார்கள், பொக்லைன் இயந்திரம், ஜே.சி.பி. இயந்திரம் உள்ளிட்ட வாக னங்களின் ஆவணங்கள், முக்கிய சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இலுப்பூர் பேரூராட்சி முன் னாள் தலைவர் குருராஜமன்னாரின் வீட்டில், இராமநாதபுரம் டி.எஸ்.பி. ராமசந்திரன் தலைமையில் ஒரு குழு அதிரடி சோதனை செய்தது. அவருடைய வீட்டில் இரவு 10:00 மணி வரை சோதனை நீடித்தது. இந்த சோதனையில் 185 சவரன் நகை, 7 முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருச்சி கிராப்பட்டியிலுள்ள விஜயபாஸ்கரின் உதவியாளரான குருபாபு வீட்டில் நடைபெற்ற சோதனையில், முக்கிய சொத்து விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளது. விஜயபாஸ்கரின் மற்றொரு நண்பரான எடமலைப்பட்டி புதூர் பாப்பா காலனியிலுள்ள அரவை ஆலை உரிமையாளர் சுதாகர் உள்ளிட்டவர்களின் வீட்டிலும் சோதனை நடைபெற்றுள்ளது.

Advertisment

சோதனை நடைபெற்ற வீடுகளி லிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள், ஆவணங்கள், பணம் உள்ளிட்டவை குறித்து முறையாக பதிவுசெய்து, உரிய நபர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களில் அதி களவில் அசையா சொத்துக்களின் விவரங்கள் குறித்து முக்கிய ஆவணங்கள் கிடைத் துள்ளதாகவும், பங்குதாரர்கள் குறித்த ஆவணங்கள், மதர் தெரசா அறக்கட்டளை பெயரில் இயங்கக் கூடிய கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் கிடைத்துள்ளதால் பதற்றத்தில் விஜயபாஸ்கரின் பல்ஸ் அதிகரித்துள்ளதாம். பணம், நகை ஆகியவற்றைவிட சொத்து ஆவணங்கள்தான் வழக்கில் நிற்கும் என்பதால் அதையே குறிவைத்து ரெய்டு நடத்தியது ல.ஒ.துறை.

திருச்சியில் நடைபெற்ற சோதனையில் கிடைத்த ஆவணங் களில் சிலவற்றில் முக்கிய புள்ளிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள நிலை யில்... அவர்களின் பக்கமும் லஞ்ச ஒழிப் புத் துறையினரின் கவனம் திரும்பியுள்ள தாம். கோவையில் உள்ள விஜயபாஸ்கர் மாமனார் வீட்டிலும் நிறைய சிக்கியதாம்.