பா.ஜ.க.வில் மாநிலத் தலைவர் தேர்வு மிகப்பெரிய விவாதத்துக்குரிய விசயமாக மாறியிருக்கிறது. ஆடுமலை தனது பதவியைக் காப்பாற்றிக்கொள்ள பல முயற்சிகளை எடுத்து வருகிறார். ஒட்டுமொத்தமாக கவுண்டர் சமுதாயத்தின் கூட்டத்தைக் கூட்டிய ஆடுமலை, மிக உருக்கமான கோரிக்கையை வைத்தார். அந்த வேண்டுகோளின்படி தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் எடப்பாடி ஆட்சிக் காலத் தில்தான் கவுண்டர் சமூகம் அதுவரை அடைய முடியாத மேன்மையை அடைந்தது. அதன் பிறகு நான் பா.ஜ.க. தலைவரான பிறகுதான் கவுண்டர் சமுதாயத் திற்கு மிகப்பெரிய மரி யாதை கிடைத்தது. ஆகவே சமுதாய மரியாதை காப்பாற்றப்படவேண்டுமெ னில் கவுண்டர் சமுதாயத்தில் மிகப்பெரிய ஒற்றுமை உருவாக்கப்படவேண்டும். கவுண்டர் சமுதாயத்தில் நீதித்துறையில் சதாசிவமும், தொழில் துறையில் திரிவேணி எர்த் மூவர்ஸும் மிகப்பெரிய புரட்சியை நடத்தியுள்ளனர் என கவுண்டர் இனத்தின் பெருமைகளைப் பேசிய ஆடு மலை, மறுபடியும் கவுண் டர் இனத்தைச் சேர்ந்த தன் னையே பா.ஜ.க. மாநிலத் தலைவராக்க வேண்டும் என அமித்ஷாவை சந்தித்து கோரிக்கை வைக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.
ஆடுமலையின் வேண்டுகோளை ஏற்று திரிவேணி எர்த் மூவர்ஸ், எடப்பாடியின் மகன் மிதுன், ஆடுமலை ஆகியோர் இணைந்து அமித்ஷாவை சந்திப்பது என கவுண்டர்கள் சமூகக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, எடப் பாடி மகன் மிதுன் அனுமதி இல்லாமலேயே அவரது பெயரைப் போட்டு ஒரு விண்ணப்பம் தயார்செய்து அமித்ஷாவுக்கு அனுப்பினார்கள். அமித்ஷா அந்த விண்ணப்பத்தில் எடப்பாடி யின் மகன் மிதுன் பெயர் இருப்பது பற்றி சந்தேகித்து, அதில் ஏதோ சதி இருக்கிறது எனப் புரிந்துகொண்டு அந்த விண் ணப்பத்தை எடுத்து வந்தவரிடம் கெட் அவுட் எனச்சொல்லி வெளியே அனுப்பினார்.
அ.தி.மு.க.வை எப்படியா வது வளைக்க வேண்டும் என்ற பா.ஜ.க.வின் முயற்சிகள் வேகம் பெற்றுள்ளன. அதில் ஒன்று தான், ஆடுமலைக்குப் பதிலாக வேறு ஒருவரை நியமித்தால் அ.தி.மு.க. கூட்டணி வரும் என்ற முயற்சி. அதற்குப் பதிலாகத்தான் ஆடுமலை, எடப்பாடியின் மகனை கவுண்டர் இனப் பிரதிநிதியாக அமித் ஷாவை சந்திக்கவைத்து, ‘எடப்பாடி யின் மகனே எனக்கு சப்போர்ட்டாக இருக்கிறார்’ என பொய்யான பிம்பத் தைக் காட்ட முயற்சித்தது. அதே போல் நயினார் நாகேந்திரன் அ.தி. மு.க.விலிருந்து வந்தவர். அவரைத் தலைவராக்கினால், அவர் பதவியேற்ற நான்கு தினங்களில் தமிழக பா.ஜ.க.வை முழுவதுமாக கபளீகரம் செய்து ஆடுமலை தலைமையில் இருந் ததைவிட மிகமோசமான நிலைக்கு கொண்டுசென்று விடுவார் எனக் கூறப்பட்டது. இதற்கிடையே கே.டி.ராகவன் மாநிலத் தலைவ ரானால் பா.ஜ.க. வலுப்பெறும் என் றும், நிர்மலா சீதாராமன் டெல்லியிலிருந்து தமிழக பா.ஜ.க.வை கே.டி. ராகவன் மூலமாக இயக்குவார் என்றும், தமிழக பா.ஜ.க.வின் நிஜத்தலைவர் நிர்மலா சீதாராமன் எனவும் முயன்று பார்க்கிறார்கள்.
இதற்கிடையே தேசிய பா.ஜ.க. தலைவராக ஹரியானா வின் முன்னாள் முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் நியமிக் கப்படுவார் என எதிர்பார்க்கப்படு கிறது. அவரது நியமனத்துக்குப் பிறகு தமிழக பா.ஜ.க. தலைவர் யார் என்பது முடிவு செய்யப்படும். தற்போது நியமிக் கப்பட்டுவரும் மாவட்டத் தலை வர்கள் சேர்ந்து மாநிலத் தலை வரை தேர்ந்தெடுக் கும் வழக்கமான சம்பிரதாயம் இனி கடைப்பிடிக்கப் படாது. ஏனென் றால் பெரும்பா லான மாவட்டத் தலை வர்கள் கேசவ வினாயகம் உத்த ரவுப்படி நியமிக்கப்படுபவர்கள்தான். ஆடு மலைக்கு எதிராக நிற்பவர்களையே கோவையில் பொறுப்புகளில் நியமித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் கேசவ விநாயகம். இதனால் பொன்னார், வானதி, தமிழிசை உட் பட சீனியர் தலைவர்கள் யாரையும் மாநில பா.ஜ.க. தலைவர்களாக நியமிக்கப்பட்ட முடி யாது என்கிற சூழ்நிலையும் உருவாகியிருக்கிறது. இதனால் அடுத்த ஆறு மாதத்திற்கு மாநிலத் தலைவர் தேர்தல் தள்ளிவைக்கப்பட வாய்ப்பிருக் கிறது என பா.ஜ.க. மேலிட வட்டாரங்கள் தெரி விக்கின்றன. அடுத்த 6 மாத காலத்துக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் தேர்வை தள்ளி வைத்தாலும் அந்த காலகட்டத்தில் ஆடுமலைக்கு எவ்வித முக்கியத்துவமும் அளிக்கப்படாது என்கிற செய்தி அவரை அதிரவைத்துள்ளது.
இதற்கிடையே தமிழகத்தில் கட்சித் தேர் தல் நடத்துவதற்குரிய மேலிடப்பார்வையாள ரான கிஷன் ரெட்டி தனது தமிழகப் பயணத்தை தள்ளிவைத்துள்ளார். இதன் மூலம் தமிழக விவகாரத்தை ‘அப்புறம் பார்த்துக் கொள்ள லாம்’ என்ற மனநிலையில் டெல்லி மேலிடம் உள் ளது தெளிவாகத் தெரியவே, கடும் அதிருப்தியில் உள்ளார் ஆடுமலை.
______________
இறுதிச்சுற்று!
சென்னை கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில், இந்திய துணை கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும், "இரும்பின் தொன்மை' என்ற நூலை, வியாழக்கிழமை (23-01-2025) வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். இந்த நிகழ்ச்சியில் "புதிய அறிவிப்பை வெளி யிடவிருக்கிறேன்' என்று புதன்கிழமை ஸ்டாலின் சஸ்பென்ஸ் வைக்க... என்னவாக இருக்கும் என அரசியலில் பரபரப்பு ஏற்பட் டது. யாருக்கும் அந்த சஸ்பென்ஸுக்கு விடை கிடைக்கவில்லை. இந்த நிலையில், புத்தகத்தை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், "தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் துவங்கியது என்று இந்த நிகழ்ச்சியின் வாயிலாக அறிவிக்கிறேன். இந்திய நாட்டிற்கு மட்டுமல்ல உலகிற்கே மறுபடியும் சொல்கிறேன். 5300 ஆண்டுகளுக்கு முன்பு உருக்கு இரும்பு தொழில்நுட்பம் தமிழகத்தில் அறிமுகமானது. இரும்புத் தாதுவிலிருந்து இரும்பை பிரிக்கும் தொழில்நுட்பம் தமிழகத் தில்தான் தொடங்கியது. இதற்கான ஆதாரம் இருக்கிறது'' என்பதை அறிவித்தார். இந்த அறிவிப்புதான் முதல்வர் வைத்திருந்த சஸ்பென்ஸ்!
-இளையர்