dd

(145) ஆசை நாயகிக்காக கோடிகளை கொட்டிய நடராஜன்!

ந்த கொஞ்ச வயசுப் புள்ள பேசுன பேச்சக் கேட்டு "ஜெ.' போலீஸ்காரய்ங்க அப்படியே ஷாக்காயிட்டாங்களாம். (வடிவேலு சொல்றது மாதிரி) அது, கடகடன்னு ஒப்பிக்குது. நம்ம நட்டு... அதான் நடராஜன், போலீஸுக்குள்ள ஆளவிட்டு எதையும் வாயத் தொறந்து டாதடா கண்ணுன்னு கொஞ்சுற மொழியில சொல்லியும் கேக்காம...

Advertisment

ஊர்கள்ல ஒரு பழமொழி சொல்லுவாய்ங்க... "வித்தாரக்கள்ளி விறகொடிக்கப் போனாளாம்... கத்தாழ முள்ளு கொத்தோட குத்துச்சாம்...''னு.

முன்னப் பின்ன பழக்கமில்லாம... திடீர்னு கன்னா பின்னான்னு பணம் கோடிக்கணக்கா பொழங்கி புது காரு, புது வைர நெக்லஸு, புது புடவை, போக வர பிளைட்...னு கிடைச்சதும்... தலை, கால் தெரியாம ஆடுனதுனாலதான் இப்படி ஏடாகூடமா மாட்டிக்கிச்சு பயபுள்ள.

ஜெ. வழிகாட்டல்ல, சசி ஆதரவுல போலீஸ் துருவித்... துருவி குடைய, செரினா... அதான் ஜனனி வாய்ஸ்ல...

Advertisment

""என் அப்பா பாண்டித்துரை தேவருக்கு சொந்த ஊர் போடி. டெல்லியில் மிலிட்டரியில் வேலை பார்த்தார். அம்மா ஒரு உருது முஸ்லிம். அவருக்கு சொந்த ஊர் உத்தமபாளையம். என் அப்பாவும் அம்மாவும் அப்போதே லவ் மேரேஜ் செய்துகொண்டவர்கள். ஹைஸ்கூல் படிப்பெல்லாம் எனக்கு டெல்லியில்தான். எனக்கு தமிழ், இங்கிலீஷ், உருது, ஹிந்தி என பல மொழிகள் தெரியும். எனக்கு மாடர்னாக வாழவேண்டும் என்பது விருப்பம். ஏர்ஹோஸ்டஸாக விண்ணில் பறந்தே என் வாழ்வு கழிய வேண் டும் என்று ஆசைப் பட்டேன். முடி யாமல் போய்விட் டது. மதுரை காம ராஜர் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.ஸி. கணிதம் படித் தேன். அப்போதைய கல்லூரி முதல்வர் பெரிய கருப்பன் என்மீது அதிக அக்கறை காட்டினார். அவர்மூலம் நல்ல சொஸைட்டியில் இருந்த பலரின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அப்படி கிடைத்த நட்புதான் மாமா நடராஜன் நட்பு. மாமா நட ராஜன் என்மீது அளவு கடந்த அன்பு வைத்தார். நிறைய உதவிகள் செய்தார். திருமணம் பண்ணிக் கொள்ளவும் விரும்பினார். எனக்குப் பயம். அந்தக் குடும்பத்தில் நட்பு வைத்தால் சிக்கல் வரும் என நினைத்து ஒதுங்கப் பார்த்தேன். மாமா நடராஜன்தான் எனக்கு தைரியமூட்டினார். தனக்கு ஆத்மார்த்த துணை வேண்டும் என்றும், தன் சுக துக்கங்களைப் பகிர... என் துணையாய் என்னோடு இருன்னும் வற்புறுத்தினார்.

ff

அவ்வளவு பெரிய மனிதர் இப்படி மனம் திறந்து பேசியதும் மனம் இளகிவிட்டேன். தீவிரமாக நேசிக்கவும் ஆரம்பித்தேன். மதுரை அண்ணா நகரில் இருக்கும் நவீன் பேக்கரிக்குப் பக்கத்தில் இருக்கும் எஸ்.ஆர். ப்ரௌசிங் சென்ட ருக்குப் போய் அவருடன் மணிக்கணக்கில் பேசு வேன். பக்கத்து வீட்டு சௌராஷ்டிர அம்மாவான லாவனம்மாவோட அடிக்கடி மீனாட்சியம்மன் கோயிலுக்குப் போய் ராஜா பேர்ல அர்ச்சனை யெல்லாம் பண்ணுவேன். நான் மாமா நடராஜனை ராஜான்னுதான் செல்லமாகக் கூப்பிடுவேன். அவ ரால் எங்க வசதி வாய்ப்புகள் பெருக ஆரம்பிச்சது.

ஒரு தடவை எங்க ஹவுஸ் ஓனர் குடும்பக் கல்யாணம் விருதுநகர்ல நடந்துச்சி. இதில் கலந்துக்க எங்க அம்மா 35 ஆயிரம் ரூபாய்க்கு பட்டுப்புடவை யும், 95 ஆயிரம் ரூபாய்க்கு வைர நெக்லஸும் வாங்கி னாங்க. அப்பக்கூட... ஏன் மாமா காசை இப்படி விரயம்... செஞ்சேன்னு அம்மாகிட்ட சண்டை போட்டேன். நானும் ராஜா மாமாவும் (எம்.என்.) வெளியூர் போறோம்னா அபிராமி சித்தப்பாதான் பிளைட் டிக்கெட்டெல்லாம் கொண்டுவந்து கொடுத்துட்டுப் போவார். நாங்க கோயமுத்தூர் போறப்பல்லாம் எங்களை உபசரிக்கிறது நாகராஜன்தான். அவருக்கு ஏகப்பட்ட ஒயின்ஷாப் இருக்காம். ஒரு தடவை ராஜா மாமாவோட தஞ்சாவூர் வீட்டுக்கே போனேன். அப்ப எனக்கு பயம்தான். ஆனா ராஜா மாமாவோட அம்மா என்னைப் பார்த்து கன்னத்தைக் கிள்ளி நெட்டி வழிச்சாங்க. பெரிய பெரிய தண்டட்டியெல்லாம் அவங்க காதுல போட்டுருந்தாங்க. "அவனுக்கு குழந்தையில்லை. அவன் சொத்தை யார், யாரோ திங்கறாங்க. நீ சாப்பிட்டா என்ன தப்பு. நீதான் என் இளைய மருமகள். சந்தோஷமா இரு'ன்னெல்லாம் அன்பா பேசினாங்க.

எனக்கு ராஜா மாமா ஹுண்டாய் கார் ஒண்ணு வாங்கித் தந்தார். அதுக்கு பேன்ஸி நம்பரா "டி.என்.59 டபிள்யு 9' கிடைக்க... போக்குவரத்து மந்திரி நத்தம் விஸ்வ நாதன்கிட்டேயே பேசி மாமா வாங்கித் தந்தார்'' என்றெல்லாம் நீளமாக நிறையத் தகவல்களைக் கொட்டியிருக்கிறார் ஜனனி.

33

இதுக்குப் பிறகு ஜனனியின் பண விவகாரங் களையும் சொத்து விபரங்களையும் துருவிய போலீஸ்... மதுரை அன்பு நகர் வீட்டுலயும், சென்னை நீலாங்கரையில உள்ள வீட்லயும் ரெய்டு பண்ணி பலகோடி கரன்ஸிகள கைப்பற்றியதாகத் தெரிகிறது. அதைச் சேர்க்க வேண்டியவர்ககிட்ட சேர்த்த காவல்துறை, பெயருக்கு "மதுரை வீட்டுல 30 லட்ச ரூபாயும், சென்னை வீட்டுல வெறும் 1.18 கோடி ரூபாயும் மட்டும் கைப்பற்றப்பட்டதா' கணக் குக் காட்டி ஜனனியையும் அவங்க அம்மாவையும் திருச்சி சிறையில கொண்டுபோய் அடைச்சது.

இன்னும் இருக்கு...!

தன்னச் சுத்தி பின்னப்பட்டு வரும் வலைகளை உணர்ந்த நடராஜன், ""யாரிடமும் எதையும் பேசவேண் டாம்'' என சிறையிலிருக்கும் ஜனனிக்குத் தகவல் கொடுத்துவிட் டார். இதை அப்படியே ஜனனி போலீஸில் சொன்னதாக சொல் லப்படுது...

இந்த நிலையில் 19-ந் தேதி மதியம் 3.15க்கு லோக்கல் போலீஸ் டீம் ஒன்று நடராஜன் வீட்டுக்கு வந்து ""டி.சி. ஆபீஸ் வரை வந்துவிட்டுப் போங்க'' என்றது.

இதனால கோபப்பட்ட நடராஜன், ""என்ன நெனைச்சிக்கிட்டிருக்காங்க.? எதுக்காக விசாரிக்கச் சொல்றாங்க? நான் என்ன தப்பு பண்ணிட்டேன்? என் பர்சனல் லைஃப்பில் எப்படித் தலையிடலாம்? இப்படி எனக்குத் தேவையில்லாம தொந்தரவு கொடுத்தா சசி அவங்க கூடவே இருக்கமாட் டாங்க'' என்றார் காட்டமாய்.

""எங்களுக்குத் தெரியாது. மேலிட உத்தரவு'' என போலீஸார் கறாராய்ச் சொல்ல...

டி.சி. அலுவலகத்துக்கு நடராஜன் வர...

அடுத்த சில நிமிடங்களில் போலீஸ் வீடியோ கிராபர் வர... அவர் நடராஜனின் பக்கவாட்டில் நின்று... படம்பிடிக்கத் தயாரானார். இதுவும் நட ராஜனை டென்ஷனாக்க... ""இதெல்லாம் எதுக்கு? என்னை கேள்வி கேட்க நினைக்கிறவங்க நேரா என்கிட்டயே கேட்க வேண்டியதுதானே. என்னை விசாரிச்சி... அதைப் பதிவுபண்ணி அவங்களுக்குப் படம்காட்டப் போறீங்களா... எதுக்கு இந்த டிராமாவெல்லாம்?'' என கோபமா கொந்தளிக்க...

அந்த விசாரணையில்...

கேள்வி : உங்களுக்கும் ஜனனிக்கும் திருமணம் நடந்ததா?

நடராஜன் : இது என் பர்சனல் விவகாரம். இதில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை.

கேள்வி : கொடைக்கானலில் வனத்துறைக் குச் சொந்தமான பங்களாவில் ஒருநாள் முழுதும் ஜனனியுடன் தங்கியிருந்தீர்களா?

நடராஜன் : அங்கே யார் வேண்டுமானாலும் தங்கலாம். மற்றதை விசாரிக்க யாருக்கும் உரிமை இல்லை.

கேள்வி : உங்கள் தம்பி ராமச்சந்திரன் பேரில் வாங்கிய கார் ஜனனிக்கு எப்படிப்போனது?

நடராஜன் : இந்தக் கேள்வி அனாவசியம்.

கேள்வி : ஜனனிக்கு இவ்வளவு பணம் கொடுத்திருக்கிறீர்களே, இதெல்லாம் உங்களுக்கு எப்படி வந்தது? கஞ்சா வழக்கில் ஜனனி கைது செய்யப்பட்டிருக்கிறார். இதில் மற்றும் பலர் சம்பந்தப் பட்டிருப்பதாக எஃப்.ஐ.ஆரில் இருக்கிறது. உங்களுக்கும் ஜனனிக்கும் தொடர்பு உண்டு என்று நீங்கள் சொன்னால்... நீங்கள்தான் ஜனனிக்கு கஞ்சா சப்ளை பண்ணியதாக வரும்... என்ன சொல்லுகிறீர்கள்? உங்களுக்கு சி.எம். வீட்டிலிருந்து வந்த பணம் இப்போது எங்கெங்கு இருக்கிறது.

நடராஜன் : நான் எவள் வீட்டுப் பணத்தையும் எடுத்து எவளுக்கும் தரலை. எவள் பணத்தையும் திருடி எவளுக்கும் தரலை. இதெல்லாம் என் சொந்தப் பணம். கஞ்சா பத்தியெல்லாம் வழக்குப் போட்ட உங்களுக்குத்தான் தெரியும். இந்தப் பணமெல்லாம் எப்படி எங்கிருந்து வந்ததுன்னு தெரிஞ்சுக்க விரும்புறவங்க... நேரடியா வந்து என்கிட்டயே கேட்கட்டும். கஞ்சா மிரட்டல் எல்லாம் என்கிட்ட வேண்டாம்.

கிராமத்துல இன்னொரு சொலவடை சொல்லுவாய்ங்க. "பூனை இருந்த இடத்துல தான் எலி பேரன், பேத்தி எடுத்துச்சாம்...'னு.

ஜெயலலிதா இருந்த இடத்துலதான் நடராஜன் இத்தன கோடிகளையும் லவட்டி தன் ஆசைநாயகி வீட்டுல வச்சிருந்திருக்காரு. கொள்ளையடிச்ச ரெண்டு நரிகளும்... ஒண்ணுக்கொண்ணு மோதிக்கிச்சு. நாம வெளியில இருந்து வேடிக்கை பார்த்தோம்... அம்புட்டுதான். ஒரு கூத்தியா வீட்டுல கோடி கள் குமிஞ்சு கிடக்கு...! சூப்பர் பொம்பள ஆட்சியில என்னவெல்லாம் நடந்திருக்கு பாருங்க மக்களே...!

ஜனனி, தான் கைது செய்யப்பட்டபோது நடந்த சில டார்ச்சர் அனுபவங்களை வந்த புதிதில் சிறையில் சிலரிடம் பகிர்ந்துகொண்டாராம். அதில், கைதுக்கு 2 நாட்களுக்கு முன்பே விசாரணை என்ற பெயரில் வீட்டிலேயே ஜனனிக்கு டார்ச்சர் நடந்ததாம். கமிஷனர் விஜயகுமார் அனுப்பிவைத்த 6 போலீஸ் நபர்களும் கார்டனிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 5 நபர்களும் வந்து... ""நடராஜனின் பணம் எங்கெங்கே இருக்கிறது. என்னென்ன சொத்துக்களை நடராஜன் உனக்கு வாங் கிக் கொடுத்தார்?'' என்றெல்லாம் கடுமையாக மிரட்ட... அப்போதும் ஜனனி கப்சிப்... வாயே தொறக்கலையாம்.

இந்த அதிரடி விசாரணைக் கும்பல் ஒரு கட்டத் தில் அடிக்கும் அளவிற்கு கடுமை காட்ட... மிரண்டு போன ஜனனியின் அம்மாதான் சொத்துக்கள் பற்றிய டாகுமெண்டுகளையும் ஏகப்பட்ட கரன்ஸிகளையும் அவர்களிடம் ஒப்படைச்சாராம். இதன்பிறகு அவற்றை கார்டன் ஆட்கள் கார்டனுக்கு எடுத்துட்டுப் போயிட் டாங்களாம். இதைப்பற்றியெல்லாம் விரிவாகச் சொன்ன ஜனனி...

""இதுக்கெல்லாம் காரணம் எங்க மாமாதான்னு... அவரு பெயரை நான் நீதிபதியம்மாவிடம் சொன்ன போது அவர் அதிர்ச்சியடைந்தார். போலீஸ்தான் அவர் பெயரையெல்லாம் சொல்லாதே என மிரட்டியது'' என்றாராம். ஜெயிலுக்கு வந்த புதிதில் அப்செட்டாக காட்சிதந்த ஜனனி, இப்போது ரொம்பவும் உற்சாகத்துடனேயே காட்சி தருகிறாராம்.

ஜனனியை போலீஸ் தரப்பிலிருந்து சிலர் சந்திச்சு ""நீ நடராஜனை விட்டு விலகி எங்காவது கண் காணாத இடத்துக்குப் போயிடணும். நடராஜன் மூலம் பெற்ற பணத்தையும் சொத்துக்களையும் திரும்ப ஒப்படைச்சிட ணும். இதையெல்லாம் நீ செய்யத் தயாரா இருந்தா... உன்னை எந்தச் சிக்கலும் இல்லாம வெளில அனுப்பச் சொல்லிட்டாங்க சின்ன மேடம். நீ என்ன சொல்றே?'' என்று கேட்க...

அதற்கு ஜனனி... ""நான் இந்த அளவிற்கு வசதியா வாழ மாமாதான் காரணமா இருந்தார். அவர் என்ன சொல்றாரோ அதை மட்டும்தான் கேட்பேன். வேற யாரோட மிரட்டலுக்கும் நான் பயப்படமாட்டேன். நான் மாமாவை முழுதா நம்புறேன். அவர் என்னை கட்டாயம் மீட்டு... நிம்மதியா வச்சுக்குவார்'' என ரொம்பவும் துணிச்சலாவே சொல்லிவிட்டாராம் ஜனனி.

வாழ்க சக்களத்தி...! வளர்க சக்களத்திகள் புகழ்...!

(புழுதி பறக்கும்)