புதுச்சேரியில் கட்சித் தலைவராக நமச்சிவாயமும், ஆட்சித் தலைவராக நாராயணசாமியும் இருப்பதால் இருவருக்கும் முரண் பாடு முற்றிக்கொண்டே போகிறது. சமரச முயற்சி பலனளிக்குமா என்ற கேள்வி புதுவை அர சியலை சுற்றி வருகிறது.

barரொம்ப நாட்களாகவே கட்சிக்கும் ஆட்சிக்கும் தானே தலைவராக வேண்டும் என்று நாரா யணசாமி முயற்சிக்கிறார். கட்சித்தலைமையும் அதற்கான முயற்சியில் ஈடுபட் டது. மக்களவைத் தேர்தலைக் காட்டி தள்ளிப் போட்ட தலைமை, ராகுல் விலகிய நெருக்கடியால் அதைக் கைவிட்டது. இப்போது சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் மீண்டும் அந்த பிரச் சனையை நாராயணசாமி கையில் எடுத்திருக்கிறார்.

பா.ஜ.க.வின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கருத் தறியும் கூட்டத்தை சஞ்சய் தத் நடத்தினார். கடந்த ஜூலை 31 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் புதுவை எம்.எல்.ஏ.க்களில் சிலர், ‘அமைச்சர்கள் தங்களுக்கு ஏதும் செய்ய வில்லை என்றும் -குறிப் பாக மாநில தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச் சிவாயம் எதுவுமே கண்டுகொள்ளவில்லை என்று கூறினார்கள். அவர்கள் தலைவரை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

இதையடுத்து நமச்சிவாயம் தனது அதிருப்தியை வெளிப் படுத்தத் தொடங்கினார். ஆகஸ்ட் 1ஆம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தை புறக்கணித் தார். அடுத்து 4ஆம் தேதி நடந்த புதிய கல் விக் கொள்கை தொடர் பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டிய அவர், அதிலும் பங்கேற்காமல் தவிர்த்தார்.

Advertisment

இந்த சூழ்நிலையில் கடந்த வாரம் டெல்லி யில் முகாமிட்ட முதல் வர் நாராயணசாமியும், அமைச்சர் கந்தசாமியும் மேலிட தலைவர்களை சந்தித்து நமச்சிவாயத் தின் செயல்பாடுகள் தொடர்பாக குற்றச் சாட்டுகளை முன்வைத்து "காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டும்' என வலியுறுத்தியுள்ளனர். மேலும், சபாநாயகர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏவை சமா தானப்படுத்த மாநில காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கலாம் எனவும், இல்லையேல் ஏ.வி.சுப்ரமணியன், வல்சராஜ் இவர்களில் யாரையாவது தலை வராக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.

அவர்களுக்கு போட்டியாக அமைச் சர் நமச்சிவாயம் புதுச்சேரி பொறுப் பாளர்களான சஞ்சய் தத்தையும், முகுல்வாஸ் னிக்கையும் சந்தித்து முதல்வர் நாராயண சாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை பட்டியலிட்டார். "2015-ல் கட்சி தலை வராக பொறுப்பேற்ற உடன் 2016 சட்டசபை தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியை அகற்றினேன். ஆட்சி அமைந்தவுடன் நிய மன எம்.எல்.ஏ.க்களை பரிந்துரைக்கவும், வலியுறுத்தினேன். கட்சிக்காக உழைத்த 25க்கு மேற்பட் டோருக்கு வாரியத் தலைவர் பதவி வழங்க பரிந்துரை செய்தேன். எதையுமே முதல்வர் செய்யவில்லை. 3 ஆண்டுகள் பதவியில் இருந்தும் இதுவரை எதுவும் செய்யவில்லை. கட்சிக்காக உழைத்தவர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். அமைச்சரவையை மாற்றவேண்டும்' என்று கூறியிருக்கிறார். எல்லாவற் றையும் கேட்ட தலைவர்கள் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் போய் வேலையைப் பாருங்கள்' என்று அனுப்பிவிட்டார்கள்.

dadf

Advertisment

இரு தலைவர்களுக்கிடையான முரண்பாடுகள் முட்டி மோதல் வெடிக்கும் சூழல் ஏற்பட்டதால் சமரசம் ஏற்படுத்தும் நோக்கில் மேலிடப் பார்வையாளர் சஞ்சய் தத்தின் பிறந்த நாள் விருந்து என்ற பெயரில் 08-08-2019 அன்று அக்கார்டு ஓட்டலில் சமரச கூட்டம் ஏற்பாடானது.

இரவு 9:15 மணிக்கு எல்லோரும் கூட்ட அரங்கிற்கு செல்ல, நமச்சிவாயம் வந்த அடுத்த 3 நிமிடத்தில் நாரா யணசாமி வந்தார். ஆனால் இருவரும் ஒருவரையொருவர் கண்டுகொள்ளவே இல்லை. சஞ்சய்தத்துக்கு வலதுபுறம் முதல்வர் நாராயணசாமி அமர, இரண்டு இருக்கைகள் தள்ளி அமர்ந்த நமச்சிவாயத்தை, சஞ்சய்தத் அழைத்து தனக்கு இடப்புற இருக்கையில் அமரவைத்தார். ஆனாலும் இருவரும் இறுகிய முகத்துடன் இருந்தார்கள். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. ஊரில் இல்லாததால் அவர் பங்கேற்கவில்லை.

நாம் சில காங்கிரஸ் நிர்வாகிகளிடம் பேசினோம். ""2016 சட்டமன்றத் தேர்தலில் நமச்சிவாயத்தை முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்திய நாராயணசாமி, தேர்தலுக்கு பின்பு தனக்கு சாதகமாக காய்நகர்த்தி முதல்வரானார். அப்போதிருந்தே பனிப்போர் தொடர்கிறது. நமச்சிவாயம் மாநிலத்தின் பெரும்பான்மை (வன்னியர்) சமூகத்தை சார்ந்தவர் என்பதால் தனக்கு சமமாக ஆளுமை செலுத்துவதை நாராயணசாமியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மத்திய காங்கிரஸ் அரசுகளில் முக்கியமான பதவிகளில் இருந்தவர். டெல்லியின் அதிகார மையங்களில் செல்வாக்குடையவர். புதுச்சேரி காங்கிரஸ் என்றால் தான் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும் என நினைக்கிறார். மீண்டும் முதல்வராக வேண்டும் என்றால் கட்சி தலைவரை மாற்றியாக வேண்டும் என தீவிரம் காட்டுகிறார்'' என்கின்றனர்

-சுந்தரபாண்டியன்