திருச்சி மத்திய மண்டலத்தில் டி.ஐ.ஜி. யாகப் பாலகிருஷ்ணன் பொறுப்பேற்றவுடன் போலீஸ்காரர்கள்மீது வரும் புகார்களைத் தீவிரமாக விசாரித்து அதிரடியாக நடவடிக்கை எடுத்து வருகிறார். இவரின் அதிரடியான நடவடிக்கையைப் பார்த்து பொதுமக்களும் நம்பிக்கையுடன் டி.ஐ.ஜியிடம் புகார்களைக் கொடுத்த வண்ணம் இருக்கிறார்கள்.

போலீஸ்காரர்கள் மீது வரும் புகாரைவிட, திருச்சி புறநகர் மாவட்டத்தில் பணிபுரியும் உளவு போலீஸ் மீதுதான் பொதுமக்கள் அதிகம் புகார்கள் கொடுக்கிறார்கள்.

pp

திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக ஜியாவுல் ஹக் பொறுப்பேற்றவுடன், புதிய எஸ்.பி. இன்ஸ்பெக்டராகச் சந்தோஷ்குமார் பொறுப் பேற்கிறார். எஸ்.பி.க்கு அடுத்து கூடுதல் எஸ்.பி.யாக குணசேகரன் நியமிக்கப்படுகிறார். இவர் ஏற்கனவே மணப்பாறை பகுதியில் டி.எஸ்.பி.யாக இருக்கும்போது, அப்போதைய டி.ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலிடம் சண்டை போட்டுக்கொண்டு பழனி பக்கம் டிரான்ஸ்பர் வாங்கிச் சென்றவர் என்பதால், திருச்சி மாவட்ட போலீஸ் எல்லாம் இவருக்கு நன்றாக அறிமுகத்தில் இருக்கிறார்கள் என்பதால் அவர்களைக் கவனித்துக்கொள்ளும் பொறுப் பைக் கூடுதல் எஸ்.பி. குணசேகரனிடம் ஒப்படைக்கிறார். ஆனால் கூடுதல் எஸ்.பியோ, எஸ்.பி. இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமாரை தவிர்த்து விட்டு அதே அலுவலகத்தில் மாவட்ட நில அபகரிப்புப் பிரிவு இன்ஸ்பெக்ட ராக இருக்கும் கமலவேணி என்பவரிடமே தகவல்களைச் சொல்லி மேற்பார்வை பார்க் கிறார்.

Advertisment

இது சம்மந்தமான புகார் டி.ஐ.ஜி. வரை செல்கிறது. உடனே கோபமான டி.ஐ.ஜி., எஸ்.பி.யிடம் இதுகுறித்துப் பேசுகிறார். உயர் அதிகாரிகள் இடையே நடக்கும் பிரச்சனையில் எங்கே தனக்கு எதுவும் பிரச்சனை ஆகிடுமோ எனப் பயந்துபோன கமலவேணி, புதுக்கோட் டைக்கு டிரான்ஸ்பர் வாங்கிச் சென்று விடுகிறார்.

கமலவேணி டிரான்ஸ்பர் ஆகி சென்றவுடன் திருச்சி மாவட்ட எஸ்.பி., ஏட்டுகள் அனைவரும் நேரடியாகக் கூடுதல் எஸ்.பி குணசேகரனிடம் ரிப்போர்ட் செய்கிறார்கள். அதனால் வழக்கம் போல் எஸ்.பி. இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் டம்மியாகவே இருக்கிறார்.

இந்த நிலையில்தான் டி.ஐ.ஜி.யிடம் திருச்சி மாவட்டத்தில் உள்ள எஸ்.பி., ஏட்டுகள் பற்றித் தொடர்ந்து புகார் மனுக்கள் வர ஆரம்பித் திருக்கிறது.

Advertisment

வரும் புகார்களை நேர்மையான முறையில் விசாரித்து டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன் நடவடிக்கை எடுத்தால், எஸ்.பி. ஜியாவுல் ஹக் கவனத்திற்கே தெரியாமல் கூடுதல் எஸ்.பி குணசேகரன், அவர் களுக்குக் கொடுத்த தண்டனையிலிருந்து அடுத்தச் சில நாட்களில் விடுவித்து மீண்டும் பழைய இடத்திற்கே மாற்றிவிடுகிறார். இதனால், தவறு செய்யும் அதிகாரிகள் மீது புகார் கொடுக்கவே மக்கள் பயப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் இப்படி உயர் அதிகாரிகள் இடையே நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் தெரிந்த மாவட்ட உளவுப்பிரிவு டி.எஸ்.பி சுதர்ஷன், இன்ஸ்பெக்டர் கோமதி ஆகியோர் நமக்கு ஏன் வம்பு? என்று கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். இதுகுறித்து, நக்கீரன் இணையத்தில் விரிவான செய்தி வெளியான நிலையில், ஏ.டி.எஸ்.பி. குணசேகரன் நாமக்கல்லிற்கு மாற்றப்பட்டார்.

-ஜெ.டி.ஆர்.