தமிழகத்தில் இன்றைய நிலையில் சுமார் 2 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையிலும், கோவிட் தடுப்பு மையங்களிலும் சிகிச்சைபெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்கள் முதல், ரிசல்ட்டுக்காக காத்திருப்பவர்கள் வரை அனைவருக்கும் அந்தந்த மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் உணவுகளை வழங்கிவருகின்றன. அப்படி வழங்கப்படும் உணவில் கொள்ளையடிக் கிறார்கள் என்கிற குற்றச் சாட்டு எழுந்துள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/foodcontroversy.jpg)
இதுபற்றி நம்மிடம் பேசிய தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த இருவர், கொரோனா மருத்துவப் பேரிடர் என்பதால் பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர், வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து பணி களை செய்துவருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளை வேலூர் பென்டிலேண்ட் மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி மருத் துவமனை, குடியாத்தம் அரசு மருத்துவமனைகளில் தங்கவைத்து சிகிச்சையளித் தார்கள். இவர்களுக்கான உணவு வழங்கும் வேலையை தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க மாநில தலைவர் வெங்கடசுப்பு வுக்கு மட்டுமே வழங்கி னார் கலெக்டர் சண்முகசுந்தரம். பிற மாநில தொழி லாளர்களுக்கு நாளொன்றுக்கு உணவுச் செலவாக 90 ரூபாயும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், சிசிச்சைபெறு பவர்களுக்கு 420 வரையிலும், மருத் துவர்களுக்கு 500 ரூபாய் என்கிற விலை யில் ஆயிரக்கணக்கான பொட்டலங் களை வழங்கினார். சில ஹோட்டல் உரிமையாளர்கள் அவரிடம், எங்களுக்கு ஆர்டர் தாங்க நாங்களும் உணவு சப்ளை செய்கிறோம் எனக் கேட்ட போது தட்டிக்கழித்தார்.
அதிகாரிகளையும், ஆளும்கட்சி அமைச்சர்களையும் கையில் போட்டுக் கொண்டு, தான் மட்டுமே சப்ளை செய்வேன் எனச் சொல்லி இதுவரை உணவு சப்ளைக்கென 3 கோடி ரூபாய் வேலூர் மாவட்ட நிர்வாகத்திடமிருந்து பணம்பெற்றுள்ளார் எனக் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து நாம் தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க மாநில தலைவர் வெங்கடசுப்புவிடம் கேட்டபோது, ""ஆரம்பத்தில் யாரும் உணவு சப்ளை செய்ய முன்வரவில்லை. நான் முன் சென்று உணவு வழங்கினேன். இப்போது வேலூர் மாவட்டத்தில் மேலும் இரண்டு ஹோட்டல்கள் உணவு சப்ளை செய்கின்றன. நான் யாரையும் தடுக்கவில்லை'' என்றவரிடம், அதிகமான விலைக்கு உணவுப் பொருட்கள் வழங்கியதாக குற்றம்சாட்டப்படுகிறதே எனக் கேட்டதும், ""அரசாங்கம் என்ன விலை பிக்ஸ் செய்திருக்குங்கறதை நெட்லயே போட்டுருக்கு, அதுலபோய் பார்த்துக்குங்க, நான் உங்களுக்கு பதில் சொல்லவேண்டிய அவசிய மில்லை''’ என திடீரென கோபமாக பேசினார்.
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சண்முகசுந்திரத்திடம் நாம் கேட்டபோது, ""உணவு தரமாக இல்லை, அளவு சரியாக இல்லை என புகார் சொன்னால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கிறேன், மற்றபடி வேறு காரணங்களை கூறி அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கமுடியாது. கொரோனா உணவுத் தொகையில் தவறு எதுவும் நடக்கவில்லை'' என்றார் உறுதியான குரலில்.
தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் வெங்கடசுப்பு சொல்வதுபோல், அரசு சார்பில் உணவுக் கட்டணம் ஏதாவது வெளியிடப் பட்டுள்ளதா என விசாரித்தபோது, இல்லை என்றே தெரியவந்தது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு நாளைக்கு உணவு கட்டணமாக 250 ரூபாய் வரை விலைநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவே மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு 400 ரூபாய்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் வருவாய்த் துறை அதிகாரிகள், தனிமை முகாமில் வைத்திருப்பவர்களுக்கு உணவு சமைத்து வழங்குகிறார் கள். அதைத் தாண்டி அரசிடம் ஒரு நாளைக்கு 250 ரூபாய் தேவை என கடிதம் எழுதியுள் ளோம் என்றார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் ஹோட்டல்களுக்கு அதிகபட்சம் 350 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப் பட்டு உணவு வாங்கப்படுகிறது என்கிறார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/foodcontroversy2.jpg)
உலக சுகாதார நிறுவனம், இந்திய சுகாதார அமைப்பு போன்றவை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு சத்தான உணவுகள் என்னென்ன வழங்கவேண்டு மென ஒரு பட்டியல் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியல்படி தொடக்கத்தில் உணவு வழங்கினார்கள். பின்னர் அதில் மாற்றங்கள் நடந்து தற்போது பல மருத்துமனைகளில் வாயில் வைக்கமுடியாத அளவுக்கு உணவுகள் தரப்படு கின்றன என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிகாரிகள் இதில் வாங்கும் கமிஷனே அதற்குக் காரணம் என்றும் பேச்செழுந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆரம்பத்தில் ராணியார் மருத்துவமனை மற்றும், டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி நினைவு மருத்துவமனைகளில் முதலில் தரமான உணவு வழங்கப்பட்டது. ஆயிரக் கணக்கானோர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டபோது உணவு தரமில்லை என்றும் முன்பு வழங்கப்பட்டதில் பாதிஅளவுகூட உணவு, குடிநீர் வழங்கப்படுவதில்லை என்றும் சிகிச்சையில் இருந்தவர்கள் தகவல் கொடுத்தனர். இதை அமைச்சர் விஜயபாஸ்கர் கவனத்திற்கு கொண்டுசென்றோம். “அனைத்துப் பிரச்சனைகளும் நிவர்த்தி செய்யப்படும். தவறு நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
மாவட்டத்தில் டாக்டர்களுக்கு சாப்பாட்டுக்கு ஒரு நாளைக்கு ரூ.1450 வரை பில் எழுதுறாங்க ஆனால் ரூ.500க்கு தான் உணவு கிடைக்கிறது. நாங்க அதிகமாக கேட்கவில்லை உண்மையான செலவுத்தொகையைக் காட்டினால் மற்றவர்களுக்கும் நிறைய செலவுசெய்யலாம். அதாவது இதுவரை உணவுக்காக மட்டும் ஒதுக்கிய தொகையில் இன்னும் பல மாதங்களுக்கு உணவுக்காக செலவு செய்திருக்கலாம் என்கிறார்கள் நேர்மையான மருத்துவர்கள்.
உங்க ஊழல் கையை சோத்துலயுமா வைப்பீங்க எனக் குமுறுகிறார்கள் நோயாளிகள்.
-து.ராஜா, இரா.பகத்சிங்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-08/foodcontroversy-t.jpg)