pp

விளிம்புநிலை சமூகத்தின் உரிமைக்குரல்! தமிழ்நாடு நியூ கபடி அசோசியேசன் மதுரை மாவட்ட தலைவர்

அதிகார வர்க்கத்தால் ஒடுக்கப்பட்டவர்களுக்கான விளிம்பு நிலை சமூகத்தின் உரிமைக்குரலாக நக்கீரன் எப்போதுமே இருந்து வருகிறது.

2019, ஜூன் 05-07 இதழ் :

Advertisment

காகித ஓடம்போல் இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். பதவிச் சண்டையில் மூழ்கும் அ.தி.மு.க. பற்றி அட்டைப் படத்திலேயே நக்கீரன் ஆசிரியரின் கைவண்ணம், தமிழகத்தின் நிலையற்ற ஆட்சியை தோலுரித்துக் காட்டியது. தாய்மொழியைப் பாதுகாக்க அண்டை மாநிலங்கள் எல்லாம் சட்டம் இயற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில்... தமிழகம் இன்னும் இந்தி திணிப்பிற்கு எதிராக போர்க்குணத்தோடு இருப்பதை வர லாற்றுச் சான்றுகளோடு தமது கட்டுரையில் படம் பிடித்து காண்பித்திருந்தார் ஆதனூர் சோழன்.

யாரையெல்லாம் சரிக்கட்ட வேண்டும் எனத் தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமி விழி பிதுங்கி நிற்பதையும், பதவிச் சண்டையில் யாரை திருப்திப்படுத்துவது எனத் தெரியாமல் அல்லாடு கின்ற நிலையையும் அமர்க்களப்படுத்தி இருந்தது நக்கீரன்.

"தலித் எனச் சொல்வதை அவர்களின் உரிமையாக பார்க்கிறேன். மற்றவர்களை நான் புறக்கணித்துவிடப் போவதில்லை' என்கிற திருமாவளவனின் எதார்த்தமான பேட்டி நச் என இருந்தது. தி.மு.க.வைப் போல விட்டுக்கொடுத்து வெற்றியை பறிக்கும் பார்முலா இல்லாததால் இடதுசாரிகள் இந்திய மண்ணில் அடைந்த தோல்வி குறித்த ஜீவா தங்கவேலின் கட்டுரை ஆழமாக இருந்தது.

Advertisment

சர்ச்சைகளுக்கு இடையே மாயமான சபரி மலை நகைகள் பற்றி எடுத் துரைத்திருந்த நக்கீரன், "மது ரைக்குள் மீண்டும் நித்தி ஊடுருவலா?' என்ற ரேஞ்சில் சான்று களோடு மீண்டும் சில சாமி யார்களின் முக மூடியைக் கிழித் திருப்பதற்குச் சொல் லலாம் ஒரு சபாஷ். மும்மொழிக் கொள்கை பிரச் சினையால் ஏற்கனவே தமிழகம் தவித்துக் கொண்டிருக்க... மின்வாரிய உதவிப் பொறி யாளர்கள் பணியில் சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் தமிழக அரசின் கையாலாகாத் தனத்தை எடுத்துக் காட்டியது.

________________

வாசகர் கடிதங்கள்!

தந்தைக்கு படையலிட்ட மகன்!

"மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி' எனும் குறளின் குரலாய் வெளிப்பட்டு, கலைஞர் இல்லாத பிறந்தநாளில் தனது வெற்றியை தந்தைக்கு படையலிட்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

-எஸ்.அரிச்சந்திரன், பெரம்பலூர்.

கட்சியும் கறுப்பும்!

கோவை சந்தோஷ்குமாரின் உயிரைப் பறித்ததற்கு கட்சிப்பூசலும் ஒரு காரணம் தான். கந்துவட்டி, கட்டப் பஞ்சாயத்து செய்கிறவரின் நட்பைத் துண்டித்துக் கொண்டவருக்கு கறுப்புப் பண தொடர்பு இருக்கிறதென்றால் ஒருவகையில் அவரும் சந்தேகக் குற்றவாளியே. இருப்பினும், பெற்ற தாயின் கண்முன்னே மகன் உயிர் சிதைக்கப்பட்டிருப்பது காலத்துக்குமான பிரசவக் கதறல்.

-கே.மணி, ஆத்தூர்.