டிஜிட்டல் எழுத்துலகில் குறிப்பிட்ட சில தினசரிகளுக்கு அடுத்து அதிக வாசகர்களைக் கொண்ட வாரமிரு முறையான நக்கீரன் ஒவ்வொரு வாசகனையும், செய்திகளை படித் தோம் மறந்தோம் என்பதோடு விடாமல் அவனையும் ஒரு சம்ப வத்தை புலனாய்வு செய்கிற விதத்தில் மாற்றியுள்ளது.

ஒரு கட்சியின் நிர்வாகியாக வும் சமூக ஆர்வலராகவும் இருக்கும் நான், தினமும் பொது இடங்களில் பல சம்பவங்களைப் பார்க்கிறேன். அந்த சம்பவங்கள் ஏன், எதற்கு, எப்படி, எதனால் நடந்தது... நடக்கிறது என எனக்குள்ளே ஒரு புலனாய்வு செய்து சம்பவத்தின் உண்மைத் தன்மையை தெரிந்துகொள்ளும் அறிவை ஊட்டியது நக்கீரனின் 15 ஆண்டுகால வாசிப்புதான். மேலும் ஒரு குற்றச்சம்பவம் நடக்கும்போது போலீஸ் அந்தக் குற்றத்தை விசா ரணை செய்து வெளிக்கொண்டு வரு வதற்குள் நக்கீரன் தனது புலனாய்வு மூலம் அதை வெளிக்கொண்டு வரு கிறது, இது நக்கீரனின் தனித்தன்மை.

குறிப்பிட்ட ஒரு கட்சியின் ஆதரவு பத்திரிகை என்று ஒருதரப்பு பச்சை குத்துகிறது. ஆனால் நக்கீர னைத் தொடர்ந்து வாசிப்பவர்களுக் குத்தான் தெரியும், குறிப்பிட்ட அந் தக் கட்சியும் ஆட்சிக் கட்டிலில் இருக்கும்போது போட்ட ஆட்டத் தையும் நக்கீரன் விட்டு வைக்கவில்லை யென்று. நக்கீரன் ஒரு கட்சிக்கோ ஒரு மதத்துக்கோ ஒரு ஜாதிக்கோ கட்டுப்படாமல் அனை வருக்குமான குரலாக ஒலிப்பதில் உறுதியாக உள்ளது.

Advertisment

2020, பிப். 12-14 இதழ்

அட்டைப்படத்தின் 2-ம் பக்க செய்தியில் ரெய்டு என்ற பா.ஜ.க.வின் மறைமுக ஆப்பு பிரமாதம். 10-ம் பக்கத்தில் போதை உலகத்தில் மறைந்து கிடக்கும் செக்ஸ் உலகத்தை அழகாக காட்டியிருக்கிறது. 31-ம் பக்கத்தில் தமிழனுக்கு அடிப்படை உரிமையை மறுக்கும் மத்திய அரசு செய்தி அதிர்ச்சியாக உள்ளது.

___________________

Advertisment

வாசகர் கடிதங்கள்!

உயிர் பாதுகாப்பு!

உயிரைப் பறிக்கும் செட்டிநாடு சிமெண்ட் ஆலை மீது அரசு உடனடி கவனம் பதிக்க வேண்டும். விதிகளை மீறி அரசு புறம்போக்கு நிலம், ஏரி, குளங்கள், ஓடைகளில் சுரங்கம் தோண்டுபவர்களை சட்டத்துக்கு முன் நிறுத்தி, அப்பகுதி மக்களின் உயிர் பாது காப்புக்கு அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும்.

-கே.மணிவேல், கடலூர்.

ஒருவர் வாய்த்தால்!

"சிக்னல்' செய்தி கள் பல உண்மைகளை வெளிச்சப்படுத்துகின் றன. எண்ணூரை மாற்றிக் காட்டிய ஏ.சி.உக்கிரபாண்டி மாதிரி ஒவ்வொரு பகுதியிலும் ஒருவர் வாய்த்தால் குற்றங் குறைகள் மட்டுப் படும்தானே!

-ஆர்.பி.திவாகர், சென்னை-18.