நுட்பமான நுண்ணறிவு! காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு முன்னாள் தலைமைக் காவலர் திருச்சி.
நக்கீரன் இதழின் தீவிரமான ரசிகை நான். 1996-இல் அரியலூர் மாவட்டம் தா.பழூர் முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் மாசிலாமணி மருத்துவமனையில் பணிபுரிந்தேன். டாக்டர், நக்கீரனின் தீவிர வாசிப்பாளர். அவர் படித்து முடிக்கும்வரை பார்த் துக்கொண்டே இருப்பேன். என்னிடம் கொடுத்து படிக்கச் சொல்வார். சிலநேரம் அவர் படித்துவிட்டதாக நினைத்து, நான் எடுத்துவந்து படித்ததற்காக திட்டு வாங்கியிருக் கிறேன். ஆகவே இருவருமே "நக்கீரன்' ரசிகர்கள்.
நக்கீரன் இதழை நான் ஒரு போராளியாகவே பார்க் கிறேன். அக்கிரமங்களை எதிர்த்துப் போராடும் ஆசிரியர் நக்கீரன்கோபால் அவர்களின் தைரியமும் துணிச்சலும் கண்டு வியந்திருக்கிறேன். வீரப்பன் விவகாரத்தில் உயிரை பணயம் வைத்து காட்டுக்குப் போனதன் மூலம் காவல்துறை அதிகாரிகளைவிட மிகநுட்பமான நுண்ணறிவுத் திறன்கொண் டவர் நக்கீரன்கோபால் என்றால் அது மிகையாகாது. பெண்களின் நீதிக்காக தொடர்ந்து குரல் எழுப்பிக்கொண்டு வருகிறது "நக்கீரன்'. ஜெயலலிதாவால் "நக்கீரன்' படாதபாடு பட்டதை நான் அறிவேன்; ஆனால் அவர் இறந்தபோது "இறப்பில் மர்மம் இருக்கிறது' என்று குரல் கொடுத்தது.
2019, செப். 25-27 இதழ்:
சுபஸ்ரீ பேனர் விவகாரத்தில் நடிகர் விஜய் பேசியது சரியே! கொலையாளிகளை அரசு காப்பாற்றுகிறது என்று உண்மையை போட்டு உடைத்திருக்கிறார்கள் செய்தியாளர் கள் தாமோதரன் பிரகாஷ் மற்றும் அரவிந்த் ஆகியோர். இடைத்தேர்தல் பற்றி செய்தியாளர் இளையசெல்வன் அருமையான தகவல் தந்துள்ளார். கீழடி தரும் ஆதாரங்களுடன் விளக்கியிருக் கிறார் செய்தியாளர் மதிவாணன், வாழ்த்துகள். கலைஞானம் அவர்களின் வரிகள், நிகழ்வுகளை கண்முன் நிறுத்திய அழகிய காட்சிப் படலம்.
ரயில்வே சதியை மிகஅழகாக புள்ளிவிபரத்துடன் அம்பலப்படுத்தி யிருக்கிறார் ஜெ.டி.ஆர். உண்மையை உரக்க கூறும் ராங்-கால் பகுதியை மிகவும் விரும்பிப் படிப்பேன்.
______________
வாசகர்கடிதங்கள்!
காந்தியும் பண்டிகையும்!
"பண்டிகைகள் மீது அக்கறை காட்டுவதில்லை' என்கிற காந்தியின் அபிப்பிராயம், அவரது அறிவின் முதிர்ச்சியைக் காட்டுகிறது. அத்துடன், பண்டிகைகள் காளானாய்ப் பூத்து வரும் தற்காலத்தில், அதற்கான கேள்வியும், மாவலியின் பதிலும் காந்தியை புரிந்து கொள்வதற்கு எல்லோருக்குமான ஒரு நல்வாய்ப்பு.
-கே.கிருத்திகா, திண்டிவனம்.
முரண்படும் உளவியல்!
"நாற்பது வயதுக்கு மேலதான் தாம்பத்ய ஆசை இன்னும் அதிகரிக்கிறது' என்கிற நடிகை வித்யாபாலனின் கருத்து... உடல் குறித்த வழக்கமான உளவியல் பார்வையை முரண்படச் செய்கிறது. எனினும், தாம்பத்யம் குறித்த அவரின் பேச்சைக் கேட்டு ஒரு ரசமான சுழலுக்குள் சிக்குண்டதுபோல் மிதக்கிறார்கள் ரசிகர்கள்.
-எஸ்.குணா, வேலூர்.