pp

த்திரிகைகள் என்பது அன்றைய நிகழ்வுச் செய்திகளை அப்படியே கொடுப்பதுதான். ஆனால் நக்கீரன் அப்படி அல்ல- மறைக்கப்பட்ட, மறைக்கக்கூடிய சம்பவங்களையும் மக்கள் பிரச்சினைகளையும் தனது புலனாய்வுத் திறனால் நாட்டு மக்களுக்கு அதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதுதான் அதன் தனித்துவம்.

இதைத்தான் கடந்த 32 ஆண்டுகளாக நக்கீரன் செய்துகொண்டிருக்கிறது. இதனால்தான் என்னவோ நக்கீரனை கண்டு ஓளிந்து ஓடும் ஊழல் அரசியல்வாதிகள், ஊழல் அதிகாரிகள் இருட்டு மறைவில் பதுங்கிக்கொண்டு நக்கீரன் ஆசிரியர் மீது அதிகார துஷ்பிரயோகத்தை பாய்ச்சுகிறார்கள்.

1997-ல் நான் கல்லூரியில் படிக்கும்போது குமரி மாவட்ட அனைத்துக் கல்லூரி மாணவர் சங்க செயலாளராக இருந்த நிலையில் மாணவர்களின் பிரச்சினைகளுக்காக ஒருமுறை தொடர் உண்ணாவிரதம் நடந்தது. அப்போது உண்ணாவிரதப் பந்தலில் மாணவர்களின் வாசிப்புக்காக கையில் இருந்தது பாடப்புத்தகம் அல்ல நக்கீரன்தான். அன்றிலிருந்து நக்கீரனை வாசிக்கத் தொடங்கிய என்னை ஒரு வழக்கறிஞராக படிக்கத் தூண்டியது நக்கீரன்தான் என்று பெருமையோடு கூறுவேன்.

Advertisment

2019 ஆக. 07 09 இதழ்:

"பிளக்கப்பட்ட காஷ்மீர் அடுத்து தமிழ்நாடு?' அடடா கோபால் அண்ணன் கை வண்ணத்தில் உருவான அட்டைப் படம் ஆயிரம் அர்த்தங்களைச் சொல்கிறது.

"மோடியை மிஞ்சிய அமித்ஷா....' காஷ்மீர் விவகாரத்தில் மட்டுமல்ல பா.ஜ.க.விலும் அது விரைவில் நடக்கக்கூடும் என்பதற்கு இந்த டைட்டில் இப்போதே பொருத்தமாக இருக்கிறது.

Advertisment

கலைஞானம் எழுதும் கேரக்டரில் ஜுபிடர் நிறுவனம் அறிமுகப்படுத்தியதாக அண்ணா, எம்.ஜி.ஆர், கலைஞர் போன்ற மகா கலைஞர்களின் அறிமுக தகவல் பொக்கிஷமாக கிடைத்துள்ளது.

_________

வாசகர் கடிதங்கள்!

"தெறி'யில் நெறி!

கடம்பூர் ராஜுவுக்கு மிரட்டல், தமிழக பா.ஜ.க.வின் அடுத்த தலைவருக்கான வாய்ப்பில் நயினார் நாகேந்திரன், பள்ளி மாணவனிடம் அவமானப்பட்ட செங்கோட்டையன், திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமிக்குப் பாராட்டு என ஒவ்வொரு "தெறி'யும் நம் வாழ்வியலுக்கான நெறியைச் சொல்கிறது.

-அ.சபரிராஜ், விருதுநகர்.

நினைவின் கனம்!

கலைஞர் இல்லாத கோபாலபுரம்களை இழந்துவிடவில்லை. அவருக்கானவர்கள் அவருக்கானவர்களாகவே செயல்படுகிறார்கள். முத்தமிழறிஞர் நினைவுதினத்தை அவரது இல்லத்து நிலவரத்தின் வழியே பகிர்ந்துகொண்டீர்கள். எனினும் தலைவர் இல்லாத இந்த ஓராண்டு அரசியல் நிகழ்வுகளை நினைத்து நினைத்து தொண்டர்களின் உள்ளம் கனத்துதான் போகிறது.

-எஸ்.மணிஅமுதன், திருக்களம்பூர்.