முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் முந்நூறுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் நிரந்தரப் பணியாளர் களாகவும், பலர் தற்காலிகப் பணியாளர்களாகவும் பணிபுரிந்து வருகிறார்கள்.

palani

இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள இந்த பழனி ஞானதண்டாயுதபாணி திருக்கோவிலில், அலுவலக உதவியாளர்கள் 65 பேர், உப கோயில் பணிக்காக 26 பேர், பிளம்பர் வேலைக்காக 15 பேர், ஆசிரியர் பணிக்காக 16 பேர், டைப்பிஸ்ட் பணிக்காக 6 பேர் மற்றும் அர்ச்சகர், தவில், தாளம், நாதஸ்வரம், ஃபிட்டர், ஆபரேட்டர், தொழில்நுட்ப உதவியாளர்கள் உட்பட 250 காலிப் பணியிடங்கள் நிரப்பப் படும் என கோவில் இணை ஆணையரும், அறங்காவல் குழுவினரும் தினசரி பேப்பரில் விளம்பரம் கொடுத்தனர். இந்த பணியிடங்களுக்காக 3.3.2023 முதல் 7.4.2023 வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவித்ததால், ஒரு லட்சம் பேர்வரை வேலைக்காக விண்ணப்பித்தனர். அதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழனி முருகன் கோவில் கட்டுப்பாட்டி லுள்ள பழனியாண்டவர் கல்லூரியில் காலியாக உள்ள 16 பணியிடங்கள் நிரப்பப்படும் என விளம்பரம் கொடுக்கப்பட்டதைப் பார்த்து ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்தனர். ஆனால் இதுவரை விண்ணப்பித்தவர்களிடம் நேர்காணல் நடத்தி காலிப் பணியிடங்களைப் பூர்த்திசெய்ய கோவில் நிர்வாகம் ஆர்வங்காட்டாமல் மெத்தனப் போக்கையே கடைப்பிடித்து வருகிறது.

ff

Advertisment

"இந்த பழனி கோவில் வேலைக்கு விண்ணப்பித்தபோது தான் ரேசன் கடை வேலைக்கும் விண்ணப்பங்கள் போட்டனர். ரேசன் கடைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுத்துவிட்டனர், இன்னமும் பழனி கோவிலில் தான் 8 மாதங்களாக நேர்காணல் நடத்தாமலிருக்கிறார்கள். அதற்கு என்ன காரணமென்றால், காலிப்பணியிடங்கள் முன்னூறு இருக்கும். விண்ணப்பித்தவர்களோ லட்சத்துக்கு மேல். எனவே அனைவரையும் அழைத்து நேர்காணல் நடத்த சாத்தியமில்லாத தால், விண்ணப்பங்களை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு, அதனை விண்ணப்பித்தவர்கள் மறந்த பிறகு, அரசியல்வாதிகள், அறங்காவலர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டுச் சேர்ந்து, பணத்தை வாங்கிக்கொண்டு காலியிடங்களை நிரப்பு வார்கள். எனவே, படித்த, தகுதியான இளைஞர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப் பில்லை'' என சந்தேகத்தைக் கிளப்புகிறார் பழனி இந்து முன்னணியின் மாநில செயலாளர் ஜெகன்.

இது சம்பந்தமாக கோவில் இணை ஆணையரான மாரிமுத்துவிடம் கேட்டபோது, "ஒரு லட்சத்துக்கும் மேல் விண்ணப்பங்கள் வந்தி ருப்பதால் அவற்றை தொடர்ந்து கம்ப்யூட்டரில் ஏற்றி வருகிறோம். அந்த பணிகள் முடிந்த பின்னர்தான் வேலைக்காக விண்ணப்பித்தவர் களுக்கு நேர்காணல் தேதி அறிவித்து, தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, நிரந்தர பணியாளர்களாக நியமனம் செய்யப்படுவார்கள்'' என்றார் உறுதியாக.

இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப் படாமல் கிடைக்கட்டும்!

Advertisment