மிழ்க் கடவுளான முருகப்பெரு மானின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகனை தரிசிக்க தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இப்படி வரும் பக்தர்கள், பாதையில் கிரிவலம் செல்வது வழக்கம்.

palani

ஆனால் கிரிவல வீதியில் சிறுவியாபாரிகள் முதல் பெருவியாபாரிகள் வரை ஆக்கிரமித்து கடைகளை வைத்திருந்ததால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. இதனால் ஆக்கிர மிப்பை அகற்றக் கோரி மதுரை உயர்நீதிமன்றத் தில் பொதுநல வழக்கு தொடர்ந்ததன் பேரில், பாதையிலுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றக் கோரியும் அதைச் சுற்றியுள்ள வீடுகளை இடித்து அவர்களுக்கு மாற்று இடம் வழங்கக்கோரியும் மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

இதையடுத்து தனிநபர்கள் அப்பகுதிக்குள் செல்லமுடியாத அளவுக்கு கிரிவல வீதியை தேவஸ்தானம் வைத்திருக்கிறது. இதனால் இங்கு கடை வைத்திருந்த சிறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி உள்பட தி.மு.க. கவுன் சிலர்கள் அப்பகுதியிலுள்ள கடை வியாபாரி களுக்கு ஆதரவாக களத்தில் குதித்து தேவஸ் தானத்திற்கு எதிராக கடை வியாபாரி களுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

"கிரிவல வீதியைச் சுற்றியிருந்த இரண்டாயிரம் சிறு வியாபாரிகளை நீதிமன்றம் அப்புறப்படுத்தச் சொன்னதின்பேரில் தேவஸ்தானம் அப்புறப்படுத் தியது. அதுபோல் கிரிவல வீதியைச் சுற்றியிருந்த பழமைவாய்ந்த 159 வீடுகளை இடித்தனர். இந்த வீடுகளிலிருந்த பொதுமக்களுக்கு மாற்று இடம் தருகிறோம் என்று கூறி இரவோடு இரவாக காலி பண்ணச் சொல்லி வீடுகளை இடித்து தரைமட்ட மாக்கினார்கள். அங்கிருந்த மக்களுக்கு வெறும் ஒரு சென்ட் இடத்தை மட்டும் கொடுத்துவிட்டு அவர்களை விரட்டிவிட்டனர். காலாகாலமாக அங்கிருந்த மக்களுக்கு மாற்று இடங்களில் வீடு கட்டிக்கொடுத்துவிட்டு அதன்பின்பு காலிசெய்திருக்க வேண்டும். கிரிவல வீதியில் காலி செய்யப்பட்ட சிறு வியாபாரிகளுக்கு மாற்றிடமும் இதுவரை ஒதுக்கவில்லை.

இந்த நிலையில் தேவஸ்தான அடிவாரப் பகுதியிலுள்ள பட்டா இடங்களில் கடை வைத்திருக்கும் வியாபாரிகளையும் நெருக்கடி கொடுத்து தேவஸ்தானம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர நினைக்கிறது. அதைக் கண்டித்து ஆளுங்கட்சி சேர்மன் உட்பட கவுன்சிலர்கள் குரல் கொடுத்துவருகிறார்கள். இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் தேவஸ்தானத்தைக் கண்டித்து ஒட்டுமொத்த கடை வியாபாரி களும் தொடர் உண்ணா விரதப் போராட்டத் தில் குதிப்போம். இதன்மூலம் ஆட்சிக்குதான் கெட்ட பெயர் ஏற்படும்''’என்றார் வர்த்தகர் சங்க அடிவாரக் கடை வியாபாரிகள் பொறுப்பாளரான செந்தில்குமார்.

palani

Advertisment

இதுசம்பந்தமாக பழனி தி.மு.க. நகர்மன்றத் தலைவர் உமாமகேஸ்வரியிடம் கேட்டபோது, "தேவஸ்தானம் கோர்ட் விதிகளை மீறி அடிவாரப் பகுதிகளிலுள்ள அய்யம்புளி ரோடு, ஆண்டவன் பூங்கா ரோடு, கொரவன்பாறை ரோடு, சன்னதி ரோடு ஆகிய பகுதிகளை தங்களுடைய கட்டுப் பாட்டில் கொண்டுவர நினைக்கிறது. இதனால் நகராட்சிக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். இந்த பகுதி தற்போது நகராட்சியின் கட்டுப்பாட்டில்தான் இருந்து வருகிறது. இந்த பகுதிகளில் ஐந்துக்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் இருக்கும் அளவுக்கு மக்கள் வசித்து வருகிறார்கள். இப்படி வசிக்கக் கூடிய மக்கள் கிரிவல வீதி மூலமாக கொடைக் கானல் பகுதியிலுள்ள தோட்டம், காடுகளுக்கு, வியாபார ஸ்தலங்களுக்கும் செல்லக்கூட முடியாத அளவிற்கு ஏற்கனவே தடுப்பு வேலி அமைத்திருக் கிறார்கள். அதை அகற்றக் கோரி தேவஸ்தானத் திடம் புகார் மனு கொடுத்து போராட்டத்திலும் ஈடுபட்டிருக்கிறோம். அப்படியிருக்கும்போது தொடர்ந்து இந்த பகுதிகளை தங்கள் கட்டுப் பாட்டில் கொண்டுவர தேவஸ்தானம் முயற்சி செய்துவருகிறது. இதையெதிர்த்து அடிவாரப் பகுதியிலுள்ள ஒட்டுமொத்த கடை வியாபாரிகளும் தேவஸ்தானத்தை கண்டித்து கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாங்களும் முழு ஆதரவு கொடுத்தோம். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான் எங்க எம்.எல்.ஏ. ஐ.பி.செந்தில் குமாரிடம் முறையிட் டிருக்கிறோம்''’என்று கூறினார்.

இதுகுறித்து பழனி தண்டாயுதபாணி தேவஸ்தான இணை ஆணையர் மாரிமுத்து விடம் செல் மூலம் (73ஷ்ஷ்ஷ் ஷ்ஷ்ஷ்56, 94 ஷ்ஷ்ஷ் ஷ்ஷ்ஷ் 81) விளக்கம் கேட்க பலமுறை தொடர்பு கொண்டும்கூட லைனில் பிடிக்கமுடிய வில்லை. அதைத்தொடர்ந்து ஏ.சி. லட்சுமியையும் செல் மூலம் (94ஷ்ஷ்ஷ் ஷ்ஷ்ஷ்70)தொடர்புகொண்டும் லைனில் பிடிக்க முடியததால் பி.ஏ. லட்சுமி நாராயணனிடம் தொடர்புகொண்டு கேட்ட போது, அதிகாரிகள் பிசியாக இருக்கிறார்கள் என்று கூறினார்.

பழனி சட்டமன்ற உறுப்பினரும், கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ.பி. செந்தில்குமாரிடம் கேட்டபோது, “"எங்க அமைச்சர்களான ஐ.பெரியசாமி, சக்கரபாணியிடம் தேவஸ்தானம் மற்றும் கடை வியாபாரிகள் விஷயங்களை தெளிவுபடுத்தினேன். அதுபோல் அறநிலையத் துறை அமைச்சரான அண்ணன் சேகர்பாபு விடமும் தெரிவித்திருக்கிறேன். கடை வியாபாரி களை வரவழைத்து அமைச்சர்கள் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் பேசவிருக்கிறோம். பாதிக்கப்பட்ட சிறு, பெரும் வியாபாரிகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்''’என்றார் உறுதியாக.

-சக்தி