அ.தி.மு.க. எடப்பாடி, ஒ.பி.எஸ். எனப் பிளவுபட்டுப் போன நிலையில், ஆலங்குளம் எம்.எல்.ஏ.வும் ஓ.பி.எஸ். மூலம் அமைப்புச் செயலாளர் பொறுப்பு வழங்கப் பட்டவருமான மனோஜ்பாண்டியன், தென் மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் நிர்வாகிகள், தொண்டர்களைத் திரட்டி ஓ.பி.எஸ்.ஸுக்கான ஆதரவைப் பலப்படுத்திவருகிறார்.

Advertisment

ஜூலை 31-ம் தேதி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகரில் நடந்த ஆடித் தபசு திருவிழாவில் ஒன்றாம் திருநாள் மண்டகப்படி, முக்குலத்தோர் சமுதாயத்திற்கான முறை. அன்றைய மண்டகப்படி தினத்தின்போது அந்த சமுதாய மக்கள் திரண்டு வருவர். அந்த மண்டகப்படி பூஜையின் போது ஓ.பி.எஸ். கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினம் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று ஆதரவு திரட்டினார் மனோஜ் பாண்டியன்.

Advertisment

dd

பொதுவாக இதுபோன்ற சமுதாயத் திருவிழாக்களில் கலந்துகொள்ளாத முக்கிய புள்ளியான ஓ.பி.எஸ்., தற்போது கட்சி பிளவுபட்டு இரு கூறான நேரத்தில், கட்சியின் அனைத்துத் தரப்புத் தொண்டர்களின் ஆதரவைப்பெற வேண்டிய சூழலில், மண்டகப்படி திருவிழாவுக்கு வந்தால் சமுதாய முத்திரை விழுந்து விடும் என்றெல்லாம் அவருக்குத் தெரியப்படுத்தப்பட்ட தாம். இதனால் மற்ற தரப்பினரின் ஆதரவு பாதிக்கும் என்று யோசித்துப் பின்வாங்கிய ஓ.பி.எஸ்., தான் வருவதைத் தவிர்த்துவிட்டு தன் சார்பில், தன் மகனும் எம்.பி.யுமான ரவீந்திரநாத்தை அனுப்பி சமன்படுத்தியிருக்கிறார் என்கிறார்கள் ஓ.பி.எஸ். தரப்பினர்.

ஓ.பி.எஸ். சார்பில் வருவதால், ரவீந்திரநாத் துக்கு கட்சித் தொண்டர்களின் திரளான வரவேற்பை ஏற்பாடு செய்வதற்காக, தூத்துக்குடியின் அ.தி.மு.க. நிர்வாகியான ஏசாதுரை, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் அவரால் நியமனம் செய்யப்பட்ட சிவலிங்கமுத்து, தர்மலிங்கம் உள்ளிட்ட மா.செ.க்களிடம் பேசியிருக்கிறார் ஓ.பி.எஸ். அதன்படி அன்றைய தினம் காலை தூத்துக்குடி விமான நிலையத்திலும், அதன்பின் நெல்லையிலும், சங்கரன்கோவிலிலும் வரவேற்பு அமர்க்களப்பட்டிருக்கிறது.

Advertisment

கட்சியினருடன் சங்கரன்கோவில் ஆலயம் சென்று வழிபட்ட ரவீந்திரநாத்திடம் பத்திரிகையாளர் கள் பேச முயன்றபோது, "நான் கோவிலுக்கு சாமி கும்பிட வந்துள்ளேன். அரசியல் பேசக்கூடாது. முடித்து விட்டு வருகிறேன்'' என்று சொல்லி முடித்துக்கொண் டார். உடன் வந்த கட்சியினரிடம் பேசிய ரவீந்திர நாத், "அப்பாவுக்கு உடல் நலமில்லாததால் நான் வந்திருக்கேன். கட்சியில் நம் தரப்பை பலப்படுத்த வேண்டும். 2026 வரை கழகத்தின் ஒருங்கிணைப் பாளர் அப்பா தான். அனைத்துக் கட்சிக் கூட்டத் திற்கு, தேர்தல் ஆணையம் எங்களுக்கும் அழைப்புக் கடிதம் அனுப்பியுள்ளது'' என்று நம்பிக்கையூட்டி யிருக்கிறார். ரவீந்திரநாத் கலந்துகொண்ட அதே கோவில் திருவிழாவில், அதிகாலையில் நடந்த கொடியேற்ற நிகழ்ச்சியில், மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டது உஷ்ணத்தை அதிகரித்துள்ளது.