கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து நடத்தக் கோரி தமிழகம் முழுவது முள்ள மாவட்ட தலைநகரங் களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஓ.பி.எஸ். அறி வித்திருந்தார். அதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி மாவட்ட தலை நகரங்களில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது

தேனியில் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப் பாட்டத்தில் டி.டி.வி. தினகரனும் கலந்துகொள்வார் என அறிவித் திருந்தனர். இந்த விஷயம் எடப் பாடி அணியினருக்குத் தெரியவே மதுரை எழுச்சி மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டத்தை திடீ ரென தேனியில் உள்ள தனியார் மண்டபத்தில் முதல் நாள் நடத் தினார்கள். அந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டு மாநாடு குறித்து பேசிவிட்டு இறுதியில் ஓ.பி.எஸ். நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத் தில் கட்சிப் பொறுப்பாளர்களும் தொண்டர்களும் கலந்துகொள்ளக் கூடாது என மறைமுக உத்தரவை யும் பிறப்பித்தனர்.

dd

இருந்தும் ஓ.பி.எஸ்., டி.டி.வி. தலைமையில் தேனி பங்களாமேட்டில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஓ.பி.எஸ். ஆதரவாளர்களுடன், அம்மா மக் கள் முன்னேற்ற கழகப் பொறுப் பாளர்களும் தொண்டர்களும் பெரும் திரளாகக் கலந்துகொண் டனர். எதிரணியான எடப் பாடிக்கு மாஸ் காட்டவேண்டும் என்பதற்காக தனது ஆதரவாளர் கள் மூலம் கரன்ஸி விஷயத்தில் தாராளம்காட்டி மக்களைத் திரட்டியிருந்தார். அத்தோடு, டி.டி.வி.யைப் பார்ப்பதற்காகவே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் பெருந்திரளாக கலந்துகொண்டதால் தேனி நகரமே மக்கள் வெள்ளத்தில் திணறிவிட்டது. இதைக் கண்டு எடப்பாடி அணியைச் சேர்ந்த அ.தி.மு.க.வினரே அசந்துபோய் விட்டனர்.

மைக்கைப் பிடித்த டி.டி.வி., “"இங்கு 90 சதவீதம் தொண்டர் கள் ஓ.பி.எஸ். மற்றும் எங்கள் பின்னால் இருக்கிறார்கள். அங்கு இருப்பவர்கள் எல்லாம் குண்டர் கள். நான் எம்.பி. தேர்தலில் போட்டிபோட முதன்முதலில் தேனி மாவட்டத்துக்கு வந்த போது பார்த்த முகங்கள்தான் இப்பொழுதும் வந்திருக்கிறீர்கள். இங்குதான் அம்மாவின் விசுவாசி களான அ.தி.மு.க. தொண்டர்கள் இருக்கிறார்கள். நமக்குள் இருந்த வருத்தங்களை விட்டுவிட்டு தற் போது ஒன்றுகூடியிருக்கிறோம். அம்மாவின் தொண்டர்கள் இணைந்துவிட்டோம். துரோகத் தால் சிலர் கட்சி, சின்னம் ஆகிய வற்றை அபகரித்துள்ளனர். அதை மீட்கவே ஒன்றிணைந்துள் ளோம். அவர்களுக்கு துரோகத் தைத் தவிர எதுவும் தெரியாது. இந்த அரசு கொடநாடு குற்றவாளிகளை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்''’என்றார்.

அதைத்தொடர்ந்து ஓ.பி.எஸ். பேசும்போது, "கொடநாடு குற்ற வாளிகளைக் கண்டறிந்து மூன்று மாதங்களில் கைதுசெய்து உரிய தண்டனை வாங்கிக் கொடுப் போம் என தேர்தல் நேரத்தில் ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தார். ஆனால் ஆட்சிக்கு வந்து 30 மாதங்கள் ஆகிவிட்டது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் தமிழகம் முழுவதும் போராட் டம் வெடிக்கும்''” என ஆளும் கட்சிக்கு சவால் விட்டுள்ளார்.

-சக்தி