ஜூன் 12-ந் தேதி காவிரிநீர் வரப் போவதில்லை. ஆழ்துளை பாசனம் செய்ய மும்முனை மின்சாரமும் முறையாகக் கிடைக்க வில்லை’என கலக்கத்தில் இருக்கிறார்கள் டெல்டா விவசாயிகள். அவர்களின் நிலத்தை செயற்கையாக பாலைநிலமாக்கி ஹைட்ரோகார்பன், கெயில் திட்டங்களைக் கொண்டுவரத் துடிக்கிறது மத்திய அரசு. அதன் ஒவ்வொரு செயலுக்கும் வெண் சாமரம் வீசி துதிபாடுகிறது எடப்பாடி அரசு.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி காவிரிநீரையே நம்பி விவசாயம் செய்யும் விவசாய கிராமங்களால் நிறைந்தது. அதில் ஒன்றுதான் பேரையூர். அங்குள்ள வடவாற்றில் காலங்காலமாக காவிரி தண்ணீர் பாய்ந்து நெல் விவசாயம் செழித்திருந்தது. இந்நிலையில், கடந்தமாதம் முதல் திடீரென அந்த ஆற்றைத் தூர்த்து சாலைபோடும் பணி நடக்கிறது. இதுகுறித்து அந்தப் பகுதி விவசாயிகளுக்கு முறையான விளக்கம் கிடைக்காததால், தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. mlaடி.ஆர்.பி.ராஜாவிடம் முறையிட்டனர்.

வெள்ளிக்கிழமை காலை அந்தப் பகுதிக்குச் சென்ற எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா, பணிவிவரம் தொடர்பான பதாகை இல்லாததைக் கண்டு, அதிகாரிகளிடம் கேட்டபோது "நபார்டு திட்டத்தில் சாலை வரப்போகிறது' என்று மட்டும் கூறியுள்ளனர். நீர்வழிப் பாதையை அடைத்து சாலை அமைக்கப்படுவது குறித்து எந்தவித விளக்கமும் கொடுக்கப்படவில்லை. இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) பால சுப்பிரமணியனை தொடர்புகொண்டு, "ஆற்றின் அகலத்தை அறியும் வரைபடம், கிராம கணக்குடன் வாருங்கள்'’ என அழைத்துள்ளார். ஆனால், உயரதிகாரிகளின் அழுத்தம் காரணமாக அவர் அங்கு வரவில்லை. மாறாக மன்னார்குடி வட் டாட்சியர் அலுவலகம் சென்றுவிட்டார்.

மூன்றுமுறை அழைத்தும் வி.ஏ.ஓ. வராததால் எம்.எல்.ஏ.வே, ஆற்றின் அளவை அளந்து பார்த்து விட்டு, மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகத் திற்கு சென்று வி.ஏ.ஓ.வுக்காக காத்திருந்தார். துணை தாசில்தார் முதல் பலரும் சமாதானம் பேசியும் சளைக்காத எம்.எல்.ஏ. ராஜா, வி.ஏ.ஓ. பாலசுப்பிர மணியன் வரும்வரை காத்திருந்தார். வி.ஏ.ஓ. வந்த தும், அவரிடம் ஒரு தட்டில் பூ, பழம், வெற்றிலை பாக்கு தாம்பூலத்தைக் கொடுத்து, ""சொந்தக் கார ணங்களுக்காக உங்களை நான் அழைக்கவில்லை. என்னைத் தேர்ந்தெடுத்த மக்களின் சந்தேகத்தைப் போக்குவதற்காக அழைக்கிறேன். சனிக்கிழமை காலை 11 மணிக்கு தவறாமல் ஆவணங்களுடன் வரவேண்டும்''’என்று அழைப்புக் கொடுத்தார். பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் செல் போனில் தகவல் கொடுத்தார்.

Advertisment

மன்னார்குடி எம்.எல்.ஏ. ராஜாவின் இந்த வித்தியாச அழைப்பு, அதிகாரிகளை அதிர வைத்தது. இனி டபாய்த்தால் அது மக்களிடம் தங்களை வில்லனாக்கிவிடும் என உணர்ந்தனர்.

சனிக்கிழமை காலை 11 மணிக்கு பேரையூர் பாலத்திற்கு வந்த அதிகாரிகளிடம், எம்.எல்.ஏ. ராஜா விளக்கம்கேட்டு கேள்விகளை அடுக்கினார். அதற்கு பொதுப்பணித்துறை பொறியாளர் இளங் கோவன், ""வடவாறு பேரையூரிலிருந்து கன்னியாக் குறிச்சி வரை செல்கிறது. பேரையூர் ஷட்டரிலிருந்து 300 கனஅடி நீர் திறக்கப்படும். முன்பு 13 மீட்டர் அகலத்தில் ஆறு சென்றது. தற்போது அகலத்தைக் குறைத்து, கரையைப் பலப்படுத்தி வருகிறோம். இதற் கான வரைபடம் உள்ளிட்ட அனைத்துப் பணி களும் சென்னையில் செய்யப்பட்டுள்ளது''’ என்றவர், “""பொதுப்பணித்துறை தேவைக்காக போடப்படும் இந்த சாலைக்கான பணி முதற்கட்ட மாக 4.1. கி.மீ. தூரத்திற்கு தொடங்கப்பட்டுள்ளது'' என்றார்.

"தற்போது ஆறு 4 மீட்டர் அகலத்தில்தான் உள்ளது. எதற்காக இந்தச் சாலை? தண்ணீர் வர வேண்டிய நேரத்தில் இந்தப் பணி நடப்பதால் உடைப்பு ஏற்படவும், தண்ணீர் தடைபடவும் வாய்ப்புள்ளதே?'’என்று எம்.எல்.ஏ. கேட்டபோது, “""இல்லை...… 7 மீட்டர் அகலத்தில் கான்கிரீட் தளம், தடுப்புச் சுவருடன் ஆற்றை பலப்படுத்துவோம். ரெடிமிக்ஸ் மூலம் நாளொன்றுக்கு 300 மீட்டர் வரை கான்கிரீட் போடப்படும். அதனால், பணி விரைவில் முடிந்துவிடும். இந்த ஆற்றங்கரை சாலை எங்களது துறை பயன்பாட்டிற்குதான்''’என்றார். ஆனால், பொறியாளரின் இந்த விளக்கம் விவசாயிகளுக்கு திருப்தியளிக்கவில்லை.

Advertisment

""13 மீட்டர் அகல ஆற்றை 7 அடியாகக் குறைத்தால், பல இடங்களில் உடைப்பு ஏற்படும். இதைக் காரணம்காட்டி தண்ணீர் திறப்பைக் குறைத்துவிடலாம். அதனால், விவசாயம் பாதிக்கும். இதன்மூலம் தரிசாகும் நிலங்களில் சுலபமாக ஹைட்ரோகார்பன் எடுக்க திட்டமிடுகிறார்கள். ஆற்றில் கான்கிரீட் அமைத்தால் தண்ணீர் எப்படி நிலத்திற்குள் போகும். எங்கள் விவசாயத்தை அழிக்கவே முயற்சிக்கிறார்கள்''’என்று விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

mla

இதுகுறித்து மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா நம்மிடம், ""எந்தவித அறிவிப்பும் இல்லாமல் விவசாயத்திற்கு தண்ணீர் பாயும் ஆற்றைத் தூர்த்து, சாலை போடுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஆற்றில் தண்ணீர் பாய விடாமல் தடுத்து எங்கள் விவசாயத்தை அழிக்கப் போகிறார் களோ என்ற சந்தேகம் எழுகிறது. ஆற்றின் குறுக்கே பாலம் 19 மீட்டரில் உள்ளது. 3 கண்களில் தண்ணீர் செல்கிறது. இப்போது ஆற்றின் அளவும் 4 மீட்டர் கூட இல்லை. இதனால், வெள்ள சமயங்களில் விவ சாய நிலங்களில் பாதிப்பு ஏற்படும். அதனால்தான், ஆற்றின் அளவை அறிய கிராமக் கணக்கைக் கொண்டுவரச் சொல்லி, வி.ஏ.ஓ.வை தாம்பூலம் வைத்து அழைத்தேன். வந்தவரிடம் சரியான வரை படமோ, கணக்குகளோ இல்லை. இதுதான் எல்லா கிராமங்களின் நிலையும். அதனால், அனைத்து கிராமங்களுக்கும் கிராமக் கணக்குகள் மற்றும் வரைபடங்களை தமிழக அரசு வழங்கவேண்டும். என்ன ஆனாலும், விவ சாயத்தையும், விளை நிலங்களையும் அழிக்க விடமாட்டோம்''’என்றார் உறுதியுடன்.

இனி அழைப்பை அலட்சியப்படுத்தும் அதிகாரிகள் எல்லோ ருக்கும் இதே வெற்றிலைப் பாக்கு ட்ரீட் மெண்ட்தானாம்.

-இரா.பகத்சிங்