ன்லைனில் கடன் தருவதாக சொல்லும் இணையதள செயலிகளால், ஆபத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறார்கள் பலரும். அண்மைக்காலமாக பெருகிவரும் ஆன்லைன் ஆபத்துக்கள் தொடர்பாக, "உருட்டப்படும் உயிர்கள்! ஆட்டிப்படைக்கும் ஆன்லைன் சூதாட்டம்!'’ என்ற தலைப்பில் நக்கீரன் இதழில் அதிர்வுக் கட்டுரை ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

dd

அதை தொடர்ந்து, மீண்டும் ’ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை’ என்ற தலைப்பிலும், ’"ஆப்பு வைக்கும் கடன் ஆப்கள்'’என்ற தலைப்பிலும் அடுத்தடுத்து இதேபோன்ற விழிப்புணர்வுக் கட்டுரைகளையும் நக்கீரன் வெளியிட்டது. இதன் பிறகும் அரசுத் தரப்பில் இருந்து எந்தவித நடவடிக்கையும் இல்லாததால்.... அடுத்தடுத்த விபரீதங்கள் அரங்கேறத் தொடங்கியிருக்கின்றன.

dசெங்கல்பட்டு மாவட்டத்தில் ஆன்லைனில் கடன் வங்கிய விவேக் என்ற 27 வயதான இளைஞர் தற்கொலை செய்து கொண்ட செய்தி தீயாய் பரவ, "ஆன்லைன் கடன்களால் பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக வந்து புகார் தெரிவிக்கலாம். இணையத்தளத்தில் நம்பகத்தன்மை அற்ற செயலிகளில் கடன் பெற வேண்டாம். அங்கீகாரம் பெற்ற செயலிகளில் மட்டும் கடன் பெறவும்' என்று இந்திய ரிசர்வ் வங்கியும் எச்சரிக்கை மணியை இப்போது ஓங்கி அடித்திருக்கிறது.

Advertisment

கடனுக்காக போலி யான செயலிகளை மக்கள் ஏன் நாடுகிறார்கள் என்ற கேள்வியோடு பாரத் ஸ்டேட் வங்கியின் உயர் அதிகாரியிடம் நாம் விசாரித்த போது... ""ரிசர்வ் வங்கி சொல்வது போல எது போலியான செயலி? எது அங்கீகாரம் பெற்ற செயலி? என்று யார் தீர்மானிப்பது? இணையதள செயலிகள் எந்த நாட்டின் கட்டுப்பாட்டிலும் இல்லை என்பதுதான் உண்மை. யார் வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் புதிய செயலியை உருவாக்கலாம். அதை அங்கீகரிப்பது தனியார் நிறுவனமான கூகுள்தான்.

பொதுவாக வங்கியில் ஒரு நபர் கடன் பெற வேண்டும் என்றால் அவரின் உடைமை சான்றிதழ், மாத வருமானத்தின் சேலரி ஸ்லிப் போன்றவை களை ஒப்படைக்கவேண்டும் அதை வங்கி சரிபார்த்து அவருக்குக் கடன் தர, ஏறத்தாழ 1 மாதத்திற்கு மேலாகவும் ஆகும் ஆனால் ஆன்லைன் செயலிகளில் இதுபோன்ற இழுத்தடிப்புஇல்லாமல் ரெண்டே நாளில், 4000 முதல் 4 லட்சம் வரை பணம் பெறமுடியும். ஆனால் அதற்கு விலையாக மக்கள், தங்களின் அடையாள அட்டைகளை மட்டுமின்றி கைபேசியில் இருக்கும் தொடர்பு எண்கள் மற்றும் கைபேசியில் சேகரிக்கப்பட்ட புகைப்படங்கள், காணொளிகள் போன்றவற்றையும் தாரைவார்க்க நேர்கிறது. இவற்றை வைத்து நெருக்கடிகள் கொடுக்கப்படும் போது, மன ரீதியாக பலவீனமாக இருக்கும் சிலர் சமூக அவமானங் களுக்கு பயந்து தங்களின் உயிரை மாய்த்து கொள்கிறார்கள். மேலும் சிலர் ஒரு கடனை அடைக்க இன்னொரு கடனை வாங்குவது என சுழற்சிமுறையில் கடனாளி களாக இருக்கிறார்கள். வெகு சிலரே இதனால் பயனடைந்தவர்களாக இருக்கிறார்கள்''’என்று கூறினார் ஆதங்கமாய்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஒருவரிடம் பேசியபோது, ""முகப்புத்தகத்தில் கடன் வேண்டுமா? 5 நிமிடத்தில் கடன் பெறலாம் என எனக்கு அடிக்கடி விளம்பரங்கள் வரும். கொரோனா தாக்கத்தால் எனக்கு போதிய வருமானம் இன்னும் சரிவர கிடைக்கவில்லை. எனவே நான் கடன் பெற முடிவெடுத்தேன். செயலியை கைபேசியில் பதிவிறக்கம் செய்தவுடன் கைபேசி எண் கேட்கும். பிறகு நமக்கு வரும் ரகசிய குறியீடு எண் கேட்கும். அதையும் நாம் பதிவு செய்தபிறகே இந்த செயலியின் உள்ளே நுழையமுடியும். முதலில் நம்மு டைய ஆவணங்களான ஆதார் அட்டை, பான் அட்டை, புகைப்படம் உட்பட நம்முடைய அனைத்து ஆதாரங்களையும் பெற்றுக்கொண்ட பிறகே நமக்கு எவ்வளவு கடன் தேவை என்று கேட்கும்.

Advertisment

நம் ஆவணங்கள் அனைத்தையும் பெற்றுக் கொண்டு நமக்கு தேவையான கடனையும் வழங்கி விட்டு, அதை நாம் திருப்பி செலுத்துவதற்கான உரிய தேதியை வழங்காமல் குறுகிய நாட்களுக்குள் அதிக வட்டியை உயர்த்தி ""பணத்தைக் கட்டு கிறாயா அல்லது காவல்நிலையம் செல்கிறாயா"" என்று மிரட்டத் தொடங்கிவிட்டார்கள்'' என்கிறார் கவலையாய்.

இப்படி மிரட்டியவர்களின் பின்னணியை நாம் விசாரித்தபோது, அவர்கள் தமிழ் தெரியாதவர்கள் என்பதும் வடமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு கடன்கொடுத்து மிரட்டுகிறார்கள் என்பதும் தெரியவந்தது. அந்த செயலியைப் பலமுறை தொடர்பு கொண்டும் அவர்கள் பதில் அளிக்கவில்லை. அதேசமயம் ""ஒரு நாளைக்கு 500 ரூபாய் வீதம் சம்மந்தப்பட்டவர்கள் கட்டவேண்டும்"" என்று மிரட்டுகிற குறுஞ்செய்தி கள் மட்டும் வந்துகொண்டே இருந்தன. .

d

பரவலாக விஸ்வரூபம் எடுத்துவரும் ஆன் லைன் கந்துவட்டிக் கும்பல்களால், அநியாயமாகத் தற்கொலைகள் பெருகி வருகின்றன. இவற்றைக் கவனிக்க வேண்டிய அரசாங்கமோ, காது குடைந்துகொண்டு இருக்கிறது.

-சேகுவேரா