புதுக்கோட்டை, திருச்சி, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், காரைக்கால் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு குழந்தைகளுக்கான சிறப்பு அரசு மருத்துவமனை தஞ்சாவூர் ராஜா மிராசுதார் மருத்துவ மனைதான். பிரசவம் என்றாலும், குழந்தைகளுக்கான உடல்நலக்குறைவு என்றாலும் இந்த மருத்துவமனைக்கு தான் கொண்டு வரவேண்டும். இந்த மருத்துவமனையில் தான் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 995 குழந்தைகள் இறந்துள்ளதாக, தஞ்சை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த விஜய் குற்றம்சாட்டுகிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hospital_3.jpg)
விஜய் நம்மிடம், ""என் உறவினர்கள் குடும்பத்தில் சிலரை பிரசவத்திற்காகவும், சிகிச்சைக்காகவும் சில மாதங் களுக்கு முன்பு ராஜா மிராசுதார் மருத்துவமனைக்குக் கொண்டுபோனோம். அரைமணி நேரம் கெடு வைத்தார் கள். அதன்பிறகு வேறு தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்று காப்பாற்றினோம். அப்போது அங்கு பல குழந்தைகள் இறந்து, உறவினர்கள் கதறிக்கொண்டு தூக்கிச்சென்றதை பார்க்கமுடிந்தது. ஆர்.டி.ஐ.யில் தகவல் கேட்டேன் பதிலில்லை. மேல்முறையீடு செய்து கேட்ட பிறகே பதில்வந்தது. அதாவது கடந்த 2018-ல் மட்டும் ஆண் குழந்தைகள் 391, பெண் குழந்தைகள் 301, 2019 மே மாதம் வரை ஆண் குழந்தைகள் 179, பெண் குழந்தைகள் 124 என்று மொத்தம் 995 குழந்தைகள் இறந்துள்ள தாக தகவல் கொடுத்திருக்கிறார்கள். ஒரு அரசு மருத்துவமனையில் இத்தனை குழந்தை கள் இறப்பது மாநிலத்துக்கே அவமானம்''’என்றார்.
தஞ்சை மருத்துவக்கல்லூரி டீன் குமுதா லிங்கராஜோ, ""தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்து இயங்கும் அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனையில் 2018, ஜனவரி மாதம் முதல் 2019, ஜூன் மாதம்வரை 1.72 லட்சம் குழந்தைகள் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். தவிர, உள்நோயாளிகளாக 16,000-க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்றனர். இதில், அனைவருமே ராஜா மிராசுதார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, இறந்தவர்கள் கிடையாது.
கருவிலேயே குழந்தைகள் இறப்பு, அறுவைச் சிகிச்சையின்போது அல்லது சுகப்பிரசவத்துக்குப் பின்பு குழந்தைகள் இறப்பு என 332 குழந்தைகள் இறந்துள் ளனர். இதயநோய், மூளை பாதிப்பு உள்ளிட்ட குறைபாடுடைய குழந்தைகள் பிறந்தவுடனேயே இறந்துவிடுதல் என 200 குழந்தைகள் இறந்தனர். தவிர, வெளியி லுள்ள மருத்துவமனையிலிருந்து, வெளி யூர்களிலிருந்து மேல்சிகிச்சைக்குப் பரிந் துரைக்கப்பட்டு இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 120. இந்த எண்ணிக்கை யைத் தவிர்த்து, இந்த மருத்துவமனையில் உண்மையிலேயே பிழைக்க வைக்க முடியாத குழந்தைகளின் எண்ணிக்கை 335 மட்டுமே.
மாநில அளவிலான குழந்தைகள் இறப்பு விகிதம் 18 சதவிகிதமாக உள்ளது. இந்த விகிதம்தான் ராஜா மிராசுதார் மருத்துவமனையிலும் உள்ளது. இதை யும் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்''’என்றார்.
-இரா.பகத்சிங்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-10-15/hospital-t.jpg)