ராஜினாமா செய்யப்போகிறோம்' என்று தி.மு.க. பஞ்சாயத்துத் தலை வர்கள் அதிரடியாய் அறிவித்து, அரசுத் தரப்பை அதிர வைத்திருக்கிறார்கள். இதற்குக் காரணமாக அவர்கள் சுட்டிக் காட்டுவது மாஜி அ.தி.மு.க. மந்திரியான உதயகுமாரைத்தான்.
இந்தமுறையும் மதுரை திருமங்கலம் தொகுதியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்ச ரான ஆர்.பி.உதயகுமார்தான் வெற்றி பெற்றிருக்கிறார். இந்த நிலையில் இந்த சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நான்கு யூனியன் சேர்மன்களில் 3 பேர் அ.தி. மு.க.வைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். அதேபோல் மொத்தமுள்ள 147 கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்களில் பெரும்பாலான பஞ்சாயத்து தலைவர்களும் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்களே.
சேடபட்டி யூனியன் சேர்மன் மட்டுமே தி.மு.க.வைச் சேர்ந்தவர். இதனால் அங்கே அ.தி.மு.க.வினர் வைத்ததுதான் சட்டமாக இருக்கிறது என்கிறார்கள். குறிப்பாக மாஜி உதயகுமார், இப்போதும் தன்னை அமைச்ச ராகப் பாவித்துக்கொண்டு அங்கே செயல்படு கிறாராம். அதற்குக் காரணம், அங்குள்ள அதி காரிகள் அனைவரும் அவரின் கட்டுப்பாட் டில்தான் இருக்கிறார்களாம். இவர்கள் அனைவரும் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உதயகுமாரிடம் பயன்பெற்றவர்கள். அதோடு கடந்த 10 வருடங்களாக உதயகுமாரின் ஆசியோடு அங்கேயே தொடர்வதால், அவருக்கு விசுவாசமாக இருக்கிறார்களாம்.
இது குறித்து நம்மிடம் பேசிய ஒரு தி.மு.க. பஞ்சாயத்து மன்றத் தலைவர், "ஆட்சி மாறியும் கூட இன்னும் அ.தி.மு.க. கொடி தான் எங்க பகுதியில் பறக்குது. அதிகாரிகள் முழுக்க முழுக்க மாஜி அ.தி.மு.க. மந்திரி உதயகுமாரின் அடிமைகளா இருப்பதால், தி.மு.க. ஊராட்சித் தலைவர்களால் எந்த காரியத்தையும் செய்ய முடியலை. எங்க தி.மு.க. பஞ்சாயத்துக்களுக்கு நிதியும் ஒதுக்கறது இல்லை. வேலைகளும் நடக்கற தில்லை. அதிகாரிகளின் சண்டித்தனம் பற்றி எங்க மாவட்டச் செயலாளர் மணிமாறன் தொடங்கி, அமைச்சர் மூர்த்தி வரை புகார் சொல்-யும் நிலைமை மாறலை. எந்த வேலையும் செய்ய முடியாத பஞ்சாயத்துத் தலைவர் பதவி எதுக்குங்கிற கேள்வி எங்களுக்குள் எழுந்திருக்கு. அதனால் பேசாம ராஜினாமா பண்ணிடலாமான்னு இருக்கிறோம். அதிகாரிகள் செய்யும் அலட்சியமும் அவமானமும் தாங்க முடியாததா இருக்கு''’என்று மனமுடைந்துபோய் பேசினார்.
இது குறித்து, புளியம்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் மணிகண்டன் நம்மிடம் பேசும்போது ”"போன மாதம் மகாத்மா ஊரக வளர்ச்சித் திட்டத்தில் பல்வேறு வேலைகள் வந்தன. எப்போதும் இந்த மாதிரி திட்டங்களை கிராமசபையில் வைத்து விவாதித்து, தீர்மானம் போட்டு, வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு அனுப்பி வைப்போம். அவர், ஒப்புதலை வாங்கி பஞ்சாயத்துத் தலைவருக்கு அனுப்பி வைப்பார். அதன் பின்தான் ஒப்பந்த டெண்டர் விடப்பட்டு, வேலைகள் தொடங்கும். ஆனால் இங்கு மட்டும் அது நடப்பதில்லை. அ.தி.மு.க. சேர்மன் என்ன சொல்கிறாரோ? அதுபடிதான் எல்லாம் நடக் கிறது. அதிகாரிகள் முழுக்க முழுக்க அவர்களுக்கு சார்பாகத்தான் நடந்துகொள்கிறார்கள். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் கடந்த மாதம் 23 ஊராட்சி தலைவர்களும் ஒன்றுசேர்ந்து ஆட்சி யரைப் பார்த்து முறையிட்டோம் அதன்பின்பும் ஒன்றும் நடக்கவில்லை. இதனால் அனைவரும் ”கூட்டாக ராஜினமா செய்துவிடலாம்” என்ற முடிவுக்கே வந்துவிட்டோம். ஊராட்சித் தலைவர் களுக்கு எதிராக, அதிகாரிகள் செயல்படுகிறார்கள். எங்களை கலந்து ஆலோசிப்பதில்லை என்று நான் ஆதாரங்களுடன் வழக்கு தொடர்ந்திருக்கிறேன். இதற்கும் நல்ல தீர்வு கிடைக்கவில்லை என்றால், பேசாமல் ராஜினாமா செய்துவிட்டு, வேறு வேலையை பார்க்கலாம் என்று இருக்கிறோம். என்னைபோல் 6 வழக்குகளை அரசுக்கு எதிராகப் போட்டிருக்கிறார் எங்க தி.மு,க.வைச் சேர்ந்த சிலாரிபட்டி பஞ்சாயத்துத் தலைவர் ஞானசேகரன்... எனவே அவரிடம் கேளுங்கள்''’என்றார்.
நாம் விடாமல், சிலார்பட்டி பஞ்சாயத்து தலைவரான ஞானசேகரனையும் சந்தித்தோம். கவலையோடு பேசத்தொடங்கிய அவர், "நான் பரம்பரை தி.மு.க.காரன். என் தந்தையார் நம்மாழ்வார், கலைஞரின் "பராசக்தி', "மனோ கரா' படத்தில் நடித்தவர். பாடல் எழுதியவர். மேலும் கலைஞ ரோடு சினிமாவில் தொடர்ச்சி யாகப் பயணித்தவர். அவர் கையில் கலைஞர் பேரை பச்சை குத்தி யிருப்பார் என்றால் பார்த்துக்கொள் ளுங்கள். இந்தமுறை தேர்த-ல் என்னைத் தோற்கடிக்க அ.தி.மு.க. மாஜி மந்திரி உதயகுமார் எவ்வள வோ முயற்சிசெய்தார், முடிய வில்லை. அப்படி இருக்கும்நிலை யில்... தற்போது தி.மு.க.வின் கையில் இருக்கும் பஞ்சாயத்துகளுக்கு நிதி ஒதுக்காமல், உதயகுமாரின் விசுவாச அதிகாரிகள் திணறவைக்கிறார்கள். இப்போதுகூட அ.தி.மு.க. உதய குமார் மகள் திருமணத்தின்போது ஒவ்வொரு வட்டார வளர்ச்சி அதிகாரிகளும், ஒவ்வொரு வேலையை எடுத்துக்கொண்டு விழுந்து விழுந்து செய்தார்கள். அதோடு உதயகுமாருக்கு ஒரு கோடி ரூபாய் வரை வசூ-த்துத் கொடுத்த தாகவும் சொல்லப்படுது.
எங்கள் சிலார்பட்டி பஞ்சா யத்தை எடுத்துக்கொள்ளுங்கள். எங்க ஊர் மக்கள் சுடுகாட்டுக்கு செல்ல சரியான பாதை இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டார்கள். அதற் கான சுடுகாட்டுப் பாதை அமைக்க வேண்டுமென்றால் 70 லட்ச ரூபாய் வரை எஸ்டிமேட் போட்டுக் கொடுத்தோம். அதற்கு 5 லட்சம் வரை லஞ்சமாகக் கேட்டார் வட்டார வளர்ச்சி அதிகாரி ஆசிக். சம்மதிக்காததால் இந்தப் பணியைச் செய்யவிடாமல் முட்டுக்கட்டை போட்டுவருகிறார். அ.தி.மு.க. சேர்மன் பாவடையானின் மனைவி சண்முகபிரியாதான் சேர்மனாக வெற்றிபெற்றார். ஆனால் பாவாடையான்தான் செயல்படுகிறார். அதேபோல் குளியல் தொட்டி, பொதுக்கழிப் பறை மற்றும் ஆதர்ஷ்யமான் திட்டத்தில் கம்மாயைத் தூர்வார 60 லட்சம் ஒதுக்கீடு செய்தார்கள். அதையும் இன்றளவும் தொடங்காமல் இழுத்தடித்து வருகிறார் இந்த அதிகாரி. இப்படி எந்த திட்டமும் தி.மு.க. பஞ்சாயத்து களில் நடக்காதபடி முட்டுக்கட்டை போட்டுவருகின்றனர். தி.மு.க. ஆட்சியிலும் இந்தப் பகுதியில் தன்னை அமைச்சர் போலவே நினைத்துக்கொண்டு, தன் ஆதரவு அதிகாரிகள் மூலம் எல்லோரையும் ஆட்டிப்படைக்கிறார் உதயகுமார். அதனால் வேறு வழியின்றி உயர்நீதி மன்றத்தில் ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் மீது இதுவரை 6 வழக்குகள் போட்டிருக்கிறேன்''’என்றவர், தனக்கு கடும் நெருக்கடி கொடுக்கப்படுவதாகவும் கூறி, அது குறித்தும் விவரித்தார்.
"அரசின் திட்டமான மக்கும் குப்பை மக்காத குப்பை யைப் பிரித்து எடுக்க, பட்டா இடத்தில் தொட்டி கட்டினோம். அதற்கும் அ.தி.மு.க. சேர்மன் தூண்டுத-ல் பேரில், அங்கிருக்கும் அருந்ததியர் சமூக மக்கள், அங்கு குப்பைகளை வைக்கக்கூடாது என்று, இடிக்க வந்தார்கள். காவல்துறையில் புகார் கொடுத்தபோது, காவல் ஆய்வாளர் பத்மநாபன் என்மீது பி.சி.ஆர். வழக்கு போடுவேன் என்று, மிரட்டுகிறார். மேலும் அந்த மக்களிடம் நான் சாதியைச் சொல்-த் திட்டியதாகப் புகார் வாங்கி வைத்திருக்கிறார். அதற்கு முழுக்காரணம் சேர்மன் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரி ஆசிக் ஆகியோர்தான். இதனால் முன்ஜாமீன் வாங்க அலைந்துகொண்டு இருக்கிறேன்'' என்றார் விரக்தியாக.
இதுகுறித்து, சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர் பத்மநாபனிடம் கேட்டபோது, "நான் யாருக்கும் ஆதரவாக இல்லை. நான் பி.சி.ஆர். வழக்கு போடுவேன் என்று யாரையும் மிரட்டவில்லை. எங்கள் காவல்நிலைய ஏட்டு பரமசிவன்தான், அவர் மகனிடம் பேசியிருக்கிறார். அதுபற்றி எனக்குத் தெரியாது. ஆனால் அருந்ததியர் மக்கள், அவர் சாதியைச் சொல்-த் திட்டினார் என்று புகார் கொடுத்துள்ளனர். அதுதொடர்பாக விசாரிக்கதான் அவரை அழைத்தோம். இன்றுவரை அவர் வர மறுக்கிறார்''” என்றார் சலனமில்லாமல்.
வட்டார வளர்ச்சி அதிகாரி ஆசிக்கோ, "என் மீது ஞானசேகரன் புகார் கொடுத்தாரா? முத-ல் அதைக் கிழித்துப் போடுங்கள். அவர் வழக்கு தொடர்ந்தால் தொடுக்கட்டும். என்னை யாராலும் ஒன்றும் செய்யமுடியாது. நான் யாரிடமும் லஞ்சம் கேட்கவில்லை. கேட்டதற்கு ஆதாரம் இருக்கிறதா?''’என்று ஆவேசமாகக் கேட்டுவிட்டுப் பாதியிலேயே தொடர்பைத் துண்டித்துவிட்டார்.
தமிழகத்தில் திருமங்கலம் தொகுதி யில் மட்டும் அ.தி.மு.க. ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.