புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி அரசுதான் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆனாலும் கடந்த 2016-21 காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மத்திய பா.ஜ.க. அரசு கிரண்பேடி மூலம் குடைச்சல் கொடுத்து வந்ததைப் போலவே தற்போது கூட்டணி அரசு இருக்கின்ற சூழ-லும் குடைச் சலைக் குறைத்துக்கொண்ட பாடில்லை எனத் தெரி கிறது. கூட்டணியில் இருந்துகொண்டே ஆளுங்கட்சி எம்.எல். ஏ.க்களுக்கு தூண்டில் போடுவதை ஒன்றிய அரசு தொடர்ந்தபடி இருக்கிறது. மேலும், பா.ஜ.க மற்றும் பா.ஜ.க ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏக்களின் குடைச்சல்களால் நொந்துபோயுள்ளார் ரங்கசாமி. என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏக்களே, ‘கூட்டணியை விட்டு வெளியேறி தேர்தலைச் சந்தித்து தனிப்பெரும் பான்மையுடன் ஆட்சி அமைப்போம்’ என கொந் தளிக்குமளவுக்கு நிலைமை விபரீதமாகியிருக்கிறது.

dd

இதுகுறித்து புதுச்சேரி அரசியல் பார்வையாளர்களிடம் விசாரித்ததில், "என்.ஆர்.காங் கிரஸை எதிர்பார்க்காமல், தமக்குக் கிடைத்த 6 எம்.எல்.ஏ.க்களுடன் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் கொலப் பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக், அங்காளன், சிவசங்கரன் ஆகியோ ரையும் சேர்த்துக் கொண்டதுடன், தமது கட்சியினர் மூவரை நியமன எம்.எல்.ஏ.க்களாகவும் நியமித்து பலத்தை 12 ஆக்கிக்கொண்டது பா.ஜ.க. தம்மிடம் வந்த எம்.எல்.ஏ.க் களுக்கு வாரியத்தலைவர் பதவி வாங்கித்தரலாம் என பா.ஜ.க முயற்சிக்க, வாரியங்கள் நஷ்டத்தில் உள்ளதால் இப்போது வாய்ப்பில்லை எனக் கைவிரித்து விட்டார் முதல்வர் ரங்கசாமி. இதனால் ரங்கசாமி மீது கடுப்பில் உள்ளார்கள் பா.ஜ.க ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள்.

Advertisment

கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் கூட, புதிய மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்கியதில் கோடிக்கணக்கில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டியவர்கள், "நீரை உறிஞ்சும் ஆலைகளை அனுமதிக்க மாட்டேன் எனும் கொள்கையோடு இருக்கும் முதலமைச்சர், இந்த ஆலைகளுக்கு அனுமதி அளித்தது ஏன்?' எனக் கிடுக்கிப்பிடி போட்டனர். அடுத்ததாக, செப்டம்பர் 19ஆம் தேதி, சட்டப் பேரவை வளாகத்தில் அமைச்சர் நமச்சிவா யம் தலைமையில், சபாநாயகர் செல்வம், பா.ஜ.க. மாநிலத் தலைவர் செல்வம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்ட கூட்டத்தில், "முதல்வர் ரங்கசாமி கூட்டணி தர்மத்தை மதிக்க வில்லை. மத்திய அரசின் நிதிதான் செலவிடப் படுகிறது. ஆனால் நமது கட்சி எம்.எல். ஏக்களின் தொகுதிகளுக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை. நம்மைத் திட்டமிட்டுப் புறக்கணிப்பதால் நமது ஆதரவை வாபஸ் வாங்கினால் என்ன?' எனக் குமுறியுள்ளனர்'' என்கிறார்கள்.

pp

Advertisment

இந்த நிலையில், கடந்த 23-ஆம் தேதி, பா.ஜ.க ஆதரவு சுயேட்சையான திருப்புவனை தொகுதி எம்.எல்.ஏ. அங்காளன், "தனது தொகுதியில் எந்தவிதப் பணிகளையும் செய்ய விடாமல் தடுக்கும் முதலமைச்சர் பதவி விலக வேண்டும்' என வலியுறுத்தி சட்டசபை வளாகத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவரிடம் பேசினோம், "என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்டு நான் வெற்றி பெற்றதால் எனது தொகுதிக்கு எந்தவிதத் திட்டங்களையும் முதலமைச்சர் அனுமதிப்பதில்லை. 3 கோயில் கமிட்டிகளில் அவரது கட்சி ஆட்களையே நியமித்துள்ளார். தொகுதி எம்.எல்.ஏ. என்ற முறையில் என்னிடம் கலந்தாலோசிக்கவில்லை. கூட்டணிக் கட்சிகளைப் புறக்கணிக்கும் முதலமைச்சர், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கேட்பதைச் செய்கிறார். பா.ஜ.க. இங்கு வளரக்கூடாது என்ற நோக்கத்தில் என்னை மட்டுமல்லாது பா.ஜ.க.விற்கு ஆதர வளித்து வரும் அனைவரையும் புறக்கணிக்கிறார். அதனால்தான் முதலமைச்சர் பதவியிலிருந்து வெளியேற வேண்டும் என்கிறோம். இதுபற்றி பா.ஜ.க. தலைமைக்கு புகார்களை அனுப்பியுள்ளேன்'' என்றார். இவ ருக்கு ஆதரவாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரமும் போராட்டத்தில் இறங்கினார். இவரது (காலாப் பட்டு)தொகுதியில் இவரை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியுற்ற செந்தில் கவுண்டருக்கு முதலமைச்சர் ரங்கசாமி ஆதரவாக இருக்கிறார் என்கிற கடுப்பு.

இதனிடையே, கூட்டணி தர்மத்தை மீறி முதல்வரை மாற்றக் கோரும் பா.ஜ.க. மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களுக்கு கண்டனம் தெரிவித்த என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், முதலமைச்சர் ரங்கசாமியைச் சந்தித்து, "திட்டமிட்டே அவமானப்படுத்துகிறார்கள். தன்மானத்தை இழக்க முடியாது. கூட்டணியிலிருந்து வெளியேறி தேர்தலைச் சந்திக்கலாம்” எனக் கூறியுள்ளனர். அதற்கு ரங்கசாமி, "பார்த்துக்கொள்ளலாம், பேசிக்கொள்ளலாம்" என வழக்கம்போல அமைதிப்படுத்தியுள்ளார். ஆனாலும் செய்தியாளர் களிடம் பேசிய என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏவும், அரசு கொறடாவுமான ஏ.கே.டி.ஆறுமுகம், "ரங்கசாமி 4 முறை முதலமைச்சராக இருந்துள்ளார். கூட்டணி தர்மத்தை மீறிப் பேசுகிறார்கள். எந்த நிலையிலும் எங்கள் கட்சியின் தன்மானத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம்'' என்றார்.

dd

இதுகுறித்து அமைச்சர் நமச்சிவாயம், "கூட்டணியில் இரு கட்சிகளும் ஒருமித்துதான் தேர்தலைச் சந்திக்கிறோம். இப்போது போய் எங்களால் நீங்கள் வெற்றி பெற்றீர்களா… உங்களால் நாங்கள் வெற்றி பெற்றோமோ எனப் பேசியதை அவர்கள் தவிர்த்திருக்கலாம். எங்கள் கூட்டணியின் தலைவர் முதலமைச்சர் ரங்கசாமிதான். தொடர்ந்து எங்கள் முழு ஆதரவு அவருக்கு உண்டு''’ என்றார்.

இதனிடையே புதுச்சேரியில், ஆபரேஷன் தாமரையை கையிலெடுத்து முழு பா.ஜ.க ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என சில பா.ஜ.க. மற்றும் ஆதரவு எம்.எல்.ஏக்கள், கட்சியின் சில நிர்வாகிகள், பா.ஜ.க. மேலிடத்திற்குக் கொண்டுசெல்ல, சபாநாயகர் செல்வம் மேலிடத்திடம், "இதுபோன்று செய்தால் நமக்குத்தான் இழப்பு ஏற்படும். மக்களின் அதிருப்திக்கு ஆளாவோம். பெரும்பான்மை சமுதாயத்தைச் சேர்ந்த ரங்கசாமி மீது கைவைத்தால் பா.ஜ.க.வுக்கு பாதிப்பு அதிகமாகும். எனவே கட்சியை வளர்ப்பதில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது" என ஆலோசனை கூறினாராம்.

டெல்லி தலைவர்களைச் சந்தித்துவிட்டு புதுச்சேரி திரும்பிய சபாநாயகர் செல்வம், 28-ஆம் தேதி என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை அழைத்து சமரசம் செய்து வைத்தார். அப்போது என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், "சுயேட்சை எம்.எல்.ஏ அங்காளன் தனிப்பட்ட காரணங்களை முன்வைத்து முதலமைச்சரை மாற்றச் சொல்வது எந்த வகையில் சரி?'' எனக் கேள்வியெழுப்ப, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களோ, "கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்துவிட்டு, இப்போது உங்களால்தான் நாங்கள் வெற்றி பெற்றோம்'' எனச் சொல்கிறீர்களே?" என எதிர்க்கேள்வி கேட்டனர்.

சபாநாயகர் செல்வம், "கூட்டணியில் நிலவும் சிறு சிறு பிரச்சினைகளை மறந்து மக்களுக்கு சேவை செய்ய உறுதியோடு இந்த கூட்டணி தொடர வேண்டும் என முடி வெடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி 5 ஆண்டுகளை நிறைவு செய்யும். முதலமைச்சர் பதவி விலக வேண்டும் எனக் கூறுவது தவறானது என அங்காளனுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது'' என்றார்.

இருதரப்பிலும் சமரசம் நடை பெற்றுள்ளதாகக் கூறினாலும் சபாநாயகரைச் சந்திக்கச் செல்வதற்கு முன் சட்டசபை வளாகத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட் ஜான்குமார், பா.ஜ.க. ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கர், கோலப்பள்ளி ஸ்ரீநிவாஸ், அசோக், ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு ஆகியோர் கலந்துரையாடிய வீடியா ஒன்று வலம் வந்துகொண்டிருக்கிறது. அதில் அங்காளன், "மறுபடியும் தேர்தல் வைக்க முடியுமா என அவர்கள் கேட்கிறார்கள். 30 தொகுதிகளையும் கலைத்து விட்டு வையுங்கள். பார்க்கலாம். யார் காலில் யார் விழுந்து எப்படி ஜெயித்தார்கள் என அப்போது தெரியும்'' எனக் கூறுகிறார். ஜான்குமாரோ, "ரங்கசாமியை ஆதரிக்கும் சுயேட்சைகள், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்குகிறார். இப்படிச் செய்வதன் மூலம் தனக்கான ஆதரவை 13 என அதிகப்படுத்திக் கொள்கிறார். நமக்கு சேர்மனாவது கொடுக்க வேண்டாமா?'' எனக் கூற, அதற்கு அங்காளன், "சேர்மன் எல்லாம் வேண்டாம், குறைந்தபட்ச மரியாதையாகக்கூட நடத்த வேண்டாமா?'' என்கிறார்.

இந்தப் பிரச்சினையில் சமரசத் தூதுவராக சபாநாயகர் செல்வம் செயல்படும் நிலையில், புதுவையில் துணை நிலை ஆளுநர், முதலமைச்சர், இவர்களைத் தாண்டி முக்கிய ஆளுமையாக சபாநாயகர் செல்வம் வர நினைக்கிறாரோ எனும் கேள்வி எழுகிறது. ‘ஸ்பெஷல் முதலமைச்சராக செல்வம் மாற நினைக்கிறாரோ எனும் குற்றச்சாட்டை எழுப்புகின்றன எதிர்க்கட்சிகள். என்னதான் சமரசம் செய்து வைத்தாலும், ரங்கசாமியின் செயல்பாடு மீது பா.ஜ.க.வினருக்கும், கூட்டணிக்கு ஆதரவு தரும் சாக்கில் ஆளுங்கட்சிக்கு தொடர் குடைச்சல் தரும் பா.ஜ.க.வின் போக்கால் என்.ஆர்.காங்கிரஸ் தரப்புக்கும், ‘நீறு பூத்த நெருப்பாக’ இருக்கும் புகைச்சல் என்றைக்கு பற்றியெரியுமோ என்ற நிலைதான் தொடர் கிறது.