சென்னையில் ஏற்படும் வெள்ளப்பாதிப்பு களை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழை நியமித்திருக்கிறது தமிழக அரசு. இவரது தலைமையில், பல்வேறு துறை களைச் சார்ந்த 13 வல்லுநர்களும் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். தலைமைச் செயலாளர் இறையன்புவின் சகோதரர் தான் திருப்புகழ் என்பதால் எதிர்மறை விமர்சனங் களை ஏற்படுத்தியிருக்கிறது அந்த நியமனம்.

"நியமனத்தில் நடந்த உண்மைகள் என்ன?' என்பது குறித்து தலைமைச்செயலக அதிகாரிகள் தரப்பில் விசாரித்தோம்.

c

நம்மிடம் பேசிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், "ஒவ்வொரு வருடமும் மழை -வெள்ளத்தால் சென்னை மாநகரம் தத்தளித்து வருகிறது. சென்னை மாநகராட்சியில் 20 வருடங்களுக்கு மேலாக, ஒரே சீட்டில் அமர்ந்திருக்கும் அதிகாரிகள்தான் இதற்கு காரணம்.

Advertisment

"இனி இதுபோன்ற மழை -வெள்ளத்தில் மக்கள் பாதிக்கக்கூடாது; அதற்கான நிரந்தர தீர்வை காணும் வகையில் ஆய்வு நடத்தி அறிக்கை தாருங்கள்' என சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங்பேடிக்கு உத்தரவிட்டார் முதல்வர் ஸ்டாலின். இதற்கான தீர்வைக்காண வல்லுநர் கமிட்டி ஒன்றை அமைக்க முடிவு செய்தார் பேடி. கமிட்டியின் தலைவராக யாரை நியமிக்கலாம் என தேசிய பேரிடர் மேலாண்மைத் துறையின் அதிகாரிகள், சுற்றுச்சூழல் அதிகாரிகள், சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனத்தின் உயரதிகாரிகள் என பலரிடமும் அவர் ஆலோசித்தபோது... அவர்கள் பரிந்துரைத்தப் பெயர்தான் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ்.

மத்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மைத் துறை யில் கொள்கை மற்றும் திட்டங்களை வகுக்கும் பிரிவின் கூடுதல் செயலாளராக பணியாற்றியவர். குஜராத் பூகம்பம் உள்பட இந்தியாவில் நடந்த பல்வேறு இயற்கைப் பேரிடர்களை ஆய்வுசெய்து அதனை தடுப்பதற்கான தீர்வை கண்டிருப்பவர்.

ககன்தீப்சிங் பரிந்துரைத்த அந்த கோப்பு தலைமைச் செயலாளர் இறையன்புவின் ஒப்புத லுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கோப்பினை பார்வையிட்ட இறையன்பு, "திருப்புகழ் எனது சகோதரர் என்பதால் இதற்கு ஒப்புதல் தருவது ஆரோக்கியமானதில்லை. அவரை பரிந்துரைப்ப தில் எனக்கு உடன்பாடில்லை. தேவையற்ற விவாதங்களை ஏற்படுத்தும் இந்த நியமனத்தில் என்னால் கையெழுத்திட இயலாது. முதலமைச்சர் தான் இதில் முடிவெடுக்க வேண்டும்'' என அந்த கோப்பில் எழுதி, அதனை திருப்பி அனுப்பி வைத்துவிட்டார்.

Advertisment

இதனையடுத்து அந்த கோப்பு, முதல்வரின் கவனத்துக்காக அவரது அலுவலக செயலாளர் களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதனை பார்வையிட்டதோடு, திருப்புகழின் நியமனத்துக்கு ஒப்புதலளித்து உத்தரவிட்டார். அதன்பிறகே, திருப்புகழ் தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, அதற்கான ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.

இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு விசயம், "கமிட்டியின் சேர்மன் மற்றும் உறுப்பினர்கள் எவருக்கும் சம்பளம் இல்லை என்பதுதான்'‘என்கிறார்கள் கோட்டை அதிகாரிகள்.