நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் சிறைவைக்கப்பட்டுள்ள தங்களது மகள்கள் லோபமுத்திரை, நந்தினியை மீட்கக்கோரி அவர்களது தந்தை ஜனார்த்தன சர்மா குஜராத் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், உள்துறை அமைச்சகம் பதிலளிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த ஜனார்த்தனன்- உமேஷ்வரி தம்பதிக்கு நான்கு மகள்கள். ஆன்மிகத்தில் ஆர்வமுடைய இவர் தனது நான்கு மகள்களையும் பெங்களூரிலுள்ள நித்தியானந்தாவின் கல்வி நிறுவனத்தில் படிக்கவைத்தார். 2013-ல் அவர்களை படிக்க சேர்த்த நிலையில், 2019-ஆம் ஆண்டு அவர்களது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்காமலே, நான்கு பேரையும் குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள நித்தியானந்தா வின் யோகினி சர்வயக்ஞபீடம் ஆசிரமத்துக்கு மாற்றிவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஜனார்த்தனன் தனது மகள்களைப் பார்க்கச் சென்றபோது, அவர்களைப் பார்க்க அனுமதிக்காமலே திருப்பியனுப்பினர் நித்தியானந்தா ஆசிரமத்தினர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nithy_38.jpg)
ஜனார்த்தனன் காவல் நிலையத்தில் புகார் செய்தார். குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பிலும் முறையிட்டார். இதையடுத்து ஜனார்த்தனின் இளைய மகள்கள் இருவரும் மீட்கப்பட்டனர். ஆனால் லோபமுத்ரா, நந்திதா இருவரும் பெற்றோருடன் வர மறுத்துவிட்டதாகக் கூறி அனுப்பப்படவில்லை. இதனையடுத்து, குஜராத் ஆசிரமத்துக்கு வரும் பக்தர்களிடமிருந்து நன்கொடை வசூ லிப்பதற்காக அந்த இளம்பெண்களை சட்டவிரோதமாக கடத்தி சிறை வைத்ததாக அகமதாபாத் போலீஸ் வழக்குப் பதிவுசெய்தது.
அடுத்தகட்டமாக, குஜராத் உயர் நீதிமன்றத்தில் தன் மகள்களை மீட்க ஆட்கொணர்வு மனு தாக்கல் செய் திருந்தார் ஜனார்த்தனன். தன் மகள் களை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென ஜனார்த்தன சர்மா கோரியிருந்த நிலையில், மூன்றாண்டு கள் ஆன நிலையிலும் இரு பெண் களும் போலீசாரால் மீட்கப்பட வில்லை. இந்நிலையில் ஜனவரி 13, 2013 அன்று நீதிபதிகள் என்.வி.அன்ஜாரியா, நிரால் ஆர்.மேத்தா அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. 2019-ல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தும், நீதிமன் றம் பல உத்தரவுகள் பிறப்பித்திருந்தும் இன்றைய தேதிவரை இருவரும் மீட்கப்படவில்லை என தெரிவித்தார் ஜனார்த்தனன் தரப்பு வழக்கறிஞர்.
மத்திய உள்துறை அமைச்சகம் உள்பட, காவல்துறை வரை அந்த இரு பெண்களையும் கண்டுபிடிக்க மேற் கொண்ட முயற்சிகள் குறித்த பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யாதது ஏன் என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nithy1_15.jpg)
“ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்யப்பட்ட பிறகு நீதிமன்றம் சில உத்தரவுகளைப் பிறப்பித்தது. "நீண்ட இடைவெளிக்குப் பின் இப்போது உத்தரவுகள் பரிசீலனைக்கு வந்த போதும் பலனெதுவும் கிட்டவில்லை. விசாரணை, காணாமல் போன இரண்டு பேரின் தனிப்பட்ட சுதந்திரத் தைப் பாதுகாப்பது, கவலையில் இருக்கும் தந்தையின் துயரத்தை நிவர்த்தி செய்வது என அனைத் திலும் அதிகாரிகள் பின்தங்கியுள்ள தாக, தங்கள் அதிருப்தியையும் வெளிப்படுத்தினர் நீதிபதிகள்.
இதனால் அரசுத் தரப்பில் அந்த இரு பெண்களையும் கண்டுபிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் குறித்த பிரமாணப் பத்திரங்களை விரைவில் தாக்கல் செய்வதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் உறுதியளித்தார்.
அந்தப் பெண்கள் இருவரும் தாங்கள் இருக்கும் இடத்தை வெளிப்படுத்தாமல், சென்ற வருடம் பிப்ரவரி மாதம் யு.என்.ஹெச்.சி.ஆரின் பிரதிநிதி மற்றும் அமெரிக்க வழக்கறிஞர் துணையுடன், ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய நிரந்தர தூதுக்குழுவில் ஆஜராக ஒப்புக்கொண்டனர். ஆனால் சொன்னபடி ஆஜராக வில்லை.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nithy2_5.jpg)
வழக்கறிஞர் பி.பி.நாயக், "அந்த இரு பெண் களையும் கடைசியாக ஏப்ரல் 2022-ல்தான் தொடர்பு கொள்ள முடிந்தது. அதன்பிறகு அவர்கள் சென்ற இடம் தெரியவில்லை'' என கூறினார்.
இதையடுத்து நீதிபதிகள், அந்த இரு பெண்களும் இந்தியாவுக்கு வெளியே, மத அதிகாரமிக்க சிலரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுவதால், மத்திய உள்துறை அமைச்சகமும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவேண்டுமென உத்தரவிட்டனர். மேலும் அந்த இரு பெண்களின் நிலையை அறியவும், அவர்களது விருப்பம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளவும் வீடியோகால் அழைப்பு போன்ற ஆன்லைன் வசதிகள் மூலம் நீதிமன்றத்தில் தெரிவிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள மூத்த வழக்கறிஞர் பி.பி.நாயக்குக்கு உத்தரவிட்டனர்.
"நீதிமன்றத்துக்கு முறையான பதிலளிக்கப்படும்' என தெரிவித்த நாயக், "இந்த மனு குஜராத் உயர்நீதிமன்றத்தின் வரம்பில் வராது. எனவே இதனை இந்நீதிமன்றம் கையாள முடியாது' என ஆட்சேபம் தெரிவித்தார்.
"இதுகுறித்து அடுத்த விசாரணையின்போது கவனிப்போம்' என்று கூறிய நீதிபதிகள், வழக்கை பிப்ரவரி 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-01/nithy-t.jpg)