டந்த வெள்ளிக் கிழமையன்று அதி காலை முதலே சென்னை, திரு நெல்வேலி, மதுரை, சிவகங்கை, கோவை, தென்காசி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள், அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தடைசெய்யப்பட்ட அமைப் பினர் ஊடுருவல் செய்தனரா? வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றனரா? என்ற சந்தேகத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியது.

seeman

வெள்ளிக்கிழமை அதிகாலையில் திருச்சி சண்முகா நகரிலுள்ள நாம் தமிழர் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளராகவும், செய்தித் தொடர்பாளராகவும் இருக்கும் சாட்டை துரைமுருகன் வீடு, சிவகங்கை இளையான்குடியில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த விஷ்ணுபிரதாப் வீடு, கோவை மாவட்டம் காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி முருகன் வீடு, ஆலாந்துறை பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் வீடு ஆகியனவற்றில் தொடர்ந்து 3 மணி நேரமாக சோதனை நடத்திய என்.ஐ.ஏ., கட்சி அலுவலகத்திலிருக்கும் நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக் 7-ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பியது. சோதனையில், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில்... புத்தகங்கள், செல்போன்கள், லேப்டாப், மெமரி கார்டுகள், சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டதாக முதல் தகவல் வெளியானது.

க்யூ பிரிவு அதிகாரி ஒரு வரோ, "இன்றைய சோதனைக்கான தொடக்கம் 2022, மே 20 சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். அதிலிருந்து கைத்துப்பாக்கி, துப்பாக்கி தயாரிக்கும் உதிரிபாகங்கள், கத்தி, முகமூடி உள்ளிட்ட ஆயுதங்கள் கிடைக்கப்பெற்றன. ஆயுதங்களைக் கைப்பற்றிய போலீஸார் அவற்றைக் கொண்டுவந்த பொறியியல் பட்டதாரி சஞ்சய்பிரகாஷையும், எம்.சி.ஏ. பட்டதாரி நவீன் சக்கரவர்த்தியை யும் கைதுசெய்தனர். இதேவேளையில் இவர்களுக்கு உதவியதாக சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்த கபிலர் என்ற நபரையும் கைதுசெய்தனர். இவர்கள் செட்டிசாவடியில் வாடகைக்கு அறையெடுத்து யூடியூப் வீடியோ பார்த்து, துப்பாக்கி தயாரித்தது தெரியவர, இவர்களுக்கு தேச விரோதக் கும்பலுடன் தொடர் புள்ளதா? என்பது குறித்து அன்று விசாரணை நடத்தினோம். பின்னாளில் இது தேசிய விவகாரமென்பதால் என்.ஐ.ஏ. இந்த வழக்கை கையிலெடுத்தது'' என்றார்.

Advertisment

seeman

இதேவேளையில், "ஆலாந் துறை பழைய தபால் நிலைய வீதியில் வசிக்கும் மோகனின் மகன் ரஞ்சித்குமார். தனியாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி, அதன்மூலமாக பலரிடம் பணம் பெற்றதும் தெரியவந்தது. நாம் தமிழர் கட்சியில் 2020-2021ஆம் ஆண்டில் கட்சியின் ஐ.டி. விங் உறுப்பினராக இருந்தவர். அதே போல காளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகன். திருச்சியைச் சேர்ந்த இவர் கோவையில் கடந்த பத்து ஆண்டுகளாக வசித்து வருகிறார். நாம் தமிழர் கட்சியின் குருதிப் பாசறை உறுப்பினராக இருந்தவர், விசாரணைக்கு உட் படுத்தப்பட்டுள்ள இரண்டு நபர்களும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நாம் தமிழர் கட்சியிலிருந்து நீக்கப் பட்டனர்'' என நாம் தமிழர் கட்சியின் கோவை மாவட்டப் பொறுப்பாளர் வஹாப் அவசர அவசரமாக அறிவித்தது சலசலப்பை உருவாக்கியது.

Advertisment

"சிறியவர்களை எல்லாம் சோதனை என்ற பெயரில் கிராமங்களுக்குச் சென்று அச்சுறுத்திப் பார்த்துள்ளனர். எனவே, நானே விசாரணைக்கு செல்ல இருக்கிறேன். என்.ஐ.ஏ. சோதனை அவசியமற்றது. சட்டத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால், நடவடிக்கை எடுக்கட்டும். சி.ஏ.ஏ. குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் பேசும்போது, இது இஸ்லாமியர்களுக்கும், தமிழர்களுக்கும் எதிரானது என்று அவர் பேசிய காணொலி இருக்கிறது. எனவே, அவர்கள் இப்படி ஒவ்வொருவராக சோதனை செய்துவிட்டு, தேர்தல் நேரத்தில் என்னை வந்து தூக்குவார்கள். அவர்களது நகர்வுக்கு எவ்வளவு தூரம் தடையாக இருப்பேன் என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால், என்னைத் தூக்குவார்கள்'' என சீமான் கூறிய நிலையில், "சட்டத்துக்குட்பட்டுதான் நடவடிக்கை எடுப்போம்'' என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், நீதிபதி சுந்தர்மோகன் அடங்கிய அமர்வு முன்பு உறுதியளித்தது என்.ஐ.ஏ.

விசாரணையின்போது, "ஜெர்மனியிலிருக்கும் சீலனைத் தெரியுமா..? அவரை யார் அறிமுகம் செய்தது.? தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை அவர் தலைமையில் மீண்டும் கட்டமைக்க இளைஞர்களை ஒன்றுதிரட்டி வரு கிறீர்களா..? யூடியூப் வீடியோ பார்த்து, துப்பாக்கி தயாரித்த சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தியை அறிமுகப்படுத்தியது யார்..?'' என பொதுவான கேள்விகளையே தொடுத்தனர் என்.ஐ.ஏ. அதிகாரிகள். ஆனால் அவர்களுக்குக் கிடைத்த ஆவணங்கள் அதிகம். சீமானுக்கே தெரியாமல் கட்சியில் இருந்துகொண்டே தனி டிராக் எடுத்து சில சட்டவிரோத வேலைகளைச் செய்துவரு கின்றனர் சிலர் என்பதைத்தான் கூறுகிறது என்.ஐ.ஏ.வின் சோதனை. சீமான் அவர்களை நம்புகிறார். ஆனால் இது சீமானுக்கே கேடாய் முடியும்'' என்கின்றனர் விசாரணையின் உடனிருந்த தமிழ்நாடு காவல்துறையினர்.

7-ஆம் தேதி விசாரணைக் குப் பிறகு யாரெல்லாம் கைது செய்யப்படப்போகிறார்கள் என்பது தம்பிகளின் கேள்விகள்..?

படங்கள்: விவேக்

________________

சாட்டை துரைமுருகனுக்கு சம்மன்!

seeman

நாம் தமிழர் கட்சியினைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் தடை செய்யப்பட்ட இயக்கத்தினருடன் தொடர்பிலிருப்பதாகவும், வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னை, திருநெல்வேலி, சிவகங்கை, மதுரை, கோவை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பிப்ரவரி 2-ஆம் தேதி காலை முதல் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகனின் திருச்சி சண்முகா நகர் வீட்டில் காலை 6 மணிக்கு நுழைந்த 5 பேர் கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள், அவருடைய மனைவி மாதரசியிடம் விசாரணை நடத்திவிட்டு, வருகின்ற 7-ஆம் தேதி சென்னையிலுள்ள அலுவலகத்தில் நேரில் வந்து ஆஜராக சம்மன் வழங்கியுள்ளனர்.

-துரை.மகேஷ்

__________

இறுதிச் சுற்று!

ss

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. இவர், திருப்பூரை சேர்ந்த தனது நண்பர் கோபிநாத்துடன் இமாச்சலப் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். இமாச்சலப் பிரதேசத்தின் மலைகளுக்கிடையே இனோவா (HP 01 AA-1111) காரில் இவர்கள் பயணித்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மலைக்குன்றுகளில் கார் மோதியிருக்கிறது. இந்த விபத்தில், கார் தலைகுப்புற கவிழ்ந்து சட்லெஜ் நதியில் தூக்கி வீசப்பட்டிருக்கிறது. இதில் கார் டிரைவர் தஜ்ஜின் பலியாகியிருக்கிறார். வெற்றியின் நண்பர் கோபிநாத், சுயநினைவு இழந்த நிலையில், படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், வெற்றி துரைசாமி என்னவானார் என தெரியவில்லை. கரையோரம் நண்பர் கோபிநாத் போல் அடிபட்டுக் கிடப்பாரா என மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். மாயமான அவரை தேடும் பணிகளை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள் இமாச்சலபிரதேச காவல்துறையினர். சைதை துரைசாமிக்கு வெற்றி ஒரே மகன். துரைசாமியின் தொழில் சார்ந்த விவகாரங்களையும், மனிதநேய அறக்கட்டளையையும் வெற்றிதான் கவனித் துவந்தார். இந்த நிலையில், வெற்றியின் நண்பர் கோபிநாத்தைப் போலவே வெற்றியும் கண்டறியப்பட்டு மீண்டு வருவார் என அவரது குடும்பத்தினர் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

-இளையர்