மிழக பா.ஜ.க. தலைவரின் வெளிநாட்டு பயணத்திற்கு பிறகு 6 பேர் கொண்ட வழி காட்டுதல் குழு அமைத்து, கட்சியை வளர்ச் சிப்பாதைக்கு கொண்டுசெல்ல முயல்கிறது டெல்லி தலைமை. அதன் காரணமாகத்தான் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கடி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற் கொண்டுவருகிறார். இந்த சுற்றுப்பயணத்தின் மூலமாக, தமிழக பா.ஜ.க.வுக்கு தலைவரை மாநி லப் பொறுப்புக்கு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள னர். அப்படி வரக் கூடியவர் ஆர்.எஸ். எஸ். பின்புலத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். அதேபோல, நமக்கு விசுவாசியாக வும் இருக்கவேண்டுமென்று தூண்டில் போடு கிறாராம் நிர்மலா. அந்த வகையில், ஆர்.எஸ். எஸ். அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகம் மற்றும் பிரஷோபகுமார் பெயர்கள் அடிபட்ட போது, அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகம் மீது பல பாலியல் புகார்கள், தேர்தல் நிதி மோசடி விவகாரங்கள் எழுப்பப்பட்டுள்ளதால் அவருக்கான வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ள தாம். அதேபோல கோவை முருகானந்தம், கருப்பு முருகானந்தம், மதுரை சீனிவாசன் ஆகியோரில், கோவை முருகானந்தனுக்கு பா.ஜ.க. மா.த. ஆதரவாளர் என்பதால் நிர்மலா சீதாராமனின் ஒப்புதல் கிடைப்பது கடினம் என் கிறார்கள். அதேபோல, அடுத்துள்ள டெல்டா சிங்கம் என அழைக்கப்படும் கருப்பு முருகானந் தத்திற்கும், மதுரை சீனிவாசனுக்கும், நிர்மலா சீதாராமனும், தேசிய பொதுச்செயலாளரான பி.எல் சந்தோஷும் நெருக்கம் என்ற நிலையில், மதுரை சீனிவாசன், பா.ஜ.க. நடத்திய யாத்தி ரைக்கான செலவுகள், மற்ற கட்சி நிதிகளையும் வாரியிறைப்பதில் தயங்காதவர் என்பதால் தனக்கு வாய்ப்பு கிட்டும் என்ற நம்பிக்கை யோடிருக்கிறார். இப்படி ஒவ் வொருவரைப் பற்றிய பயோ டேட்டாவையும் சேகரித்து டெல்லிக்கு அனுப்பியுள்ளாராம் நிர்மலா சீதாராமன். இனி டெல்லி தான் இதில் முடிவெடுக்க வேண்டுமாம்.

bjp

இந்த சூழ்நிலையில், தமிழக பா.ஜ.க.வில் மாநில தலைவர் பதவிக்கான கனவில் வலம் வரக்கூடிய வானதி சீனிவாசன், கே.டி.ராகவன் இருவருமே, ஒருவரையொருவர் மிஞ்சுவதற்கு உள்ளடி வேலைகளில் ஈடுபட்டுவருகிறார் களாம். இருவருமே நிர்மலா சீதாராமனுக்கு நெருக்கமானவர்களாக இருப்பதால், அவர் மூலமாக தலைவர் பதவியைப் பெற்றுவிட லாமென்ற கனவோடு இருக்கிறார்களாம். இதில், வானதிக்கு இடைஞ்சலாக இருக்கக்கூடிய கே.டி.ராகவன், பாலியல் விவகாரத்தில் சிக்கிய காரணத்தால் கட்சியிலிருந்து விலகியிருந்து, தற்போது தலைமைப் பொறுப்புக்கு முனைப்பு காட்டுவதால், அதைவைத்தே அவரை காலி செய்யத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறதாம்.

வானதி சீனிவாசனுக்கு பா.ஜ.க. தலைவரை நீக்கிவிட்டு அந்த பதவியைப் பிடிப்பதற்கான ஆர்வம் இருப்பதைப் போலவே, காங்கிரஸ் கட்சியிலும் மாநிலத் தலைவரை மாற்ற வேண்டு மென்ற லாபி ஒன்று செயல்பட்டுவருகிறது. இப்படியான சூழலில், இரு கட்சிக்குமிடையே அண்டர்கிரவுண்ட் டீலிங் மூலம் பதவியைக் கைப்பற்றுவதற்காக ஒருவருக்கொருவர் உதவி செய்யக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்களாம். அதன்படி, பா.ஜ.க.வின் வானதி சீனிவாசன், காங்கிரஸ் வழக்கறிஞர் ஒருவருடன் முன்கூட்டியே பேசி வைத்துக்கொண்டு தனது எக்ஸ் தளத்தில் "தொடர் பாலியல் குற்றங்களால் கறைபடிந்த கை காங்கிரஸ்! உடல் மற்றும் தோலை வைத்துத்தான் தேர்தலில் பெண்களுக்கு வேட்பாளர் சீட்டுகள் வழங்கப்படுகின்றன' என பதிவு போட்டவுடன், அதற்கு பதிலடிபோல் காங்கிரஸ் தரப்பிலிருந்து சுதா என்பவரோ, "உங்கள் கட்சியில் கே.டி.ராகவன் என்ற ஒருவர் இருக்கிறாரே, அவர் தொடர்பாக ஒரு வீடியோ வந்ததே, அந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?' எனக் கேள்வி எழுப்பினார்!

ss

நாம இப்படி பதிவு போட்டால் எதிர்த்தரப்பிலிருந்து இப்படித்தான் கேள்வி வர வேண்டுமென்பதைத் தெரிந்துகொண்டே வானதி அதுபோல் பதிவு போட்டு, கே.டி. ராகவனை மீண்டும் அதே பாலியல் விவகாரத்தின் மூலம் அசிங்கப்படுத்தி, தன்னை மட்டும் முன்னிலைப்படுத்தி, தனது போட்டியாளரான கே.டி.ராகவனுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றுள்ளாராம்.

ஆனால் அதற்கு முன்னதாகவே வானதிக்கு ஆப்பு வைத்துள்ளார் கே.டி.ராகவன். அவர் டெல்லிக்கு அடிக்கடி சென்று ஜே.பி.நட்டா, ராஜ்நாத் சிங்கை சந்தித்துவருகிறாராம். அவர்களிடம் வானதியைப் பற்றி ஒட்டுமொத்த தகவல்களையும் கனகச்சிதமாகக் கொடுத்துள் ளாராம். அதேபோல், நிர்மலா சீதாராமன் அன்னபூர்ணா சீனிவாசனை மிரட்டிய வீடியோ எடுக்கப்பட்டது வானதியால் தான் என்று மாட்டிவிட்டிருக்கிறாராம். ஆக, ஒரு படத்தின் நகைச்சுவைக் காட்சியில், வடிவேலுவின் தங்கையை பெண் கேட்கப் போகும் கவுண்டமணியும், செந்திலும், தங்களைத் தாங்களே "நான் ஒரு மொள்ளமாரி'', "நான் ஒரு முடிச்சவிக்கி'' என்றெல்லாம் சொல்லிக்கொள்வதுபோல், ஒருவரை ஒருவர் போட்டுக்கொடுத்து அசிங்கப்படுத்திவருவதாக இருவரது சண்டையையும் சகிக்க முடியாமல் வேடிக்கை பார்க்கும் பா.ஜ.க. நிர்வாகிகள் புலம்பு கிறார்கள்!

இதைத்தாண்டி, இன்னும் மூன்று மாதத்தில் ஆடுமலை திரும்பி வருவதற்குள் மாநிலத் தலைவரைத் தேர்ந்தெடுக்க முனைப்பு காட்டும் நிர்மலா சீதா ராமனின் மூக்குடைக் கவே, லண்டனில் இருந்துகொண்டு அவசர அவசரமாக மன்னிப்பு கேட்டு வீடியோ போட்டு அசிங்கப்படுத்தியிருக்கிறாராம் ஆடுமலை! இப்படி, வானதி சீனிவாசன், கே.டி.ராகவன், நிர்மலா சீதாராமன், ஆடுமலை, மதுரை சீனிவாசன், கருப்பு முருகானந்தம் என ஒவ்வொருவரும் ஆளாளுக்கு காலைவாரிக்கொண்டு அடித்துக்கொண்டிருக்கும் நிலையில், வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில், வரும் டிசம்பர் இறுதிக்குள் புதிய மாநிலத் தலைவரைத் தேர்ந்தெடுக்க டெல்லி தலைமை முனைப்புடன் இருப்பதாகக் கூறுகிறார்கள் பா.ஜ.க. நிர்வாகிகள்.

-அருண்