மிழகத்தின் பள்ளிக்கரணை, பிச்சாவரம், கரிக்கிலி உள்ளிட்ட 5 சதுப்பு நிலங்கள் சர்வதேச பாதுகாப்புக்கான ராம்சர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ராம்சர் பட்டியலில் இந்தியாவின் 49 சதுப்பு நிலங்கள் இடம்பெற்றுள்ளன. தற்போது இணைக்கப்பட்ட இவற்றையும் சேர்த்து இது 54-ஆக உயர்ந்துள்ளது. 1965-ல் 5,500 ஹெக்டேராக இருந்த இந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம், 2013 கணக்கெடுப்பில் வெறும் 600 ஹெக்டேராகச் சுருங்கிவிட்டது.

Advertisment

dd

இதன்பிறகும் மாநில அரசும், தனியார் கட்டட நிறுவனங்களும் சதுப்பு நிலங்களை ஆக்கிரமித் துள்ளனர். மற்ற சதுப்பு நிலங்களும் இதுபோலவே ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிவருகின்றன. பல்லுயிர்ப் பெருக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுனாமி தடுப்பு போன்ற பல்வேறு வகைகளில் சதுப்புநிலங்கள் இயற்கைச் சமநிலைக்கு உதவுகின்றன. சர்வதேச பாதுகாப்பு பட்டியலில் இடம்பெற்ற பிறகாவது நிலைமை மாறுகிறதா பார்க்கலாம்! சதுப்பு நிலத்துக்கு நல்ல காலம் பொறந்திருக்குது!

சிங்காரச் சென்னை 2.0 திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வழியாக நகரை தூய்மையாகவும் அழகாகவும் வைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது சென்னை மாநகராட்சி. இதனால் பொது இடங்களில் சுவரொட்டி ஒட்டுபவர்கள், குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுவோருக்கு அபராதமும் விதிக்கிறது. ஏற்கெனவே பொது இடங்களில் குப்பை கொட்டிய நபர்களிடமிருந்து 5,84,820 ரூபாயும், கட்டடக் கழிவைக் கொட்டியவர்களிடமிருந்து 5,48,600 ரூபாயும், சுவரொட்டி ஒட்டியவர்களிடமிருந்து 80,400 என மொத்தமாக 12,13,820 ரூபாய் அபராதம் வசூலித்துள்ளது. மேலும் இந்த அபராத நடவடிக்கையை சென்னை மாநகராட்சி முழுவதற்கும் விரிவுபடுத்தவும் விரைவு படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதால், கண்ட இடத்திலும் குப்பை கொட்டுபவர்கள் ஜாக்கிரதை! அப்ப சென்னை அழகாகப்போகுது!

Advertisment

தீவிரவாதச் செயல்களை மேற்கொண்டதாகக் கூறி மியான்மர் ராணுவ அரசு நான்கு பேரை தூக்கில் போட்டுள்ளது. இதில் ஒரு விநோதம் என்ன வெனில் கடந்த 50 ஆண்டுகளாக, மியான்மர் அரசு யாரையும் தூக்கில் போட்டதில்லை. ஆனால் தற்போது அமைந் திருக்கும் ராணுவ- சர்வாதிகார அரசு தங்களை எதிர்த்துப் போராடுபவர்களை தீவிர வாதிகளாக முத்திரை குத்தி, அவர்களை ஒட்டுமொத்தமாக அகற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறது. தவிரவும், இவர்கள் நால்வரையும் வழக்கமான நீதி மன்றத்தில் வைத்து விசாரிக் காமல், ராணுவ நீதிமன்றத்தில் விசாரித்ததுடன், பாதிக்கப்பட்ட நால்வருக்கும் தேவையான வழக்கறிஞர்களை அளிக் காமல் ஒருதலைப் பட்சமாக விசாரித்து மரண தண் டனை விதித் துள்ளது. இதனை உலகெங்கும் உள்ள நாடுகள் கண்டித்து வருகின்றன. ஜனநாயகப் போராளி கியாமின் யு, முன்னாள் மியான்மர் சட்டமன்ற உறுப்பினர் பெயோ ஜெயா தாவ், ஹிலா மியோ அங், அங் துரா ஜா ஆகியோர் தூக்கிலிடப்பட்டதை அடுத்து, அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள பர்மியர்கள் இதற் கெதிராக கண்டனப் போராட் டங்களை நடத்திவருகின்றனர். ஜனநாயகத்தையும் தூக்குல போட்டுட்டாங்க!

dd

பூரண மதுவிலக்கு அமலிலுள்ள குஜராத் மாநிலம் போடாட் மாவட்டத்தில் அமைந்துள்ளது ரோஜிட் கிராமம். இங்கு சட்ட விரோத மாக விற்பனை செய்யப் பட்ட சாராயத்தைக் குடித்து 40 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சி ஏற் படுத்தியுள்ளது. மேலும் 18 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இறந்தவர்களில் பெரும்பாலோர் ஏழைத் தொழிலாளர்கள் ஆவர். சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சியதாக 14 பேர் கைதுசெய்யப்பட்டு, 3 எஃப்.ஐ.ஆர்.கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. சாராயம் தயாரிக்க மெதில் ஆல்ஹகால் விற்பனை செய்த எமோஸ் நிறுவனத்தின் கிடங்கு மேலாளர் ஜெயேஷ், தனது உறவினருக்கு ரசா யனத்தை விற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. விரைவில் தேர்தல் நடக்கவிருக்கும் குஜராத்தில் சாராய மரணங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் சம்பவ இடத்துக்கு விரைந்து, சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். அரசியல்ல எல்லாமே ஓட்டுக்கணக்குதான்!

Advertisment

மேகாலயாவில் பா.ஜ.க.வின் துணைத்தலைவரான பெர்னார்ட் என் மரக், தனது ரிசார்ட்டில் சிறுமிகளை வைத்து பாலியல் மையம் நடத்திய குற்றத்துக்காகக் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேகாலயாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகள் காணவில்லை என அளித்த புகாரின்பேரில் பெர்னார்ட்டின் ரிசார்ட்டில் சோதனையிடப்பட்டது. அப்போது அங்கு 400 மது பாட்டில்கள், பயன்படுத்தாத ஆணுறைகள் 500, இவற்றுடன் சட்டவிரோதமாக 6 சிறுமிகளை அடைத்துவைத்திருப்பது அம்பலமானது. இதையடுத்து பெர்னார்ட் தலைமறைவானார். இந்த விஷயத்தில் தொடர்புடைய 73 பேரை காவல்துறை கைதுசெய்தது. தலைமறைவான பெர்னார்ட் உத்தரபிரதேசத்தில் பிடிபட்டார். இவர் முன்பு மேகாலயாவில் இயங்கிய போராளி அமைப்பொன்றின் தலைவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாலியல் ஜல்சா கழகமாக்கீட்டீங்களே!

-நாடோடி