லநாள் திருடன் ஒருநாள் பிடிபடுவான் என்பதுபோல, அகில இந்திய அளவில் மருத்துவப் படிப்புக்காக ஒன்றிய அரசால் நடத்தப்படும் நீட் தேர்வுகளில், வினாத்தாள் கசிவு, மதிப்பெண்களைப் பெறுவதில் முறைகேடுகளெனத் தொடர்ந்த போதும், இந்த ஆண்டில் தான் இந்தியா முழுக்க மிகப்பெரிய அளவில் எதிர்ப்புக்களும், போராட்டங்களும், நீதிமன்ற வழக்குகளுமாக கவனம்பெற்றுள்ளது. ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 6 பேர் முதல் மதிப்பெண் பெற்றது, +2வில் பெயிலானவர்களும்கூட நீட் தேர்வில் 700 மதிப்பெண்களைப் பெற்றது, ஒட்டுமொத்தமாக 67 பேர் முதல் மதிப்பெண் பெற்றது எனப் பல்வேறு செய்திகள் சந்தேகங்களை எழுப்புகின்றன. இவற்றோடு, கருணை மதிப்பெண்களும் பெருத்த கேள்வியை எழுப்பியுள்ளன.

ss

எனவே நீட் முறைகேடுகளுக்கெதிராக பல்வேறு பயிற்சி நிறுவனங்களும், தேர்வெழுதிய தனி நபர்களுமாகப் பலரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடுத்துள்ளனர். இந்த வழக்கு களை இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வரும் நிலையில், கடந்த திங்களன்று நடைபெற்ற விசா ரணையில், தலைமை நீதிபதி சந்திரசூட், ஒன்றிய அரசை கேள்விக்கணைகளால் லெப்ட் & ரைட் வாங்கினார்!

"நீட் தேர்வுகளின் போது கேள்வித்தாள் கசியவிடப்பட்டதை ஒன்றிய கல்வி அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அது எந்தளவுக்கு லீக்கானது என்பதைத்தான் தற் போது விசாரித்து வருகிறோம். 23 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தோடு சம்பந்தப்பட்டது என்பதால், இப்பிரச்சனையால் ஏற்படும் பின்விளைவுகளையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. மறு தேர்வு நடத்துவதானால், மீண்டும் பயணம் செய்ய வேண்டும், அவர்களின் கல்வியாண்டும் தள்ளிப்போகக்கூடும்.

Advertisment

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இன்னுமா குற்றவாளிகளைக் கண்டுபிடித்துக் கொண்டிருக் கிறீர்கள்? இதில் என்ன நடந்தது என்பதை மறுத்துக்கொண்டே இருக்க முடியாது. தவறு செய்த மாணவர்களைக் கண்டறியாவிட்டால் மறு தேர்வு நடத்த உத்தரவிடுவது அவசியம்.

இந்த விவகாரத்தில் எத்தனை பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது? மாணவர்களைத் தவிர்த்து எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? என்ற விவகாரத்தை தேசியத் தேர்வு முகமை சமர்ப்பிக்க வேண்டும். சமூக ஊடகங்களில் நீட் வினாத்தாள் லீக்கானது உண்மையென்றால் இந்த வினாத்தாள் கசிவு மிகப் பெரியதாக இருக்க வாய்ப்புள்ளது. வாட்ஸ்அப், டெலிகிராம் போன்றவற்றில் கசிந்திருக்கிறது என்றால், அது காட்டுத்தீ போலப் பரவியிருக்கும். ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வுக்கான வினாத் தாள்கள் எப்போது தயாரிக்கப்படுகின்றன? எப்போது வினாத்தாள்களை அச்சிடுவதற்காக அனுப்பிவைக்கிறார்கள்? எப்போது தேர்வு மையங்களுக்கு அனுப்பிவைக்கப் படுகின்றன? போன்ற விவரங்களை தேதிவாரியாக கொடுக்க வேண்டும்'' என்று தேசிய தேர்வு முகமைக்கு நீதிபதி உத்தர விட்டுள்ளார்.

நீதிபதியின் கேள்விகள் இவ்விவகாரத்தில் நம்பிக்கை யளிப்பதாக உள்ளது.

Advertisment