வேலூர் தொகுதி எம்.பி.யாக இரண்டாவது முறையாக மக்களால் தேர்வு செய்யப்பட்டவர் கதிர்ஆனந்த். முதல்முறை எம்.பி.யானபோது தொகுதிக்குள் நன்றி சொல்லக்கூடச் செல்லவில்லை, மக்களையும் சரியாக சந்திக்கவில்லை, கட்சி நிர்வாகி களிடமும் அரவணைப்பில்லை என்கிற குற்றச்சாட்டுகள் இருந்துவந்தன. இத னால் இரண்டா வது முறை கதிர் ஆனந்த்துக்கு சீட் வழங்கக்கூடாது என தி.மு.க. நிர்வாகிகள் சிலர் மறைமுகமாக எதிர்ப்புக் காட் டினர். இதுகுறித்து கட்சித் தலைவரிடம் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி னர். ஆனால் தேர்தலுக்கு முன்பாக தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், வேலூர் மா.செ. நந்தகுமாரை அழைத்து, கதிர்ஆனந்துக்கு தான் சீட், அவரை வெற்றிபெற வையுங்கள் எனச் சொல்லியனுப்பினார். தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. போட்டி வேட்பாளராக நின்ற ஏ.சி.சண்முகம், தண்ணீராக பணத்தை செலவு செய்தும் அவரால் வெற்றிபெற முடியவில்லை. அந்தளவுக்கு தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் களப்பணி செய்து கதிர்ஆனந்தை வெற்றிபெறச் செய்தனர். வெற்றி பெற்றதும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம், கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டார் எம்.பி. கதிர்ஆனந்த். ஆனால் அணைக்கட்டு, வேலூர் தொகுதிக்குள் நன்றி தெரிவிக்கச் செல்லவில்லை, தள்ளித் தள்ளிப் போட்டுவந்தனர்.

vv

இதுகுறித்து அணைக்கட்டு, வேலூர் தொகுதி தி.மு.க. நிர்வாகிகளிடம் நாம் கேட்டபோது, "மழை வந்துவிட்டது. அடுத்ததாக, பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்துகொண்டு இருந் தது. அதனால் இந்த இரண்டு தொகுதி களுக்கு நன்றி சொல் லச் செல்லவில்லை'' என்றார்கள். ஆனால் உள்விவரமறிந்தவர் களோ, இது உண்மை யில்லை என்கிறார்கள். வேலூர் மாவட்டச் செயலாளரும், அணைக்கட்டு எம்.எல்.ஏ.வான நந்தகுமாரும், வேலூர் எம்.பி. கதிர்ஆனந்தும் எதிரும் புதிருமானவர்கள் என்பது கட்சியைக் கடந்து அனைவருக்கும் தெரியும். தன் அப்பாவால் கட்சியில் வளர்த்துவிடப்பட்ட நந்தகுமார், இப்போது தனக்கு எதிராக அரசியல் செய்வது, எம்.பி. கதிர்ஆனந்துக்கு பிடிக்கவில்லை. மா.செ.வான தன்னை மதிக்காமல் எம்.பி. கதிர்ஆனந்த் கட்சியில் செயல்படுவது நந்தகுமாருக்கு பிடிக்கவில்லை. முதல்முறை கதிர்ஆனந்த் வெற்றிபெற்று எம்.பி.யாக இருந்தபோது, அணைக்கட்டு தொகுதிக்குள் கதிர்ஆனந்தை எதற்குமே அழைக்காத மா.செ. நந்தகுமார், எம்.பி.யை வைத்து எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என வெளிப்படையாக நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை செய்திருந்தார்.

வேலூர் மாநகர செயலாளரான எம்.எல்.ஏ. கார்த்தி, அமைச்சர் எ.வ.வேலுவின் தீவிர ஆதரவாளர். துரைமுருகனை எதிர்ப்பவர். அவரும் வேலூர் தொகுதிக்குள் எம்.பி.யை அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்தியதில்லை. அதுமட்டுமில்லாமல், எம்.பி. தன் விருப் பத்துக்கு ஒ.செ., ந.செ.க்களை அழைத்து எம்.பி. நிதியைத் தருகிறார். மா.செ., மாநகர செயலாளரிடம் அதுபற்றி விவாதிப்பதில்லை. இதுவும் அவர்களுக்கு வருத்தம். அதனால் இரண்டு எம்.எல்.ஏ.க்களும் 5 ஆண்டுகள் எம்.பி.யாக இருந்த கதிர்ஆனந்தை தங்களது தொகுதிக்குள் வரவிடாமல் தடுத்துவைத்தனர். இப்போது கதிர்ஆனந்த் இரண்டாவது முறை எம்.பி.யானதும் அவரது போக்கில் கொஞ்சம் மாற்றம் உள்ளது. வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்லவேண்டுமென்று உடனே நன்றி சொல்லத் தொடங்கினார்.

Advertisment

அதே நேரத்தில், தான் பெரிய ஆள் என்கிற எண்ணமும் அவரிடம் உள்ளது. அதனால் கட்சி நிர் வாகிகளை இப்போதும் மதிப்ப தில்லை. எனவே இரண்டு எம்.எல்.ஏ.க்களும் அவர் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். மாவட்டச் செயலாளர், மாநகர செயலாளர் தேதி ஒதுக்கித் தராமல் நன்றி சொல்லப்போக முடியவில்லை. இந்த இரண்டு தொகுதிகளி லும் இருக்கும் ஒ.செ., பகுதிச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்கள் என்பதால் அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை என்கிறார்கள்.

ve

இதுகுறித்து மா.செ. நந்தகுமார் எம்.எல்.ஏ.வை நாம் தொடர்புகொண்டு கேட்டபோது, "அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் இருந்ததால் எம்.பி. தேதி ஒதுக்கவில்லை, இப்போது அணைக்கட்டு தொகுதியில் இரண்டு நாள் நன்றி தெரிவித்துவிட்டார்'' என்றார்.

Advertisment

மா.செ. தரப்பு ஆதரவாளர்களோ, "நன்றி சொல்ல எம்.பி. வரும்போது, ஆட்களை அழைத்துவர, கட்சிக்கொடி கட்ட, பட்டாசு வெடிக்க என செலவுக்கு பணம் தரவேண்டும். தேர்தலப்ப தந்தேனேன்னு சொன்னாரு எம்.பி. கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் பெரிதாக சம்பாதிக்கவில்லை. அவங்களுக்கு செலவு வைக்காதீங்கன்னு சொன்னாரு மா.செ. இவர் ஒத்துக்கல. அதனால் தான் இழுபறி. இதைச் சொல்ல ஏன் தயங்கறாங்க'' என்றார்கள்.

இதுபற்றி எம்.பி. கதிர்ஆனந்த் ஆதரவாளர் ஒருவரிடம் கேட்டபோது, "நன்றி தெரிவிக்க சென்றபோது, கட்சியினருக்கு பணமாகத் தரவில்லை. அதற்கு பதில் ஒ.செ., ந.செ. உட்பட பலருக்கும் வேலை தந்துள்ளார். நான் ஒப்பந்ததாரருக்கு வேலை தரச்செய்து நீங்க அவுங்ககிட்டப்போய் கமிஷன் வாங்கத் தேவையில்லை. நீங்களே அந்த வேலையை செய்ங்கன்னு வாணியம்பாடி ந.செ.வுக்கு 8 கோடி, ஆலங்காயம் ஒ.செ.வுக்கு 2 கோடி, குடியாத்தம் ஒ.செ.வுக்கு சில கோடிக்கு வேலைகள் தந்திருக்கார். இங்க யிருக்கற கட்சி நிர்வாகிகளுக்கும் வேலைகள் தரப் பார்த்தார். எங்களை மீறி எதுவும் செய்யக்கூடாதுன்னு இவங்க முட்டுக்கட்டையா இருக்காங்க'' என்றார். எம்.பி.க்கும், எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையேயுள்ள மோதல் முடிவுக்கு வந்தால்தான் தேர்ந்தெடுத்த மக்களுக்கு நல்லது!