"வனத்தையும் அதில் வாழும் விலங்குகளையும் மட்டுமல்ல, வனத்துக்குள் வாழும் பழங்குடியின மக்களையும் பாதுகாக்கவேண்டிய வனத்துறை எங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை யோடு விளையாடுகிறது'' என குற்றம்சாட்டு கிறார்கள் வனத்தில் வசிக்கும் மக்கள்.

school

Advertisment

தமிழ்நாட்டில் வனத்துறை நிர்வாகத்தின்கீழ் 18 பள்ளிகள் உள்ளன. பள்ளிகல்வித்துறை அதிகாரிகள் மலைமீது வந்து ஆய்வு, நிர்வாகம் செய்யமாட்டார்கள். பழங்குடியின மக்களின் கல்வி எட்டாக்கனியாகிவிடும் என்பதால் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தபோது ஜவ்வாதுமலையில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் பள்ளிகள் தொடங்கப்பட்டன. சுதந்திரத்துக்குப் பிறகும் இந்த பள்ளிகள் வனத்துறை நிர்வாகத்தின் கீழே செயல்படுகின்றன. அதுகுறித்து தமிழ்நாடு ஷெட்யூல் ட்ரைப் மலையாளி பேரவை கிளை தலைவர் சாந்தசிவன், செயலாளர் உதயகுமார் இருவரும் நம்மிடம், "நெல்லிவாசல் கிராமத்திலுள்ள மேல்நிலைப்பள்ளி யில் பத்துக்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களைச் சேர்ந்த 350 பிள்ளைகள் படிக்கிறார்கள். இது உயர் நிலைப்பள்ளியாக இருந்தபோது சாலைமறியல், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணிப்பு, உண்ணாவிரதம் நடத்தி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தவைத்தோம். தரம் உயர்த்தப்பட்டு 10 மாதங்களாகியும், பல பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர்கள் நியமனம் நடக்கவில்லை..

பாடம் நடத்தி மாணவர்கள் ஃபெயிலானால் பரவாயில்லை, பாடம் நடத்தவே ஆசிரியர் இல் லாமல் மாணவர்கள் தேர்வெழுதினால் ஃபெயில்தான் ஆவார்கள். பெண் பிள்ளைகள் ஃபெயிலானால் படிக்கச் செல்வதிலுள்ள நடைமுறைச் சிக்கல்களால் 18 வயது ஆகும்முன்பே (இப்போது 21) திருமணம் நடத்திவைக்கும் சூழ்நிலையும், மாணவர்கள் சிறார் தொழிலாளியாக திருப்பூர், கோவை, சேலம், கேரளா செல்லும் நிலையுமுள்ளது. இதனையெல் லாம் வனத்துறை அதிகாரிகளிடம் விளக்கி வனத்துறை பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்கச் சொல்லி திருப்பத்தூர் டி.எப்.ஓ அலுவலகத்தில் முறையிட்டோம். அவர் கள், வேலூர் மண்டல அலுவலகத்துக்கு கோப்பு களை அனுப்பியுள்ளோம் என்றார்கள். அவர்களோ, சென்னையிலுள்ள வனத் துறை தலைமை அலு வலகத்தில் முடிவெடுக்க வில்லை என்கிறார்கள். இப்படி பல ஆண்டு களாகச் சொல்கிறார்கள், இதனால்தான் வனத்துறை அதிகாரிகள் தங்களது நிர்வாகத்திலுள்ள பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையிடம் ஒப்படைக்க வேண்டுமெனக் கேட்கிறோம். இதற்கான மனுவை முதலமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளோம்'' என்றனர்.

Advertisment

scc

இதுகுறித்து வனத்துறை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சிலரிடம் பேசியபோது, "கடந்த 2010-க்கு பிறகு வனத்துறை நிர்வாகத்தி லுள்ள பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் நடை பெறவில்லை. புதூர்நாடு மேல்நிலைப்பள்ளியில் 15 ஆண்டுகளாக பொருளாதார பாடத்துக்கும், 7 ஆண்டுகளாக இயற்பியல் பாடத்துக்கும் ஆசிரிய ரில்லை. ஒவ்வொரு ஆண்டும் 2, 3 ஆசிரியர்கள் ஓய்வுபெறுகிறார்கள், புதிய நியமனம் எதுவு மில்லை. 18 பள்ளிகளில் மொத்தமாக தற்போது சுமார் 80 ஆசிரியர்கள் உள்ளோம். திருவண்ணா மலை டிவிஷனில் 25 ஆசிரியர்கள், திருப்பத்தூர் டிவிஷனில் 10 ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். அனைத்து பள்ளிகளுக்கும் அலுவலக ஊழியர்கள், மாணவ- மாணவியர் விடுதி வார்டன்கள், இரவுப் பாது காவலர்கள் தேவைப்படு கிறார்கள். ஆனால் எதையும் வனத்துறை பல ஆண்டு களாக நிரப்பவில்லை. வார் டன் பணிகளையும் ஆசிரி யர்களே கவனிக்கிறார்கள்.

வனத்துறை பள்ளியில் பணியாற்றும் ஒவ்வொரு பள்ளியின் தலைமையாசிரியரும் வனத்துறை, பழங்குடியினர் நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை என மூன்று துறைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்கிறோம், அறிக்கை அனுப்புகிறோம். புதிய ஆசிரியர்களை நியமியுங்கள் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டால், "நீங்கள் எங்கள் துறைக்குள் வரவில்லை வனத்துறையில் கேளுங்கள்' என்கிறார்கள். எங்களுக்கான சம்பளத்தை வனத்துறை மூலமாக வழங்குவது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை. ஆனால் ஆசிரியர், ஊழியர்கள் நியமனத்தை மட்டும் வனத்துறையினரிடம் கேட்கச்சொல்கிறது. வனத்துறை அதற்கான முயற்சியை எடுப்பதேயில்லை.

school

வனத்துறை பள்ளிகளில் ஆசிரியராகச் சேர்ந்தால் அதிகபட்சம் தலைமையாசிரியராகலாம், சி.இ.ஓ, டி.இ.ஓ என பதவி உயர்வு கிடைக்காது. இடமாறுதல்கூட இந்த 18 பள்ளிகளுக்குள் மட்டும்தான். பல ஆசிரியர்கள் ஒரே பள்ளியில் 10, 15 ஆண்டுகள் பணியாற்றிக்கொண்டு இருக்கி றார்கள். இதனால் டி.ஆர்.பி தேர்வுமூலம் தகுதிபெற்றவர்கள்கூட வனத்துறை நிர்வகிக்கும் பள்ளிகளுக்கு ஆசிரியர் பணிக்கு வருவதில்லை. இந்த பிரச்சனைகள் தீர ஒரே வழி வனத்துறை அனைத்து அதிகாரங்களைக் கொண்டு பள்ளிகளை நிர்வகிக்கவேண்டும் அல்லது தமிழக பள்ளிக்கல்வித் துறையிடம் பள்ளிகளை ஒப்படைக்கவேண்டும்'' என்றார்கள்.

இதுகுறித்து வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனை நாம் தொடர்புகொண்டு வனத்துறை பள்ளிகள் என தொடங்கியதுமே, "அந்த பள்ளிங்கயெல்லாம் வெல்பர் டிபார்ட்மெண்ட் கண்ட்ரோல்ல இருக்கு'' என்றவரிடம், நிர்வாக பிரச்சனைகள், பிள்ளைகள் பாதிக்கப்படுவது, ஆசிரியர் நியமனம் இல்லாததுகுறித்து குறிப்பிட்ட தும், “"எனக்கு அதுகுறித்து தகவல் தெரியாது, நான் அதிகாரிகளிடம் பேசிட்டு உங்களுக்கு தகவல் சொல்றேன்''’என்றார்.

வனத்துறை நிர்வாகத்தின் கீழுள்ள பள்ளிகள் குறித்த புரிதல் வனத்துறை அமைச்சருக்கே இல்லை. பிறகு எப்படி மாற்றம் வரும்?