மார்ச் 20-ம் தேதி இரவு... வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி காவல்நிலைய போலீஸார் இரவு ரோந்து பணியிலிருந்த போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே டிப்டாப்பாக உடையணிந்த இரண்டு இளைஞர்கள் சண்டை போட்டுக்கொண்டிருந் தனர். ஆளுக்கும், உடைக்கும், பேச்சுக்கும் பொருந்தாமல் இருந்ததால் சந்தேகமான போலீஸார் அவர்களிடம் விசாரித்தபோது, "நாங்க ஃப்ரண்ட்ஸ், எங்களுக்குள்ள பணப் பிரச்சனை, நீங்க போங்க" என நக்கலாகப் பதிலளித்துள்ளனர். கடுப்பான போலீஸார், "என்னடா பணப் பிரச்சனை? ஒழுங்கா பதில் சொல்லுங்கடா'' என அதட்டியதும், "40 ஆயிரம் ரூபாய பங்கு பிரிக் கறதில் பிரச்சினை'' என்றுள்ளனர்.

cc

"40 ஆயிரம் ரூபாயைப் பங்கு பிரிக்கிறோம்' என்ற பதிலைக் கேட்ட போலீஸாருக்கு பொறி தட்ட, "ஸ்டேஷனுக்கு வாங்க, நாங்க பிரிச்சித் தர்றோம்'' என நைஸாகப் பேசி காவல் நிலையம் அழைத்துச் சென்று தனித்தனியாக போலீஸ் பாணியில் விசாரணை நடத்திய போதுதான், அந்த பகீர் சம்பவத்தைச் சொல்ல... வெலவெலத்துப் போயிருக் கிறார்கள்.

"16-ம் தேதி இரவு காட்பாடியில் உள்ள ஒரு தியேட்டர் முன்னால ஒரு காதல் ஜோடி செகண்ட் ஷோ படம் பார்த்துட்டு ஆட்டோவுக்காக நின்னுக்கிட்டு இருந்தாங்க. அப்போ ஷேர் ஆட்டோவில் எங்களோடு 5 பேர் இருந்தோம். எங்க போகணும்னு கேட்டதுக்கு பிரபல மருத்துவமனை பெயரைச் சொன்னாங்க. அந்த வழியாத்தான் போகுதுன்னு சொல்லி ஆட்டோவில் ஏத்திக்கிட்டோம். அந்தப்பொண்ணு ரொம்ப அழகா இருந்தது. கிரீன் சர்க்கிள் வந்து வேலூர் போகாம, அப்படியே சத்துவாச்சாரி ரோட்ல போனோம். அவுங்க டவுட்டாகி கேட்டாங்க. ரோடு க்ளோஸ், அதனால் சுத்திக்கிட்டு போகுதுன்னு சொல்லி கலெக்டர் ஆபீஸ் பின்பக்கத்தல பாலாற்றங்கரையில் இருட்டான பகுதியில் அந்தப் பொண்ணோட இருந்தவனை அடிச்சித் துரத்திட்டு, அந்தப் பொண்ணை தூக்கிக்கிட்டுப்போய், அதைக் கத்தவிடாம வாய அடைச்சிட்டு, மாறி, மாறி நாங்க'' என்றவர்கள்... "அதுக்கிட்டயிருந்த செல்போனப் பறிச்சோம். ஏ.டி.எம். கார்டு மூலமா 40 ஆயிரம் பணத்தை எடுத்துக்கிட்டு, வெளியே சொன்னால் கொலை செஞ்சிடுவோம்னு மிரட்டி துரத்திட்டோம். அந்தப் பணத்தைப் பங்கு பிரிப்பதில்தான் தகராறு" எனச் சொல்லச்சொல்ல போலீஸார் அதிர்ச்சி யானார்கள்.

இதனை அப்படியே எஸ்.பி. ராஜேஷ்கண்ணா வுக்கு கூறினர். வேலூர் டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் தலைமையில் விசாரணை டீம் அமைக்கப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட மற்ற மூவரும் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் தந்த தகவல், சி.சி.டி.வி. கேமரா ஃபுட்டேஜ், ஏ.டி.எம். கார்டு டீடெய்ஸ் மூலமாக அந்த காதல் ஜோடியைக் கண்டறிந்து, அவர்களிடம் தனிப்படை போலீஸார் பேசியபோது, வெளிமாநிலத்தைச் சேர்ந்த அந்த இளம்பெண், அவரது காதலர் இருவரும் மருத்துவத்துறையில் பணியாற்றுவது தெரிந்தது. உடல்ரீதியாக பாதிக்கப்பட்ட இருவரும் மருத்துவமனை யில் அட்மிட்டாகி சிகிச்சை பெற்றுள்ளனர். "என்னுடைய அடையாளம் வெளியே தெரிந்தால், என் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். அதனால்தான் புகார் தரவில்லை" எனப் பயத்தோடு போலீஸாரிடம் கூறியுள்ளார். அந்தப் பெண்ணுக்கு தைரியமும், நம்பிக்கையும் தந்து, "உங்களைப் பற்றிய எந்தத் தகவலும் வெளியே வராது. நாங்க உறுதி தர்றோம்'' எனச் சொல்லி, ஆன்லைன் மூலமாகப் புகாரைப் பெற்று வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisment