மோடி ஆட்சியின் முதல் வெர்ஷனே (2014-19) இந்தியப் பொருளாதாரத்திற்கு போதுமான டேமேஜ் கொடுத்துவிட்டது. அப்போதே 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி ஆட்சியைப் பிடித்துவிட்டு, "பக்கோடா போட்டால் நீங்களும் தொழிலதிபர்தானே' என பேசினார். தனிப் பெரும்பான்மை இருக்கும் இரண்டாவது வெர்ஷனில், இன்னும் தீவிரமாக உடைத்து நொறுக்குகிறது மோடி அரசு.
இதைக் கண்டிக்கும் விதமாக ஜனவரி 08-ஆம் தேதி அகில இந்திய அளவில் ஒருநாள் வேலைநிறுத்தம் நடத்தப்போவதாக அறிவித்தன தொழிற்சங்கங்கள். கடந்த 30-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற தேசிய திறந்தவெளி வெகுஜன மக்கள் திரள் சிறப்பு மாநாட்டிலும் இது அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களை வலுப்படுத்துவது, பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதைக் கைவிடுவது, குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.21 ஆயிரமாக உயர்த்துவது, பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவருவது பொதுத் துறை வங்கிகளை ஒருங் கிணைக்கும் முயற்சியைக் கைவிடுவது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் ஜனவரி 08-ந் தேதி நடைபெற்றது.
நாடு முழுவதும் 25 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். சென்னையில் மட்டுமே 30 ஆயிரம் ஊழி யர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, வங்கி, அஞ்சல்துறை மற் றும் வருமான வரித்துறை ஊழியர்கள் நூறு சதவீதம் கலந்துகொண்டு போராட் டத்திற்கு வலுச்சேர்த்தனர். இதனால், 21 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கான வங்கிப் பரிவர்த்தனை ஒரே நாளில் பாதிக்கப்பட்டது. மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மட்டுமின்றி, மதவாதக் கொள்கைகள், மாணவர்கள் மீதான கொலைவெறித் தாக்குதல்களைக் கண்டித்தும் இந்தப் போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் முழுமையான தாக்கம் தெரிந்தது. பிற மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காதவண்ணம் போராட்டங்கள் நடந்தன.
தமிழகத்தில் நடைபெற்ற போராட்டத்தில், தொழிற்சங்கங்களோடு தி.மு.க., காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கலந்துகொண்டு ஆதரவளித்தன. சென்னை அண்ணாசாலையில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகிய வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவனிடம் பேசியபோது, “""மோடி அரசின் மோசமான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக, 90 லட்சம் பேர் வேலையிழந்து தவிக்கிறார் கள். விவசாயிகளும், விவசாயக்கூலிகளும் கடும் பாதிப் பை சந்தித்துள்ளனர். கிராமப்புற வேலை உறுதித்திட் டத்தை முறையாக செயல்படுத்தாத காரணத்தால், பட்டினிச்சாவுகள் தொடர்கின்றன. பெட்ரோல், டீசல் விலை உச்சத்தில் இருப்பதால், அத்தியா வசியப் பொருள்களின் விலைவாசியும் கிறங்கடிக்கிறது. இதையெல்லாம் சரி செய்யாமல், குடியுரிமையில் கை வைத்து திசை திருப்பப் பார்க்கிறது'' என்றார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் வருமான வரித்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினர். ""புதிய பென்ஷன் திட் டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதி யத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 6 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும். குறிப்பாக, 56ஓ என்ற சட்டப்பிரிவை விலக்கி, பணியாளர்கள் சுமுகமாக வேலைசெய்ய வழிவகை செய்யவேண்டும்'' என்றார் வருமான வரித்துறை சம்மேளனம் பொதுச் செயலாளர் வெங்கடேசன்.
தமிழகத்தின் பிறபகுதிகளிலும் இடதுசாரி கட்சிகள், தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக் கானோர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களைக் கைதுசெய்தனர். பேருந்து வசதி பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. மாவட்டத் தலைநகரங் களிலும், முக்கிய இடங்களில் மட்டுமே போராட்டங்கள் நடை பெற்றன. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், தொ.மு.ச., ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், ஆட்டோ தொழி லாளர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் கைதுசெய்யப் பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர்.
புதுச்சேரியில் நடைபெற்ற போராட் டத்தால், போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. ஆட்டோக்கள், டெம் போக்களும் இயக்கப்படவில்லை. திரை யரங்குகளில் பகல் காட்சிகள் ரத்து செய்யப் பட்டன. பெட்ரோல் பங்குகள் திறக்கப்பட வில்லை. பெரும்பாலான வணிகப்பகுதிகள் வெறிச்சோடியே காணப்பட்டன. தனியார் பள்ளிகள் முன்கூட்டியே விடுமுறை அளித்திருந்தன.
தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. "ஒரே தேசம்' என பா.ஜ.க. சொல்லும் நிலையில் மோடி அரசை எதிர்ப்பதில் இந்த தேசம் ஒன்றாக இருப்பதை தொழிற்சங்கங்கள் வெளிப்படுத்தின.
இதேவேளையில், பெல் நிறுவனத் தின் பங்குகளை விற்பதற்கான ஒப்பு தல் வழங்கியிருப்பதுடன், ரயில்வேதுறை யை தனியார்மயமாக்கும் முயற்சியின் முன்னோட்டமாக, 100 வழித்தடங்களில் 150 தனியார் ரயில்களை இயக்கும் திட்டத்திற்கான வரைவை வெளியிட்டிருக்கிறது மோடி அரசு.
-ஜீவாதங்கவேல், அருண்பாண்டியன்
படங்கள்: அசோக், குமரேஷ்