மிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து சிறுசிறு தொகைகளாக வசூலித்து ஆயிரக்கணக்கானவர்களை ஏமாற்றும் கும்பல்கள் மீண்டும் தலையெடுக்க ஆரம்பித்துள்ளன. தமிழகத்தில் ஏற்கெனவே பல எம்.எல்.எம். நிறுவனங்கள், ஒரு லட்சம் கொடுத்தால் பத்து லட்சம் கொடுக்கப்படும் என்று பொதுமக்களை மூளைச்சலவை செய்து பல கோடிகளைச் சுருட்டி, வெளிநாடுகளில் சென்று செட்டிலானவர்கள் அநேகர். தற்போது காலத்துக்கேற்ப தங்களை புதுப்பித்துக்கொண்டு நவீன நடை முறையில் பொதுமக்களிடமிருந்து பணத்தை ஆட்டையைப் போடத் தொடங்கியுள்ளனர்.

nn

சமீபத்தில், ஸ்ரீகந்திபிரான் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் கருப்புசாமி கல்வி அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மையம் என்ற பெயரில் ஒரு கும்பல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஒரு சங்கிலித் தொடர்பை ஏற்படுத்தி, சுமார் 2,355 பேரிடமிருந்து ஆதார் எண், பான் கார்டு எண், செல்போன் எண், முகவரி என அனைத்தையும் வாங்கிக் கொண்டு, ஒரு லட்சம் கட்டினால் 1 கோடி பணம் கிடைக்கும் என்று கூறியதை நம்பி, தங்களுக்கு தெரிந்த நபர்களிடமிருந்து 10 ஆயிரம் முதல் பல லட்சங்கள் வரை பணம் வசூலித்துக் கொடுத்து ஏமாந்து நிற்கின்றனர்.

அதில் பாதிக்கப்பட்ட எடப்பாடி கவுண்டம் பட்டியை சேர்ந்த மணிகண்டன் என்பவர், கடந்த 12 ஆண்டுகளாக 12 லட்சம் ரூபாய் கொடுத்து விட்டு, 10 கோடி ரூபாய் பணம் திரும்பப் பெற்றுள்ள தாக ஒரு பொய்யான ஆர்.பி.ஐ. ஆவணங்களைக் காட்டி அவரை ஏமாற்றியுள்ளனர். அவர் தன்னுடன் தொடர்பிலுள்ள 20 நபர்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் பெற்று, அவர்களை இவர்களுடைய குழுவில் இணைத்துள்ளார். இப்படி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் வசூலித்து, பல கோடி களைச் சுருட்டியுள்ளனர். ஆனால் இதுவரை அவர்கள் சொல்லும் டிரஸ்ட் மற்றும் அதன் மேலாண் இயக்குநரை இதுவரை அவர்கள் யாருமே நேரில் பார்த்தது இல்லை என்கிறார்கள்.

Advertisment

கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் தேதி, முன்னணி தமிழ் நாளிதழில், ஒன்றிய அரசின் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் "இந்தியாவில் 13 ஆயிரத்து 520 தொண்டு நிறுவனங்களும், சங்கங்களும், 2019-2020 நிதியாண்டு முதல் 2021-2022 நிதியாண்டு வரை, ரூ.55 ஆயிரத்து 741 கோடி வெளிநாட்டு நன்கொடை பெற்றுள்ளன' எனக்கூறிய தகவல் வெளியானது. இந்தத் தகவலை அடிப்படையாகக் கொண்டு, அவர்கள் பணம் வசூல் செய்யும் வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டு, 55 ஆயிரம் கோடி பணமும் நமக்குத்தான் வருகிறது எனக்கூறி அனைவரையும் நம்பவைத்துள்ளனர்.

அதேபோல இந்த அறக்கட்டளை மற்றும் டீம் டெக் என்ற தனியார் நிறு வனத்தின் மேலாண் இயக்குந ரான மனோகரன், கரூர் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டு அலுவலகங்கள் எதுவுமில்லாமல், ஸ்ரீகந்திபிரான் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் கருப்புசாமி கல்வி அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மையத்தை நடத்துவதாகக் காட்டிவருகிறார். அதன்மூலம் உலக வங்கி, ரிசர்வ் வங்கி என மிகப்பெரிய வங்கிகளின் பெயரில் போலியான காசோலைகளை வழங்கிப் பலரை ஏமாற்றியதோடு, கோடிக்கணக்கான அளவில் பெரிய தொகையைப் பெறவேண்டுமென்றால் முன்பணம் செலுத்த வேண்டும் எனக்கூறி பலரிடம் தொடர் மோசடியில் ஈடுபட்டு வருகின்றார்.

ss

Advertisment

அதேபோல், நட்சத்திர ஓட்டல்களில் கூட்டங்களை நடத்தி, அதன்மூலம் பணம் முதலீடு செய்தவர்களுக்கு அரசு முத்திரைத் தாள்களில் தங்களுடைய பணம் பல்வேறு காரணங்களுக்காகச் செலவிடப்படுகிறது என்பது குறித்த தகவல்களை அச்சிட்டு, அதனை வழங்குவதற்கு கூட்டத் தைக் கூட்டி, விருந்து அளித்து அந்த ஆவணங்களை வழங்கி உள்ளனர். அதேபோல், ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கவும், கல்வி உதவித்தொகைக்கு வழங்கப்படுவதாகவும் காட்டிவருகின்றனர். மேலும், வெளிநாடுகளில் இந்தப் பணம் முதலீடு செய்யப்படுவதால், நாம் செலுத்திய பணத்தைவிட ஆயிரம் மடங்கு பணமாகத் திரும்பக் கிடைக்கும் எனவும் கூறி பலரை மூளைச்சலவை செய்துள்ளனர்.

தமிழகத்தில் ஒன்றன்பின் ஒன்றாக ஏமாற்றுப் பேர்வழிகள் அடங்கிய கும்பல் பேராசை உள்ள நபர்களைக் குறிவைத்து, அவர்களைத் தங்களுடைய வலையில் சிக்கவைத்து, அவர்களிடமிருந்து பல லட்சக்கணக்கான பணத்தை பறித்துக்கொண்டு, இறுதியாக அவர்கள் கொள்ளை யடித்த பணத்திலிருந்து எதையும் திருப்பித் தராமல் அவர்களை அலைக்கழித்து, பணத்துடன் நாட்டைவிட்டுச் சென்றுவிடு கின்றனர். எனவே பொருளாதாரக் குற்றப்பிரிவு அதிகாரிகள் உடனடியாக இந்த கும்பல்களைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை சமூக ஆர்வலர்களிட மிருந்து எழுந்துள்ளது. இது தொடர்பாக கரூர் மாவட்ட எஸ்.பி.யான பெரோஷ்கான் அப்துல்லாவிடம் கேட்டபோது, இந்த கும்பல்களைப் பிடிப்பதற்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்த கும்பலைப் பிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.