கோவில் அறங்காவலரை, ‘உன்னை ஒழிச்சிடுவேன்’ என நேரடியாக போன்செய்து மிரட்டிய ஆளும்கட்சி எம்.எல்.ஏ., அவரது வீட்டுக்கு தனது கார் டிரைவருடன் ஆட்களை அனுப்பி மிரட்டியது தொடர்பான ஆடியோ வெளியாகி திருப்பத்தூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை கிராமத்தில் குறிப்பிட்ட ஒரு சாதிக்கு மட்டும் சொந்தமான திருநாராயண சுவாமி திருக்கோயில் உள்ளது. அந்தக் கோவிலுக்கு பரம்பரை அறங்காவலராக 2013#ஆம் ஆண்டு பழனி நியமிக்கப்பட்டார். இவரைத்தான் திருப்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், நாட்றம்பள்ளி ஒ.செ.வுமான நல்லதம்பி மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள பழனி, "என் முப்பாட்டனர் கோவில் ஒன்றைக் கட்டினார். அதன்மீது சில சொத்துக்களை எழுதிவைத்துள்ளார். கோவிலுக்கு என 12 ஏக்கர் நிலம், 7 கடைகள் இருக்கு. அந்தக் கோவிலை நிர்வாகம் செய்துவந்தோம். என்னை அறங்காவலராக நியமிக்கச்சொல்- திருப்பத்தூர் எம்.எல்.ஏ. நல்லதம்பி கடிதம் தந்தார். வேலூரிலுள்ள அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு நான்தான் எனது பாட்டனாரின் நேரடி வாரிசு என்பதற்கான ஆவணங்களை வழங்கினேன். அதனைத் தொடர்ந்து அந்த ஆவணங்கள் மீது பரிசீலனை செய்து கடந்த 13.2.2023#ஆம் தேதி என்னை அறங்காவலராக நியமித்தார்கள்.
நான் பொறுப்புக்கு வந்தபின் வாடகை கட்டச்சொல்- கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினேன். அந்தக் கடைக்காரர்கள் சிலர் எம்.எல்.ஏ.வை அணுகியிருக்கிறார்கள். எம்.எல்.ஏ கடந்த ஒரு வாரமாக ஆட்களை வீட்டுக்கு அனுப்பி மிரட்டினார். ராஜினாமா கடிதம் தந்துவிட்டுப் போன்னு சொல்றார். எம்.எல்.ஏ.வின் பி.ஏ. வெங்கடேசன் மூன்று பேருடன் என் வீட்டுக்கு வந்து என் மனைவியை மிரட்டிட்டுப் போயிருக்கார். எம்.எல்.ஏ. வேறொரு நம்பரி-ருந்து கூப்பிட்டு "நீ வரமாட்டியாடா? காலேஜாண்ட பார்த்தேன், இறங்கி அடிச்சிருப்பேன் உன்னை என மிரட்டியவர், அசிங்கமாகப் பேசினார். மே 30#ஆம் தேதி காலை 8 மணிக்கு வெங்கடேசன் நேரடியா என்னைத் தொடர்புகொண்டு மிரட்டினார். எம்.எல்.ஏ. ஆபீஸýக்கு வான்னு சொன்னார். எல்லாரும் என்னை மிரட்டறாங்க. எனக்கும் குடும்பத்தாருக்கும் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு முழுப் பொறுப்பும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பிதான் காரணம். தி.மு.க.வில் பல ஆண்டுகளாக இருந்துவந்தேன். சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பியின் அணுகுமுறை சரியில்லாத காரணத்தால் இரண்டு நாட்களுக்கு முன்புதான் பி.ஜே.பி.யில் இணைந்தேன் என அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். அதோடு, எம்.எல்.ஏ. செல்போனில் மிரட்டும் ஆடியோ, எம்.எல்.ஏ.வின் பி.ஏ. வெங்கடேசன் மிரட்டும் ஆடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நாம் பழனியை பலமுறை தொடர்பு கொண்டபோதும், அவர் நமது லைனை எடுக்கவில்லை.
இதுகுறித்து எம்.எல்.ஏ. நல்லதம்பியை நாம் தொடர்புகொண்டு கேட்டபோது, ""அவர் என்கூடவே இருந்த நபர்தான், நான்தான் அறங்காவலர் குழுவில் நியமிக்கச்சொல்- பரிந்துரை செய்தேன். நியமனம் செய்தபின் அந்த ஊரி-ருப்பதற்கு பதில் திருப்பத்தூரில் குடியிருந்துகொண்டு கோவிலைத் திறக்காமலே வைத்திருக்கிறார், அக்கிராம மக்கள் இதனால் கோபமடைந்தனர். அந்த பிரச்சனையை பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என அன்பாகத்தான் அழைத்தேன், அவரை நான் மிரட்டவில்லை. ஒரு குடும்பத்தில் நாம் எப்படி பேசுவோமோ அப்படித்தான் அவரிடம் பேசினேன். நான் என்ன ரவுடியா ஆளனுப்பி மிரட்ட?''’என்றவர், நமது கேள்விக்கு நேரடியாக எந்தப் பதிலையும் சொல்லாமல் ""இதெல்லாம் ஒரு பிரச்சனைன்னு கேட்கறீங்களே...'' என மழுப்பினார்.
இவ்விவகாரம் குறித்து ஆளும்கட்சிப் பிரமுகர், அதிகாரிகளிடம் விசாரித்தபோது, அந்த கோவிலுக்குச் சொந்தமாக திருப்பத்தூர் காவல்நிலையம் எதிரில் பெரிய அளவில் இடம் உள்ளது. அங்கு துணிக்கடை, எலக்ரிக்கல் கடை என 7 பெரிய கடைகள் உள்ளன. கடைவைத்திருப்பவர்கள் பல ஆண்டுகளாக வாடகையே தரவில்லை எனக் கூறப்படுகிறது. அதுவே சில கோடிகள் வரும். பழைய வாடகையை விடுங்கள், இனி மாதாமாதம் வாடகை தரவேண்டும் என அந்தக் கடைகளுக்கு கோவில் அறங்காவலர் எனும் முறையில் நோட்டீஸ் விட்டுள்ளார். அவர்கள் மாதாமாதம் வாடகை கட்டினால் மாதம் 2, 3 லட்ச ரூபாய் வாடகையாகவே வரும். இதுவரை வாடகையே கட்டாமல் இருந்தவர்கள், இப்போது வாடகை கட்டச்சொல்- நோட்டீஸ் வந்ததும் என்ன செய்யலாம் என யோசித்தனர்.
அந்த கடைக்காரர்கள் இந்த விவகாரத்தி-ருந்து தப்பிக்க எம்.எல்.ஏ.விடம் உதவி கேட்டுப் போனார்கள். அவர் பழனியிடம் பேசிபோது, அது கோவில் இடம்ணே எனச் சொல்ல, அசிங்கமாகப் பேசி மிரட்டியுள்ளார். அதோடு நீ உடனே அறங்காவலர் பதவியை ராஜினாமா செய் என மிரட்டியுள்ளார். இதனால் எம்.எல்.ஏ.வை சந்திப்பதை நிறுத்தியுள்ளார். இதில் கோபமான எம்.எல்.ஏ. நேரடியாகவும், ஆட்களை வீட்டுக்கு அனுப்பியும் மிரட்டியுள்ளார். அந்த இடம் பல கோடி ரூபாய் மதிப்புக்குரியது. இதனை எம்.எல்.ஏ. தரப்பு ஆளும்கட்சி என்கிற அதிகாரத்தைப் பயன்படுத்தி பறிக்க நினைக்கிறது'' என்கிறார்கள்.
இவ்விவகாரத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு எம்.எல்.ஏ.வை கண்டிக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.