மைச்சர் களால் ஏற்படும் சர்ச்சைகளால் அதிருப்தி அடைந்து வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். சமீபத்தில் மதுரையில் நடந்த கூட்டுறவுத் துறையின் வார விழாவில் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தனக்கே யுரிய பாணியில் பேசினார்.

"கூட்டுறவுத்துறையின் செயல்பாடுகள் வெளிப்படையாக இல்லை. இந்த துறையிலுள்ள கூட்டுறவு சங்கங்கள் முழுமையாக கம்ப்யூட்டர் மயமாக்கப்படாததால் பல தவறுகள் நடக்கின்றன. நிதியமைச்சர் என்கிற முறையில் இத்துறையின் செயல்பாடுகளில் எனக்கு திருப்தி இல்லை''’என்றார்.

cmm

Advertisment

இதனால் டென்சனானார் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி. அந்த விழாவில் உணவுத்துறையைப் பற்றியும் பி.டி.ஆர். அட்டாக் பண்ணியதில், அத்துறையின் அமைச்சர் சக்கரபாணியும் கடும் கோபமடைந்தார்.

இந்த நிலையில், அமைச்சர்கள் ஐ.பெரியசாமியும் சக்கரபாணியும் இணைந்து பத்திரிகை யாளர்களை சந்தித் தனர். அப்போது பேசிய ஐ.பெரிய சாமி,‘’"முதல்வரையும் மக்களையும் நாங்கள் திருப்திப்படுத்தினால் போதும். அதற்காகத்தான் நாங்கள் செயலாற்றி வருகிறோம். ரேசன் கடைகள் பற்றியே தெரியாதவர்களை திருப்திப்படுத்த வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை''’ என்றவர், தன்னுடைய 50 ஆண்டுகால அரசியலையும் 6 முறை எம்.எல்.ஏ.வாக மக்கள் தன்னை தேர்ந்தெடுத்ததை யும் சுட்டிக்காட்டி, பி.டி.ஆருக்கு பதிலடி தந்தார்.

இதனைத் தொடர்ந்து, அமைச்சர்கள் கே.என்.நேரு, செந்தில்பாலாஜி உள்ளிட்ட பலரும் தமிழகத்தில் கூட்டுறவுத்துறையும் உணவுத்துறையும் எந்தளவுக்கு சிறப்பாக நடக்கிறது என்பதை வெளிப்படுத்தினர். அத்துடன், பி.டி.ஆர். மீது தங்களுக்குள்ள வருத்தத்தையும், கோபத்தையும் ஸ்டாலினிடம் வெளிப் படுத்தியிருக்கிறார்கள்.

Advertisment

cm

இதுகுறித்து தி.மு.க. மேலிடத் தொடர்பாளர்கள் பலரிடமும் விசாரித்தபோது, ‘’"பி.டி.ஆரின் பேச்சை அறிந்த துமே ஸ்டாலினை தொடர்பு கொள்ள ஐ.பெரியசாமியும் சக்கரபாணியும் முயற்சித்தனர். ஒரு நிகழ்ச்சியில் ஸ்டாலின் இருந்ததால் உடனடி தொடர்பு கிடைக்கவில்லை. அடுத்த 15 நிமிடத்தில் ஸ்டாலினிடம் பேசினர். அப்போது, "அமைச்சரவையில் சுட்டிக்காட்ட வேண்டிய விசயங்களையெல்லாம் பொதுவெளியில் அவர் (பி.டி.ஆர்.) பேசுவது சரியில்லை. இந்த ஒன்றரை வருடத்தில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறையில் நாம் சாதித்தவை நிறைய இருக்கிறது. என்னால் பட்டியலிட முடியும். மற்ற துறையைப் பற்றி விமர்சிப்பதற்கு முன்பு அவரது துறையை அவர் நினைத்துப் பார்த்திருக்க வேண்டும். மற்ற துறைகளைப் பற்றி குறை சொல்லக்கூடாது என்கிற நாகரிகம்கூட அவருக்கு இல்லை. அவரது பேச்சுக்கு நாங்கள் பதில் சொல்லியாக வேண்டும்'' என்றெல்லாம் ஸ்டாலினிடம் முறையிட்டிருக்கிறார் ஐ.பெரியசாமி.

அவரது ஆதங்கத்தில் நியாயம் இருப்பதை உணர்ந்தாரோ என்னவோ, பேட்டி கொடுங்கள் என அனுமதித்தார் முதல்வர் ஸ்டாலின். இதனையடுத்தே அமைச்சர்கள் இருவரும் பி.டி.ஆருக்கு எதிராக கொந்தளித்தார்கள். பி.டி.ஆரின் போக்குகள் முதல்வருக்கு வருத்தத் தைத் தந்திருக்கிறது‘’ என்று தெரிவிக்கின்றனர்.

மேலும் நாம் விசாரித்தபோது, "பி.டி.ஆர். மீது ஏற்கனவே பல புகார்களை சீனியர் அமைச்சர்கள் பலரும் சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக, டி.கே.எஸ். இளங்கோவனை அவர் மோசமாக விமர்சித்த போதும், அமைச்சர் மூர்த்திக்கும், மதுரை தி.மு.க. மா.செ.க்களுக்கும் எதிராக மிகமோசமாக அவர் விமர்சித்திருந்தபோதும் சீனியர் கள் பலரும் ஸ்டாலினிடம் புகார் வாசித்தனர்.

cm

அதாவது, அமைச்சர் பதவியிலிருப்பவர்களுக்கு பொறுமை முக்கியம். எதை பொதுவெளியில் பேச வேண்டும்; எதை அமைச்சரவையில் பேசவேண்டும்; எதை அதிகாரிகளிடம் விவா திக்க வேண்டும் என்கிற சிந்தனையும் பொறுமையும் இருக்க வேண்டும். ஆனால், தான் மட்டுமே அறிவாளி என்கிற நினைப்பு அவருக்கு. அதான் சர்ச்சைகளை உருவாக்கும் வகையில் பேசுகிறார். அவர் பேசுவது எதிர்க்கட்சிகளுக்கு பாயிண்டுகளை எடுத்துக் கொடுப்பது போல இருக்கிறது. அவர் பேசுவது நம்முடைய ஒட்டுமொத்த ஆட்சிக்கும் தான் கெட்ட பெயரை ஏற்படுத்துகிறது என துரைமுருகன், நேரு, மூர்த்தி ஆகியோர் சில மாதங்களுக்கு முன்பே ஸ்டாலினிடம் சொல்லி வருத்தப்பட்டனர்.

இந்த நிலையில்தான், கூட்டுறவுத்துறை பற்றிய பி.டி.ஆரின் தற்போதைய நெகடிவ் விமர்சனம் குறித்து தன்னிடம் அமைச்சர்கள் ஐ.பெரியசாமியும், சக்கரபாணியும் பேசியதை அடுத்து பி.டி.ஆரிடம் ஸ்டாலின் விளக்கம் கேட்க, "என் பேச்சுக்கள் தவறாக பதிவாகியிருக்கிறது. கூட்டுறவு சங்கங்களின் ஒட்டுமொத்த மதிப்பீடுகளில் வளர்ச்சி ஏற்படவில்லை என்றுதான் கூறினேன். துறையை பற்றி தவறாகப் பேச வில்லை'' என விளக்கமளித்திருக்கிறார் பி.டி.ஆர். ஆனால், அவர் பேசிய பேச்சுக்களை முழுமை யாக ஸ்டாலின் அறிந்திருந்ததால் அவரது விளக்கத்தை ஏற்கவில்லை’என்கிறார் நம்மிடம் பேசிய திமுக அமைச்சர் ஒருவர்.

இப்படி அமைச்சர்கள் மட்டுமல்ல ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இவர் மீது கடும் அதிருப்தியில்தான் இருக்கின்றனர். பல புகார்கள் இவருக்கு எதிராக இருக்கிறது. பட்ஜெட்டின் போது ஒவ்வொரு துறைகளுக்குமான திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படக்கூடிய நிதிகளைச் செலவிடுவதற்கான ஒப்புதலை நிதித்துறையிடம் பெறவேண்டும். அதற்கான கோப்புகள் பி.டி.ஆருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால், அந்த கோப்புகளை பார்வையிடாமலேயே கிடப்பில் போட்டு வைத்துவிடுகிறார்.

cc

இதனால் சம்பந்தப்பட்ட துறைகளில் திட்டங்களுக்கான அரசாணையே போடப்படாமல் முடங்கும் நிலை உருவாவதால், துறைகளின் செயலாளர்களோ, நிதித்துறை செயலாளரிடம் முறையிடுகிறார்கள். நிதித்துறை செயலாளரோ, அதனை அமைச்சர் பி.டி.ஆரிடம் நினைவுபடுத்தி சம்பந்தப்பட்ட கோப்புகளைக் காட்டினால், அதில் தேவையில்லாத கேள்விகளைக் கேட்டு கோப்பினைத் திருப்பி அனுப்பிவிடுகிறார். இதனால் பல கோப்புகள் தேக்கமடைய, சம்பந்தப்பட்ட துறையில் நடக்க வேண்டிய பணிகளும் முடங்கிவிடும். அப்படி பல விசயங்கள் நடந்திருக்கிறது.

ஒவ்வொரு துறையிலும் நிர்வாக ஒப்புதல், நிதித்துறை ஒப்புதல்னு ரெண்டு இருக்கு. நிர்வாக ஒப்புதல்ங்கிறது துறையின் செக்ரட்டரி மற்றும் அமைச்சரின் ஒப்புதல் பெறுவது. நிதித்துறை ஒப்புதல் என்பது நிதியமைச்சரின் ஒப்புதலைப் பெறுவது. பட்ஜெட்டில் இந்த திட்டங்களுக்காக இவ்வளவு நிதி ஒதுக்கீடு என தெளிவாக சொல்லப்பட்ட பிறகு, அது குறித்த கோப்புகள் வரும்போது அதற்கு நிதியமைச்சர் ஒப்புதலளிப்பதுதான் இவ்வளவு ஆண்டுகாலமும் நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால் பி.டி.ஆர். அமைச்சராக வந்த பிறகுதான் பல்வேறு துறைகளின் கோப்புகள் நிதித்துறையில் தூங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

தனியார் நிதித்துறை நிறுவனங்களிலேயே பணிபுரிந்த பி.டி.ஆர்., அரசு துறைகளிலிருந்து வரும் கோப்புகளில் சொல்லப்பட்டதைப் புரிந்துகொள்ளாமல், தனியார் நிதி நிறுவனங்கள் பாணியில் கேள்விகளைக் கேட்டு கோப்புகளைத் திருப்பியனுப்பி விடுகிறார்.

மார்ச் மாதம் தாக்கலாகும் பட்ஜெட்டில் சொல்லப்பட்ட நிதி ஒதுக்கீடுகளை, அந்த நிதியாண்டிலேயே செலவு செய்திடவேண்டும். இந்த எதார்த்தத்தை அவர் எப்போது புரிந்துகொள்வாரோ தெரியவில்லை.

ஒன்றிய அரசில் ஒவ்வொரு துறைக்கும் பட்ஜெட்டில் சொல்லப்படும் நிதி ஒதுக்கீடுகளுக்கு அந்தந்த துறையின் அமைச்சரின் ஒப்புதலே போதும். நிதித்துறையின் ஒப்புதலைக் கேட்க வேண்டியதில்லை. அதற்கேற்ப அங்கு அதிகாரங் கள் அந்தந்த துறையின் அமைச்சர்களுக்கு தரப்பட்டுள்ளது. காரணம், பட்ஜெட்டை தாக்கல் செய்வது நிதியமைச்சர். அதற்குதான் நாடாளு மன்றமும் ஒப்புதலளிக்கிறது. அதனால், துறைவாரி யான திட்டங்களுக்கான நிதி செலவினங்களுக்கு மீண்டும் நிதித்துறையின் ஒப்புதலைப் பெறத் தேவையிருப்பதில்லை. அப்படிப்பட்ட நிர்வாக முறையை ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தி யுள்ளதால் திட்டங்களும் முடங்குவதில்லை; அந்தந்த நிதியாண்டுக்கான நிதிகளும் முடங்குவதில்லை. இதே நடைமுறையை தமிழக அரசும் கடைப்பிடித்தால் கோப்புகள் தேங்குவது தடுக்கப்படும் என்கிறார்கள் ஒன்றிய அரசில் பணிபுரியும் தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.

சமீபத்தில் முதலமைச்சரின் செயலகத்திலிருந்து வந்த கோப்புகளுக்கே ஒப்புதலை தராமல் நிறுத்தி வைத்து விட்டாராம் பி.டிஆர்.! இந்த நிலையில், அமைச்சரவையிலிருந்து பி.டிஆரை எடுக்க வேண்டும் என அமைச்சர்கள் பலரும் ஒன்றிணைகிறார்கள்.

-இரா.இளையசெல்வன்

படங்கள் : ஸ்டாலின்