தி.மு.க. அமைச்சர்களுக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குமிடையே நடக்கும் லடாய் அதி கரித்துவருகிறது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங் கும் நிலையில், அமைச்சர்களின் கோரிக்கையை அதிகாரிகள் புறந்தள்ளுவது ஆரோக்கியமான தில்லை என்கிற குமுறல்கள் அமைச்சர்களிடம் கடுமையாக எதிரொ-த்தபடி இருக்கிறது.
தேர்தலையொட்டி பல்வேறு நடவடிக் கைகளை எடுத்து வருகிறது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம். குறிப்பாக, ஒவ்வொரு மாநிலத்திலும் பணியாற்றும் மாவட்ட கலெக்டர் கள், மாநகராட்சி கமிஷனர்கள், மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் பட்டியல்களை தயாரித்து வருகிறது.
அந்த வகையில், ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக பணிபுரியும் அதிகாரிகளை இடமாற்றம் செய்யுங்கள் என தமிழக அரசுக்கு சமீபத்தில் அறிவுறுத்தியிருக்கிறது தேர்தல் ஆணையம்.
தேர்தல் காலங்களில் மாவட்ட கலெக்டர்கள் தான் அந்தந்த மாவட்டத்தின் தேர்தல் அதிகாரி யாக நியமிக்கப்படுவார். அதேபோல, மாநக ராட்சிகளில் மட்டும் அந்த மாநகராட்சியின் கமிஷனர் தேர்தல் அதிகாரியாக இருப்பார். தேர்த லுக்கான கால அட்டவணை ரிலீஸ் ஆனவுட னேயே, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட மாநிலத்தின் அரசு அதிகாரிகள் அனைவரும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் அடங்குவர். இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்குரிய நோட்டிஃபிகேசன் வெளியிட இன்னும் ஓரிரு மாதங்களே இருப்பதால், ஒரே இடத்தில் மூன்றாண்டுகள் தொடர்ந்து பணிபுரியும் அதிகாரிகளை இடமாற்றம் செய்யுங்கள் எனும் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ஏற்று மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்கள் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய முடிவு செய்தது தி.மு.க. அரசு.
முதல்கட்டமாக காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிற தி.மு.க. அரசு, கலெக்டர்கள் மற்றும் கமிஷனர்களை ட்ரான்ஸ் ஃபர் செய்யும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அனேகமாக, பொங்கல் முடிந்ததும் கலெக்டர்கள் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். மாற்றல் பட்டியல் ரிலீஸ் ஆகும். இந்த இடமாற்ற-ல்தான் அமைச்சர் களுக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும் மோதல் வெடித்தபடி இருக்கிறது”என்கிறது கோட்டை வட்டாரம்.
இதுகுறித்து நாம் விசாரித்தபோது, "ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் என்பது முதல்வரின் ஆலோசனையின்படி தலைமைச்செயலாளர் உத்தரவு போடுவார். ஆனால், தற்போதைய தலை மைச் செயலாளர் சிவ்தாஸ்மீனா, ஒரு பொம்மை யாக இருக்கிறார். முதல்வரின் முதன்மைச் செயலாளரான முருகா னந்தம், நிதித்துறைச் செயலாளர் உதயச் சந்திரன் ஆகி யோரின் அட் வைஸ்களுக்கு இயங்குபவராக இருக்கிறார் சிவ்தாஸ்மீனா.
அந்த வகையில் ஐ.ஏ. எஸ். அதிகாரி களின் இடமாற்றல் பட்டியலை முருகா னந்தம், உதயச் சந்திரன் டீம் தயாரிக்கிறது. மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றும் கலெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரி களை மாற்றுங்கள் என்றுதான் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், இரண்டே கால் வருஷம், இரண்டரை வருஷம் முடிந்த அதிகாரி களையும் மாற்றும் முடிவுகளை எடுத்துள்ளது இந்த டீம்.
கலெக்டர்களை மாற்றுகிறார்கள் என்பதை அறிந்த அமைச்சர்களும் தி.மு.க. மா.செ.க்களும், தேர்தல் காலத்தில் தங்களுக்கு தோதான அணு சரணையான அதிகாரிகளைத்தான் கலெக்டர் களாகவும், எஸ்.பி.க்களாகவும் நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதற் கேற்ப குறிப்பிட்ட அதிகாரிகளை நியமியுங்கள் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள் அமைச்சர் கள். ஆனால், அப்படியெல்லாம் போடமுடியாது; அதிகாரிகள் நியமனத்தில் அரசியல் செய்யாதீர்கள் என மறுத்துள்ளார் உதயச்சந்திரன்.
அதேபோல, அருகருகே இருக்கும் மாவட்ட கலெக்டர்களை இடமாற்றம் செய்யுங்கள்; தமிழகத்தைச் சேர்ந்த நேரடி ஐ.ஏ.எஸ்.கள் அல்லது கன்ஃபர்ட் ஐ.ஏ.எஸ்.களை கலெக்டர்களாக கொண்டு வாரு ங்கள் என அமைச்சர்கள் சொன்ன யோசனையும் முருகானந்தம், உதயச்சந்திரன் டீமிடம் எடுபடவில்லை. அதே சமயம், தங்களுக்கு நெருக்கமான அதிகாரிகளாக இருந்தால் மட்டும் மீண்டும் கலெக்டர் வாய்ப்புகளை தூக்கிக் கொடுக்கிறது இந்த டீம். ஆனால், அமைச்சர்களின் விருப்பத்தை மட்டும் நிறைவேற்றுவதில்லை.
தேர்தல் நேரத்தில் அமைச்சர்களின் உத்தரவுகளுக்கு கட்டுப்படாமல் இருப்பவர்கள் தமிழக அரசிலுள்ள வட இந்திய ஐ.ஏ.எஸ்.கள் தான். அதனால், நேரடி (டைரக்ட்) ஐ.ஏ.எஸ்.சாக இருக்கும் வட இந்திய அதிகாரிகளையே கலெக் டர்களாக நியமிக்க இந்த டீம் திட்டமிட்டுள்ளது. இதைத்தான் மத்திய பா.ஜ.க. அரசு விரும்புகிறது; எதிர்பார்க்கிறது. அதை நிறைவேற்றும் முகமாக, அமைச்சர்களின் கோரிக்கைகளை முருகானந்தமும், உதயச்சந்திரனும் புறந்தள்ளுகிறார்கள்.
இதற்கிடையே, மாவட்ட கலெக்டர்களும், எஸ்.பி.க்களும் அமைச்சர்களுக்கு நெருக்கமாக இருந்துவிடக்கூடாது; நெருக்கமாக இருந்தால் நிர்வாகத்தை திறமையாகக் கையாள முடியாது என கமெண்ட் பாஸ் பண்ணியிருக்கிறார் உதயச்சந்திரன். இதையெல்லாம் அறிந்துள்ள அமைச்சர்கள், இந்த டீம் மீது ஏகத்துக்கும் கோபம் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், தங்களின் கோரிக்கை எடுபடாததால், முதல்வர் ஸ்டா-னிடம் முறையிட முயற்சித்து வருகிறார்கள் சீனியர் மந்திரிகள். தேர்தல் நேரத்தில் அமைச்சர்களுக்கும் ஐ.ஏ.எஸ்.களுக்குமான மோதல் அதிகரிப்பது நல்லதல்ல''’என்று சுட்டிக்காட்டுகிறார்கள் கோட்டையிலுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.
தி.மு.க.வின் சீனியர் மா.செ.க்கள் சிலரிடம் விசாரித்தபோது, "நிதித்துறை செயலாளராக இருக்கும் உதயச்சந்திரன், இதற்கு முன்பு முதல்வரின் முதன்மைச் செயலாளராக இருந்தார். அப்போது, மாவட்ட அளவிலான சில பிரச்சனைகளை அவரிடம் எடுத்துச் சென்றபோது, தி.மு.க. கரை வேட்டிக் கட்டிக்கொண்டு யாரும் என் அறைக் குள் வராதீர்கள்; எதுவாக இருந்தாலும் உங்கள் முதல்வரிடம் (ஸ்டா-ன்) பேசிக்கொள்ளுங்கள் என முகத்தில் அடித்த மாதிரி துரத்திவிட்டார் உதயச்சந்திரன். தி.மு.க.வினரைக் கண்டாலே அவருக்கு எட்டிக்காயாக இருக்கிறது.
இப்படி பல சம்பவங்கள் அவருக்கு எதிராக இருந்ததால்தான் அவரை நிதித்துறை செயலாளராக மாற்றினார் முதல்வர். ஆனாலும், இப்போதும் முதல்வரின் ஆக்டிங் செயலாளராகத்தான் இயங்குகிறார். அதனாலேயே சீனியர் ஐ.ஏ.எஸ்.கள் கூட அவரின் அதிகாரத்துக்கு பயப்படுகிறார்கள். சீனியர் அதிகாரிகளே அப்படியென்றால், நாங்களெல்லாம் எம்மாத்திரம்? தி.மு.க. ஆட்சியில் இந்த அதிகாரிகளின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் ஒரு ட்ரான்ஸ்ஃபர்கூட எங்களால் போட முடியவில்லை. அட்லீஸ்ட் தேர்தல் நேரத்திலாவது எங்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்தானே!
இதற்கு முன்பு தி.மு.க., அ.தி.மு.க. எந்த ஆட்சியாக இருந்தாலும் தேர்தல் நேரத்தில் தங்களுக்குத் தேவையான அதிகாரி களை மாவட்ட கலெக்டர்களாக அமைச்சர் களும் மா.செ.க்களுக்கும் கொண்டுவருவார் கள். அதற்கேற்ப இடமாறுதல் நடக்கும். எடப்பாடி தலைமையிலான முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில், அமைச்சர்களும் மா.செ.க்களும் சொன்ன அதிகாரிகள்தான் கலெக்டர்களாக நியமிக்கப்பட்டார்கள். அதனால்தான், கொங்கு மண்டலத்தில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றியது அ.தி.மு.க.
பெரும்பாலும் தேர்தல் நேரத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவாகத்தான் முதல்வரை சுற்றியுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் செயலாற்றுவார்கள். ஆனால், இந்த முறை தி.மு.க. ஆட்சியில் அது தலைகீழாக இருக்கிறது. இப்படியிருந்தால், இந்தமுறை 10 எம்.பி.க்களை தமிழகத்தில் பெறுவோம் என பா.ஜ.க. அண்ணாமலையின் உதார்கள், நிஜத்தில் சாத்தியமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதெல்லாம்தான் எங்களை பயமுறுத்துகிறது.
அதாவது, எந்த கோணத்திலும் அதி காரிகளின் ஒத்துழைப்பு எங்களுக்கு கிடைக் காதபோது, தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணையத்தையும் அதற்கு கட்டுப்பட்டு இயங்கும் அதிகாரிகளையும் நாங்கள் எப்படி எதிர்கொள்ள முடியும்? அதனால், இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டா-ன் தலையிட வேண்டும்''’என்கிறார்கள் மா.செ.க்கள்.
முதல்வரைச் சுற்றியுள்ள அதிகாரிகளுக்கு எதிராக ஸ்டா-னிடம் புகார் தெரிவிக்க மா.செ.க்கள் தயங்குவதால், அமைச்சர் உதயநிதியிடம் முறையிடக் காத்திருக்கிறார்கள். இட மாறுதல் விவகாரத்தில் அமைச்சர்கள் ஜெயிக்கிறார்களா? ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஜெயிக்கிறார்களா? என்பது விரைவில் தெரியவரும் என்கிற விவாதம் கோட்டையில் பரபரத்துக் கிடக்கிறது!
______
இறுதிச் சுற்று!
அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்கள், "கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்' என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, கட்சியின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓ.பி.எஸ்.ஸுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், முகமதுஷபீக் அமர்வு இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை வியாழக்கிழமை (11-01-24) வாசித்த நீதிபதிகள், "தனி நீதிபதியின் தீர்ப்பு செல்லும். அ.தி.மு.க.வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்ஹெட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பி.எஸ்.ஸுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும். தனி நீதிபதியை அணுகி தேவைப்பட்டால் நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம்'' என்று உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பு, ஓ.பி.எஸ்.ஸுக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருந்தாலும், மீண்டும் சட்டரீதியாக மோதிப் பார்க்கும் முடிவில் இருக்கிறாராம் ஓ.பி.எஸ்.
-இளையர்