"ஹலோ தலைவரே, அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம் தொடர்பான ஹாட் நியூஸ் என்னிடம் இருக்கு.''”

"என்னப்பா? நம்மகிட்டயே சஸ்பென்ஸா? பிரவீன் சக்கரவர்த்தி பற்றிச் சொல்லப் போறியா?''”

"உண்மைதாங்க தலைவரே, எனக்கு முன்பே எல்லா விவரத்தையும் நீங்க கேதர் பண்ணி இருப்பீங்கன்னு தெரியும். இருந்தாலும் சொல்றேன். தி.மு.க. மேலிடத்தின் கோபத்தைக் கிளறிய பி.டி.ஆரின் ஆடியோவுக்குக் காரணமானவர்தான் இந்த பிரவீன் சக்கரவர்த்தி என்கிற இண்டலெக்சுவல் திருடர். பி.டி.ஆரை குறி வைத்து, பா.ஜ.க. தரப்பு செய்த சதிதான் அந்த ஆடியோன்னு ஒட்டுமொத்த தி.மு.க.வும் நம்பிவந்த நிலையில், அதற்கு மாறாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் டேட்டா அனலிசிஸ்ட் பிரிவின் சேர்மனாக இருக்கும் இவர்தான், அந்த ஆடியோ வில்லன்னு தெரியவந்திருக்கு. யார் இந்த பிரவீன் சக்கர வர்த்தின்னு இவரோட ஜாதகத்தை நாம் கிளறியபோது ஏகப்பட்ட திகீர் பகீர் தகவல்கள் நமக்குக் கிடைத்தது.''”

Advertisment

rr

"மகிழ்ச்சி. உனக்குத் தெரிஞ்ச தகவலை எல்லாம் கொட்டு?''”

"சர்வதேச லெவலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த பிரவீன் சக்கரவர்த்தி, நம்ம சென்னைக் காரர் என்பது கொசுறுத் தகவல். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், எப்படியோ. ராஜஸ்தானில் உள்ள பிரபல பிட்ஸ் பிலானி பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்துவிட்டு, ஐ.பி.எம். மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற பெரிய பெரிய சாஃப்ட்வேர் நிறுவனங்களில் வேலை பார்த்திருக்கார். இதற்கிடையே அமெரிக்காவில் உள்ள வார்ட்டன் ஸ்கூல் பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ. முடித்துவிட்டு, அமெரிக்காவில் உள்ள தாமஸ் வீசல் என்கிற நிதி முதலீட்டு நிறுவனத்தில் 2003-ல் சேர்ந்திருக்கார் சக்கரவர்த்தி. இவருடைய திறமையை நம்பிய அந்த நிறுவனம், ஒரு ரிசர்ச் டீமை உருவாக்கும் அசைன்மெண்ட்டோடும், ஏகப்பட்ட டாலர்களோடும் அவரை 2005-ல் மும்பைக்கு அனுப்பிவைத்ததாம்.''”

Advertisment

"இங்க வந்ததும் சக்கரவர்த்தி தன் வேலையைக் காட்ட ஆரம்பிச்சிட்டாரா?''”

"அதேதாங்க தலைவரே நடந்திருக்கு. மும்பையில் சக்கரவர்த்தி தொடங்கிய அந்த ரிசர்ச் டீம், சற்று வளர்ந்த நிலையில், 2007-ல் அந்த முழு டீமையும் அழைத்துக் கொண்டு, அப்படியே பி.என்.பி. பரிபாஸ் என்கிற பிரஞ்ச் நாட்டு நிறுவனத்தில் சேர்ந்துவிட்டார். இதை அறிந்து ஷாக்கான தாமஸ் வீசல் நிறுவனம், சக்கரவர்த்தி, தங்கள் வாடிக்கையாளர்களின் தகவல்கள் உட்பட தங்கள் நிறு வனத்தின் அனைத்து ரகசியங்களையும் திருடிச் சென்று விட்டதாகவும், இதனால் பல கோடி டாலர்கள் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுவிட்டதாகவும், கலிபோர்னியாவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. சக்கரவர்த்தியோ, அந்த வழக்கை இந்தியாவுக்கு வந்து போடுங்கள். நான் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்று, பி.என்.பி. நிறுவன அட்வைசரான பிரபல சீனியர் வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் மூலம் சொல்ல, அதை அந்த தாமஸ் வீசல் நிறுவனம் ஏற்கவில்லை.''”

"பிறகு?''”

"இந்த வழக்கு ஒரு பக்கம் போய்க்கொண் டிருக்க, இதுக்கு மத்தியில், மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் ’நிதி ஆயோக்’அமைத்த கமிட்டியுடன் சேர்ந்து, சில புராஜெக்டுகளிலும் பிரவீன் சக்கரவர்த்தி இறங்கி இருக் கிறாராம். இவ்வளவு ரணகளத்திற்குப் பிறகு, பா.ஜ.க.வின் எதிர்முகாமான காங்கிரஸ் கட்சியின், டேட்டா அனலிசிஸ்ட் பிரிவின் சேர்ம னாக வந்து உட்கார்ந்திருக்கிறார் இந்த சக்கரவத்தி. இவருக்குச் சொந்தமாக மும்பையிலும் அரியானா விலும் பங்களாக்கள் இருகின்றனவாம். இவருக்குப் பொழுதுபோக்கு என்றால், அங்கு ஆண், பெண் ஜர்னலிஸ்ட்டுகளை வரவழைத்து, அவர்கள் மூலம் பிரபல அரசியல் புள்ளிகளிடம் பேச வைத்து, அவர் கள் கக்கும் ஏடாகூடத் தகவல்களைப் பதிய வைப் பதுதானாம். அப்படி யாரோ ஒருவரை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனிடம் பேச வைத்துதான், அந்த வில்லங்க ஆடியோவை சக்கர வர்த்தி பதிவு செய்ததாகச் சொல்லுகிறார்கள்.''”

"ம்...''”

"பிரவீன் சக்கரவர்த்தியின் இப்படிப்பட்ட தில்லாலங்கடி வேலைகள் பற்றி, காங்கிரஸின் முக்கிய புள்ளிகள் பலருக்கும் தெரியும் என்கிறார் கள். இந்த பிரவீன் சக்கரவர்த்தியிடம், கூட்டணிக் கட்சியில் இருக்கும் ஒருவரைக் குறிவைத்து இப்படிச் செய்யலாமா? என கேட்டபோது, நான் அந்த ஆடியோவை வெளிப்படுத்தவில்லை. இஸ்ரேல் நாட்டுத் தயாரிப்பான பெகாசஸ் உளவுக் கருவியின் மூலம், மோடி அரசு என்னிடம் இருந்து இதைத் திருடி இருக்கலாம்’ என்று நம்பமுடியாத விளக்கத்தைத் தெரிவித்தாராம் சக்கரவர்த்தி. மேலும், இந்த விவ காரத்தில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனி வேல் தியாகராசனின் கேரக்டரை டேமேஜ் பண்ணுவதற்காகத்தான், இதையெல்லாம் அவர் ஒரு பெண் ஜர்னலிஸ்ட்டிடம் பேசினார் என்று பொய்யாக, திட்ட மிட்டு செய்தியைப் பரப்பினாராம். இப் படிப்பட்ட ஒருவரை காங்கிரஸ் எப்படி விட்டு வைத்திருக்கிறது என்பது கேள்விக்குறி. மேலும் காங்கிரஸ் கட்சி யில் காலியாக உள்ள ராஜ்ய சபா சீட்டு களில் ஒரு சீட் டைப் பெற பிரவீன் சக் கரவர்த்தி முயற்சித்து வருகிறாராம். இது குறித்தெல்லாம் தீர விசாரிக்காமல் தி.மு.க. தலைமை, இந்த விவகாரத்தில் எதனால் அவசர முடிவுகளை எடுத்தது? என்கிற டாக், டெல்லி தரப்பில் அடிபட்டுக்கொண்டு இருக்கிறது.''”

"சரிப்பா, வெளிநாட்டுப் பயணத்திலிருந்து திரும்பி இருக்கும் முதல்வர் ஸ்டாலினை, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்திருக் கிறாரே?''”

"ஆமாங்க தலைவரே, டெல்லியின் அதிகாரத்தை ஒன்றிய அரசு குறைத்திருக்கிறது. இது இந்திய அரசமைப்புக்கே எதிரானது என்று போர்க்கொடி பிடித்துவரும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பல்வேறு மாநில முதல்வர்களையும் சந்தித்து, தங்களுக்கு ஆதரவு கேட்டுவருகிறார். அந்த வகையில்தான் சென்னை வந்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்திருக்கிறார்.''

rr

"தென்னிந்தியாவுக்கான இலங்கைத் தூதர் வெங்கடேஷ்வரன், நடிகர் ரஜினியை சந்தித்திருக் கிறாரே?''’

"இலங்கை அண்மைக்காலமாக பொருளா தார நெருக்கடியில் சிக்கித் தவிச்சிக்கிட்டு இருக்கு. இலங்கையைப் பொறுத்தவரை சுற்றுலா மூலம் கிடைக்கும் வருவாய்தான் அதற்கு பிரதானம். அதனால் அங்குள்ள சுற்றுலாத்துறையின் வருமானத்தைப் பெருக்கும் நோக்கத்தோடு, ஆசிய நாடுகளிலும் புகழ்பெற்ற நம் நடிகர்களில் ஒருவரான நடிகர் ரஜினியை, இலங்கையின் சுற்றுலா துறைக்குத் தூதுவராக நியமிக்க, இலங்கை அரசு விரும்புது. அவரை நியமித்தால், அவர் அங்கே பயணித்து அங்குள்ள பொழுதுபோக்கு மற்றும் ஆன்மீக சுற்றுலாத்தலங்களுக்குச் சென்று, அது குறித்து விளம்பரம் செய்தாலே அது பெரிய அளவில் ரீச்சாகும் என்பது சிங்கள அரசின் எதிர்பார்ப்பு.''”

"சிங்கள அரசின் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற ரஜினி ஒத்துக்கொண்டாரா?''”

"ரஜினியின் சம்மதத்தை இதற்கு பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில்தான், இலங்கைத் தூதரக அதிகாரியான வெங்க டேஸ்வரன், ரஜினியை அவரது போயஸ்கார்டன் இல்லத்தில் சந்தித்தார். இலங்கையின் திட்டம் முழுதையும் அவ ரிடம் தூதர் விவரித்திருக்கிறார். எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக்கொண்ட ரஜினி, இதுக்கு ஒத்துக்கிட்டால், தமிழகத்தில் எதிர்ப்பு வரலாம்னு கருதி, உடனே தனது ஒப்புதலைத் தரலை. கொஞ் சம் யோசிப்பதாகச் சொல்லி, தூதரை அவர் அனுப்பி வச்சிருக்கார். இந்தத் தகவல் தெரிந்ததும் தமிழ்த் தேசிய அமைப்பினர், கொந்தளிச்சிட்டாங்க. ஈழத் தமிழர்களுக்கு எதிராக அங்கே நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றத்துக்கு இன்னும் நீதி கிடைக்கலை. அங்குள்ள இனவாத அரசு, மனம் திருந்தியதாகவும் தெரியவில்லை. அப்படி இருக்க, அவர்களுக்கு ரஜினி உதவிக்கரம் நீட்டினால், அது ஈழத் தமிழர்களை மேலும் புண்படுத்துவதுபோல் ஆகும் என்று இலங்கையின் விருப்பத்துக்கு சிகப்புக்கொடி பிடிக்கிறார்கள்.”

"இப்ப பா.ஜ.க. மாநில நிர்வாகி ஒருவர் அதிரடியாகக் கைதாகி இருக்காரே?''”

"ஆமாங்க தலைவரே, பா.ஜ.க.வின் நெசவாளர் அணியின் பொறுப்பாளராக இருக்கும் மிண்ட் ரமேஷ் என்பவர் அடிதடி, வெட்டுக் குத்து, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட அடாவடிகளில் ஈடு பட்டு வருகிற க்ரைம் பேர்வழி யாம். இவர் மீது 2 கொலை வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் இருப்ப தாகச் சொல்கிறார்கள். அண்மையில் இவர், சுமார் 5 கோடி மதிப்பிலான நிலம் ஒன்றை விற்றுத் தருவ தாக, கமிஷனை எதிர்பார்த்து டீலிங் பேசி வந்தாராம். ஆனால், இவரது முயற்சி இல்லாமலேயே சம்பந் தபட்ட இடம், வேறு ஒருவர் மூலம் விற்பனை ஆகிவிட்டதாம். இதனையறிந்த ரமேஷ், தனது கூட்டாளி மகேசுடன் போய், நிலத்தை விற்பனை செய்த சென்னை கொரட்டூரைச் சேர்ந்த நாரா யணி என்ற அந்த பெண்மணியின் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து, அடாவடியாக அவரிடமிருந்து 45 லட்ச ரூபாயை மிரட்டிப் பறித்துச் சென்றுவிட்டாராம்.''”

"பயங்கர அடாவடியா இருக்கே?''”

rr

"ஆமாங்க தலைவரே, அதை எதிர்த்துக் கேட்ட அந்த பெண்மணிக்கு மிண்ட் ரமேஷ், கொலை மிரட்டலும் விடுத்தா ராம். இதனால் அந்த நாராயணி, போலீஸில் புகாரைக் கொடுக்க, அதன்பேரில், மிண்ட் ரமேஷையும் அவர் நண்பர் மகேஷையும் 31ஆம் தேதி அதிரடியாகக் கைது செய்து, சிறைக்கு அனுப்பி வைத்திருக்கிறது போலீஸ். இந்த மிண்ட் ரமேஷ் பல்வேறு விவகாரங்களில் பா.ஜ.க. அண்ணா மலைக்கு அடியாளாக செயல்பட்டுவந்ததாக அவர் மீது புகார் இருப்பதால், இந்தப் பணப்பறிப்பு விவகாரத்திலும் அண்ணாமலைக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறதாம். ரமேஷ் மீது மர்டர் வழக்கு உட்பட பல வழக்குகள் இருப்பது தெரிந் தும் கூட, கடந்த வாரம் நடந்த மிண்ட் ரமேஷின் இல்லத் திருமண விழாவில் அண்ணாமலை, கட்சிப் பிரமுகர்கள் புடைசூழ கலந்து கொண்டாராம்''”

"’நானும் ஒரு முக்கிய மான தகவலைப் பகிர்ந்துக் கறேன். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட ஏறத்தாழ 20 பேரின் டுவிட்டர் கணக்குகள் திடீரென 31ஆம் தேதி இரவு முடக்கப்பட்டி ருப்பது பலரையும் அதிர வைத்திருக்கிறது. ஒன்றிய அரசுத் தரப்பின் பரிந்துரை யின் பேரிலேயே இது நடந் திருக்கிறதாம். கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான மோடி அரசின் இந்த செயலுக்குக் கண்டனங்கள் குவிந்துவருகின்றன. இது குறித்து கண்டனம் தெரிவித்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், "இவர்களின் டிவிட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டிருக்கிறார். இதேபோல் கவிஞர் வைரமுத்துவும் “"கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளுங்கள். கை, கால்களைக் கட்டாதீர்கள்''’ என்று குறிப்பிட்டிருக்கிறார். கருத்துரிமைக்கான குரல்கள் வேறுபாடுகள் இன்றி தமிழகத்தில் ஒலித்து வருகின்றன.''