பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர்

பா.ஜ.க.வினர் அனைவரும் அம்பேத் கருக்கு எதிரானவர்கள் என்று திருமாவளவன் கூறியிருக்கிறாரே?

ss

ஆமாம், ஆர்.எஸ்.எஸ். ஷாகாவில் புடம்போட்டு வந்தவர்கள் அம்பேத்கர் பெருமை பேசினாலோ, அம்பேத்கர் கருத்துகளில் ஆர்வமுள்ளவர்கள்போல காட்டிக்கொண்டாலோ சந்தேகம் வருவது இயல்புதானே!

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

Advertisment

புத்தாண்டில் மாவலி ஏற்றுக்கொண் டிருக்கும் 'ரெஸெல்யூசன்' என்ன..?

தேவையில்லாமல் எந்த உறுதிப்பாடையும் ஏற்றுக்கொண்டு, அதைப் பின்பற்ற முடியாமல் நடுவிலேயே கைவிடக் கூடாது என்ற ரெஸெல்யூசன்தான்.

சிவா, கல்லிடைக்குறிச்சி

Advertisment

திருமணம் என்பது லாபம் தேடும் பிசினஸ் அல்ல என உச்சநீதிமன்றம் கூறியிருப்பது பற்றி?

நியாயம்தான். திருமணத்தில் இரு தரப்பும் ஒன்றையொன்று மதித்து லாபம் பெறலாம்,… எந்தத் தவறுமில்லை. அதைவிடுத்து வரதட்சணையாகவோ, ஒருவேளை திருமணம் ஒத்துவரவில்லையெனில் ஜீவனாம்சமாகவோ ஒரு தரப்பு மற்ற தரப்பை பிடுங்கியெடுக்க நினைக்கக்கூடாது. அதேசமயம், ஒரு ஒத்துவராத திருமண பந்தம் பிரியும்போது, தேவையுள்ள தரப்புக்கு மற்றவர் நியாயமான நிதியாதரவை நல்கவேண்டும். பிரிந்துபோகும் போதே, ஒருவர் மற்றவரை பழிவாங்கவேண் டுமென நினைத்தால் சிக்கல்கள் வந்துவிடும்.

mm

அ.யாழினிபர்வதம், சென்னை.78.

மறைந்த இயக்குனர் ஷியாம் பெனகல் பற்றி?

இந்தியாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவர். பத்மஸ்ரீ, பத்ம விபூஷன், தாதா சாகேப் பால்கே, 18 முறை தேசிய விருது என பல்வேறு விருதுகளைப் பெற்றவர். தந்தை ஸ்ரீதர் பெனகல் ஒளிப்பதிவாளர் என்பதால் அவருக்கு சினிமா பரிச்சயம் எளிதாக அமைந்தது. அதேசமயம், அன்றைய புதிய சினிமா அலையின்போது குறிப்பிடத்தகுந்த படங்களை உருவாக்கி, தனது திறமையையும் நிரூபித்தார். ஆவணப்படம், திரைப்படம், கலைப்படங்கள் என பல்வேறு வகைப்பாட்டிலும் தனது திறமையை நிரூபித்தவர். தி மேக்கிங் ஆப் மகாத்மா, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்: மறக்கப்பட்ட நாயகன், ஆங்கூர், மந்தன் போன்ற இவரின் பல படங்கள் குறிப்பிடத் தக்கவை.

ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு

பா.ஜ.க. கூட்டணிக்கு வரவில்லை என்றால் அ.தி.மு.க. அழிந்துவிடும் என்று டி.டி.வி. தினகரன் ஜோசியம் கூறியுள்ளாரே?

அது ஜோசியம் மாதிரியா இருக்கிறது... மிரட்டல்போல படுகிறது.

வண்ணை கணேசன், கொளத்தூர்

தியானத்தை அன்றாட வாழ்வில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று மோடி பேசியுள்ளாரே?

காசா… பணமா… வைத்துக்கொள்ளலாம். பா.ஜ.க.வில் பலரும் தியானத்தின் பெருமை, மகிமை குறித்தெல்லாம் பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் செய்வதெல்லாம் பசுவின் பேரால் கொலை, ஜாதி ஆணவக் கொலைகள், புல்டோசர் வீடு இடிப்புகள், பள்ளிவாசல், தேவாலய இடிப்புகள், அவர்கள் கருத்தோடு உடன்படாத வர்களை பாகிஸ்தானுக்கு, பங்களாதேஷுக்கு ஓடிவிடுங்கள் என்ற மிரட்டல்தான். ஆக, தியானம் இவர்களின் குணங்களில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த வில்லை என்றால், நம்மில் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்திவிடுமென எப்படி நம்புவது?

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

தேர்தல் ஆணையர்களை பிரதமர் தலைமையிலான குழு தேர்வுசெய்யும் நடைமுறையைக் கைவிடவேண்டும் என்கிறாரே உத்தவ் தாக்கரே?

நியாயமான கோரிக்கைதானே. இப்போது பல்வேறு மாநில தேர்தல்களில் வாக்குப் பதிவு எந்திரத்தில் பதிவானதைவிட, எண்ணும்போது கூடுதல் ஓட்டுகள் வருகின்றன. வாக்காளர் சேர்க்கை, நீக்கத்தில் சர்ச்சை எழுகின்றன. தேர்தலில் போட்டியிட்டவர்களைத் தவிர, மற்றவர்களுக்கு சி.சி.டி.வி. புட்டேஜையோ, 17-சி உள்ளிட்ட படிவங்களையோ தர மறுக்கிறார்கள். தேர்தல் ஆணையர் போன்ற உயர் பதவி அதிகாரிகளையும் பிரதமர் உள்ளிட்ட குழுவே தேர்வு செய்யுமென்றால், அப்புறம் தேர்தலே நடத்தவேண்டாம். தொடர்ச்சியாக பா.ஜ.க.வையே ஆட்சியில் அமரவைத்துவிடவேண்டியதுதான்.