மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

நான் எஸ்.எஸ்.எல்.சி. முடிக்க 365 ரூபாய் 50 பைசா செலவானது. இப்போது கார்த்தி பையனை ப்ரீ-கே.ஜி. சேர்த்துவிடுவதற்கு 2.25 லட்சம் ரூபாய் கேட்குறாங்க என்று நடிகர் சிவக்குமார் கூறியுள்ளது குறித்து...?

சிவக்குமார் நடிக்க வந்தபோது சிவக்குமார் வாங்கிய சம்பளம் எவ்வளவு? இப்போது கார்த்தி வாங்கும் சம்பளம் எவ்வளவு? சிவக்குமார் அன்றைக்கு ஐந்நூறு ரூபாய்க்கு சவரன் தங்கமே வாங்கியிருப்பார். அது இன்றைக்கு ஒரு கிராம் வாங்கக்கூட போதாதல்லவா! தவிரவும், நம் முன்னே அரசுப் பள்ளிகளும், தனியார் பள்ளிகளும் இருக்கும்போதும், ஆட்டு மந்தையைப்போல தனியார் பள்ளிகளை நோக்கி ஓடுகிறோம் அல்லவா! அதற்கான விலையும் சேர்ந்தது தான் அந்தத் தொகை!

ரா.ராஜ்மோகன், முட்டியூர்

Advertisment

மத்தியிலும் மாநிலத் திலும் ஆள்கிற ஆட்சியாளர் கள் மக்களைப் பற்றி கவலைப் படுவதில்லை என்பதுதான் என் கவலையே என்கிறாரே எடப்பாடி கே. பழனிச்சாமி?

ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப் பாக்கிச் சூடு நடந்த போதும், டி.வி.யைப் பார்த்துதான் துப் பாக்கிச் சூடு நடந்த தையே தெரிந்து கொண்டேன் என்று சொன்னபோதே எடப்பாடிக்கு, தமிழக மக்கள் மீதிருந்த கவலை, அக்கறையை தெரிந்துகொண்டார்கள். போதாதற்கு எடப்பாடி ஆட்சிக் காலத்தில் ஒன்றிய அரசு நிறைவேற்றிய மசோதாக்களில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் வாக்களித்த விதத்தை வைத்தும் தெரிந்துகொண்டிருப்பார்கள்.

என். இளங்கோவன், மயிலாடுதுறை.

Advertisment

ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் இருப்பதை "பிளாக்மெயில்' அரசியல் என்று கூறலாமா?

ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமி ழகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் இல்லை. ஆனால் சிறப்பு நிதி ஒதுக் கீடோ, கடந்த ஒரு வருடமாகக் கேட்டு வரும் வெள்ள நிவா ரணத்துக்குக்கான நிதி, மெட்ரோ ரயில் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடை செய்யாமல் புறக்கணிக்கிறது. மிக அதிக வரி வசூலை அள்ளித் தரும் மாநிலம், அதன் பங்களிப்புக்கேற்ப கவனிக்கப்படாமல் புறக் கணிக்கப்படுவது அநீதியல்லவா! தவிரவும் இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கும் சிறப்பு நிதி ஒதுக்கீடு இல்லை. ஆட்சி நாற்காலியைத் தாங்கிப்பிடிக்கும் மாநிலங்கள் மட்டும் சிறப்பாகக் கவனிக்கப்பட்டுள்ளன.

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

59% மக்களுக்கு வேலை தரும் விவசாயத்துக்கு பட்ஜெட்டில் வெறும் 2.78% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளதே?

அவர்களது ஆதங்கம் நியாயமானது தான். கடந்த பட்ஜெட்டில் கல்விக்கு ஒதுக்கப்பட்டது 1,12,899.47 கோடி. இந்த பட்ஜெட்டில் கல்விக்கு ஒதுக்கப்பட்டது 1,20,627.87 கோடி. மேலோட்டமாகப் பார்த்தால் 7,728 கோடி அதிகம். சதவிகித கணக்குப் படி பார்த்தால் கடந்த ஆண்டை 0.3 சதவிகிதம் குறைவு. சுகாதாரத்தை எடுத்துக்கொண்டாலும் இதே கதைதான். இவர்கள் விவசாயம், கல்வி, சுகாதாரத்துக்கு நிதியைக் குறைக்கிறார்கள். கார்ப்பரேட்டுகளுக்கு வரியைக் குறைத்து சலுகைகளை அளிக்கிறார்கள்.

கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு

தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒரு திமிர் வரும்! ஆனால் இங்கு தேர்தலில் தோற்ற பின்னரும் சிலருக்கு (ராகுலுக்கு) திமிர் வருகிறது... என்ற அமித்ஷாவின் பேச்சு பற்றி?

அது திமிர் இல்லை... தன் னம்பிக்கை. அமித் ஷாவுக்கு திமி ருக்கும் தன்னம் பிக்கைக்குமான வித்தியாசம் தெரியவில்லை.

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.

பீஹார் சட்டசபையில் "நீங்கள் ஒரு பெண், உங்களுக்கு ஒன்றும் தெரியாது' என நிதீஷ்குமார், பெண் எம்.எல்.ஏ.வைப் பார்த்து கூறியிருப்பது சரியா?

mm

பீகார் சட்டசபையில் பெண்கள் இட ஒதுக்கீடு, பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து பெற்றுத் தருவதில் நிதிஷ்குமார் அரசு தோற்றுவிட்டதாக விவாதம் நடந்துகொண்டிருந்த நிலையில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் பெண் எம்.எல்.ஏ.வான ரேகா பாஸ்வானைப் பார்த்து, "நீ ஒரு பெண்தானே…"உனக்கு ஏதாவது தெரி யுமா?'’என்று நிதிஷ் பேச, எதிர்க்கட்சிகள் கொந்தளித்து எழுந்தனர். லாலுவின் மனைவியும் பீகாரின் முன்னாள் முதல்வருமான ராப்ரிதேவி, "நிதீஷுக்கு பெண்கள் மீது மரியாதை இல்லையென அனைவருக்கும் தெரியும். சட்டசபையில் அவர் இவ்வாறு பேசியதன் மூலம் பெண்கள் அனைவரையும் இழிவுபடுத்தியுள்ளார். இந்தப் பேச்சுக்காக அவர் மன்னிப்பு கேட்கவேண்டும்'’என வெளுத்து வாங்கியுள்ளார்.