நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.
ஊழியர்களை ஆர். எஸ்.எஸ். இயக் கத்துக்கு மத்திய அரசு அனுப்பிவைப்பதாக வெங்க டேசன் கூறியிருக்கிறாரே..?
ஏற்கெனவே போதிய அளவு அரசு எந்திரத்துக்குள் ஆர்.எஸ்.எஸ். பின்னணி உடையவர்கள் ஊடுருவியாகிவிட்டது. புதிதாக ஆட்களை அனுப்புவதற்குப் பதில், ஏற்கெனவே உள்ள ஊழியர்கள் ஆர்.ஆர்.எஸ். உறுப்பினர்களாயிருப்பதை மத்திய அரசு அனுமதிப்பதன் மூலம், அரசு எந்திரத்தை கட்சி, அமைப்பு சார்பானதாக மாற்றிக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. இந்தியாவின் ஜனநாயகம் அழுக ஆரம்பித்திருப்பதன் வெளிப்பாடு இது!
என். இளங்கோவன், மயிலாடுதுறை.
யு.பி.எஸ்.சி. தலைவர் மனோஜ் சோனி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆன்மீக சேவை செய்யப்போவதாக அறிவித்துள்ளாரே?
மோடியால் குஜராத்திலிருந்து கொண்டு வரப்பட்டு 2013-ல் யு.பி.எஸ்.சி. சேர்மனாக்கப்பட்டவர் மனோஜ் சோனி. பூஜா கேட்கர் உள்ளிட்ட சமீபத்திய யு.பி.எஸ்.சி. நியமனங்களுக்கும், மனோஜ் சோனி தனது பதவியை ராஜினாமா செய்ததற்கும் தொடர்பிருப்பதாக எதிர்க்கட்சிகள் அடித்துச் சொல்கின்றன. ஆன்மிக சேவையை ஒரு வருடம் முன்பே செய்யப் போயிருக்கவேண்டியதுதானே. எதிர்கால இந்தியாவின் தலைவலிக்கும், மோடியின் ஆட்சிக் காலத்தில் நடந்த சீரழிவுகளுக்கும் ஆழமான தொடர்பிருக்கும் என்பதுதான் கட்சி சார்பற்ற அரசியல் நிபுணர்கள் பலரின் கருத்தாயிருக்கிறது.
எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சராக இருக்கும்வரை நீட் விவகா ரத்தில் மாணவர்களுக்கு நீதி கிடைக்காது என்கிறாரே அகிலேஷ் யாதவ்..?
உச்சநீதிமன்றத்தில் இரண்டொரு மையங் களில் மட்டும் வினாத்தாள் கசிந்ததாகவும், அதுவும் தேர்வுக்கு சில மணி நேரங்கள் முன்பாகக் கசிந்த தாகவும் ஒன்றிய அரசு சொல்கிறது. பாராளு மன்றத்திலோ தர்மேந்திர பிரதான், “அகிலேஷ் ஆட்சியில் எத்தனை தேர்வுகளின் வினாத்தாள் கசிந்தது என்ற பட்டியல் என் வசமுள்ளது” என்கிறார். தேர்வின் பெயரில் மட்டும்தான் நீட் இருக்கிறது. யதார்த்தத்தில் அந்த தேர்வு நீட் (சங்ஹற்)டாகவும் இல்லை. நீதியுடனும் இல்லை.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
121 பேர் கூட்ட நெரிசலில் இறந்ததற்கு விதியே காரணமென பாபா சாமியார் பேசியிருக்கிறாரே?
தான் கல்லா கட்டுவதற்காக கணக்கு வழக்கில்லாமல் கூட்டத்தை அனுமதித்ததும், அந்தப் பைத்தியக்காரக் கூட்டம் தன் காலடித் தடத்தையும் உடையையும் தொட்டு வணங்கத் துடித்ததும்தான் காரணமென்றா சொல்வார் அவர்?
மா.சந்திரசேகர், மேட்€டுமகாதானபுரம்
மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வின் இடங்கள் குறைந்ததற்கு வெளி நாட்டுச் சதியும் காரணம் என்கிறாரே சிவ்ராஜ்சிங் சவுகான்?
அதுமட்டும் தானா? எதிர்காலத் தில் உலகத்தையே வென்று, பிரபஞ்சங்களைக் கடந்து ஏலியன்கள் வரை மோடி செல்வாக்குப் பெற்றுவிடுவார் எனப் பயந்து ஏலியன்களும், இந்திய மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக சதி செய்தது என சொல்லவேண்டி யதுதானே!
மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
1947-ல் நமது நாடு பிரிக்கப்பட்டபோது, அனைத்து முஸ்லிம்களையும் நம் முன்னோர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பியிருந் தால், தற்போது நாட்டின் நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கும் என்று கூறியிருக்கிறாரே கிரிராஜ் சிங்?
பாகிஸ்தான் பிரிந்ததும் தன்னை இஸ்லாமிய நாடு என்றுதான் அறிவித்துக்கொண்டது. கிட்டத்தட்ட பெரும்பான்மை இந்துக்களைத் துரத்திவிட்டது. மிச்சமுள்ளவர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் முஸ்லிம்களாக மதம் மாறிவிட்டார்கள். இன்றைய பாகிஸ்தானின் நிலைமை என்னவென்பது கிரிராஜ் சிங்கைவிட நமக்கு நன்றாகவே தெரியும். நமக்குப் பக்கத்திலே இருக்கும் உலகின் ஒரே இந்து தேசமான நேபாளம், அப்படி என்ன சாதித்துவிட்டது. மனிதன் தன் சொந்த விவகாரமாக மதத்தை வைத்துக்கொள்ளட்டும். பிரச்சனையில்லை. அதை தேசியப் பிரச்சனை ஆக்குகிறான் என்றால், அதைவைத்து ஒரு கூட்டத்தை அடிமையாக்கவும், ஆதாயம் தேடவும் முயற்சி நடக்கிறது என்பதுதான் பொருள்.
ப.கேசவன், வேலூர்
பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டுமென்ற கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித் திருக்கிறதே?
எப்படி ஒன்றிய அரசின் குடுமி நிதிஷ் கையில் இருக்கிறதோ, அதுபோல பீகார் அரசின் குடுமியும் பா.ஜ.க. வசமிருக்கிறது. நிதிஷ் ஒன்றுமட்டும் செய்யலாம். தனக்கு ஒரு கண் போனாலும், எதிரிக்கு இரு கண் போகட்டுமென ஆதரவை வாபஸ் பெறலாம். இல்லை, சிறப்பு அந்தஸ்து விவகாரத்தைப் பேசிப் பேசி தன் மாநிலத்துக்கு கூடுதல் நிதி வாங்கலாம். பட்ஜெட்டைப் பார்த்தால் இரண்டாவது விவகாரம் நடந்திருப்பதைப் போல்தான் இருக்கிறது.