நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.
கர்நாடகாவில் நூறு சதவீத வேலைவாய்ப்பும் கன்னடர்களுக்கு வழங்கவேண்டும் என்று மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது குறித்து?
ஒரு மாநிலத்தில் வேலை கிடைக்காமல் அம் மாநில மக்கள் பிற மாநிலங்களுக்குச் சென்று வேலைதேடி அலைவதும் சிரமம். இன்னொரு மாநிலத்தில் அடைக்கலம் தேடுவதும் சிரமம். அதனால், சொந்த மாநில மக்களுக்கு அம்மாநிலம் முன்னுரிமை தருவது நல்லதுதான். ஆனால், ஒரு மாநிலம் தன் மாநில வேலைகள் முழுவதும் தங்களுக்குத்தான், பிற மாநிலத்தவர்களுக்கு இல்லையென சட்டமியற்றத் தொடங்கி னால், பிறகு ஒவ்வொரு மாநிலமும் அதையே செய்யத் தொடங்கும். பிறகு ஒருங்கிணைந்த இந்தியா என்பதற்கு அர்த்தமிருக்காது. மாநில அரசின் வேலைகளில் குறிப்பிட்ட சத விகிதம் அம் மாநில மக்க ளுக்கு என் றும், மிச்சமுள்ள சத விகிதத்துக்கு திறமையுள்ள, தகுதியான பிற மாநில நபர்களை யும் பணியமர்த்தலாம் என்றும் தளர்வு களுடன் சட்டமியற்றுவதே சிறந்தது. அதேபோல மத்திய அரசும் குறிப்பிட்ட மாநிலத்துக்குள் வரும் மத்திய அரசுப் பணிகளில் ஒரு கணிசமான சதவிகி தத்தை, அந்தந்த மாநில மக்க ளுக்குத் தந்துவிட்டு பிற வற்றை மற்றெல்லாருக்கும் தரலாம். தமிழக ரயில் வே பணிகளில் ஓரிரு பணி களை மட்டும் தமிழர்களுக்குத் தந்துவிட்டு, பிறவற்றையெல்லாம் வடமாநில மக்களுக்கு அளிப்பதும் சரியான முன்னுதாரணமில்லைதான்.
எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
சசிகலா ஒரு செல்லாத காசோலை.. அவரது ஆடி மாத சுற்றுப்பயணம் எந்தப் பயனும் தராது என்கிறாரே செம்மலை..?
எடப்பாடி ஆதரவாளரிடமிருந்து வேறென்ன எதிர்பார்க்கமுடியும்? ஜெ. காலத்தில் சாவரின் கோல்ட் பாண்ட் போல இருந்தவர்... இன்று செல் லாத காசோலை ஆகியிருக்கிறார். அ.தி.மு.க.வின் மீது சசிகலாவின் செல்வாக்கு அதிகரித்து விடக் கூடாது என்பதற்காகவே, திட்டமிட்டு அவரை சிறைக்கு அனுப்பினார்கள் அன்றைக்கு மத்தியில் ஆட்சியிலிருந்தவர்கள். இன்று வரை அந்தக் கட்சி அந்த இரும்புப் பிடி யிலிருந்து முழுமையாக வெளிவரவில்லை. சசிகலா மட்டுமா... அ.தி.மு.க. என்ற கட்சியின் முகமதிப்பே நாளுக்கு நாள் சரிந்துகொண்டிருக்கிறது.
ரா.ராஜ்மோகன், முட்டியூர்
சாராய வியாபாரிகளுடன் நேரடித் தொடர்பிலிருக்கும் காவல்துறை அதிகாரி களுக்கு எந்த மாதிரியான தண்டனை சரியான பாடமாக இருக்கும்?
கள்ளச்சாராயம் விஷச்சாராயமாக மாறி உயிர்ப்பலிகள் விழும்போது, சாராய வியாபாரி களுடன் தொடர்பிலிருந்த காவல்துறை அதிகாரி களுக்கு அந்த விஷச்சாராயத்தில் ஆளுக்கு ஒரு கிளாஸ் குடிக்கவேண்டும் என்று தண்டனை விதிப்பது சரியான பாடமாக இருக்கும்.
வாசுதேவன், பெங்களூரு
நடந்து சென்றுகொண்டிருக்கும்பொழுது அறிவிப்பு இல்லாமல் வரும் மழை?
கவி மனம் உடையவர்களுக்கும், தமிழ் நாயகிகள் போல் மழையை விரும்புபவர்களுக்கும் வரம். அலர்ஜி, எளிதில் ஜலதோஷம் பிடிப்பவர்கள், பையில் முக்கிய ஆவணங்கள் வைத்திருப்பவர் களுக்கு சாபம்.
மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
முன்னாள் நீதிபதி சந்துரு அரசியல் பேச விரும்பினால் தி.மு.க.வில் சேரலாம் என்று கூறுகிறாரே பா.ஜ.க. மாநில தலைவர்...?
யார், யார் எங்கு சேரலாம் என்று உத்தரவு போடுவதற்கு இவர் யார்? நீதிபதியாக இருந்து பல வழக்குகளில் முன்னுதாரண தீர்ப்பு வழங்கியவருக்கு கட்சி அரசியலுக்குப் போகவேண்டுமா, போவதென்றால் எந்தக் கட்சிக்குச் செல்வதென அவருக்கு தீர்க்கமாகவே சிந்திக்கத் தெரியும்.
த.சத்தியநாராயணன், அயன்புரம்
ட்ரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் நிஜமா நாடகமா?
கண்டுபிடிப்பது சிரமம். அமெரிக்காவில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துவருகிறது. சில வழக்குகளில் ட்ரம்புக்கு எதிரான தீர்ப்புகள் வந்துள்ளன. முன்னாள் அதிபர் கெத்துள்ள ட்ரம்ப்பின் கூட்டத்துக்கு அதி பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும். அதில் ஒருவன் நுழைந்து காதை மட்டும் சிராய்த்துப் போகிற மாதிரி சுட்டுப்போனால் சந்தேகம் எழத்தான் செய்யும்! ஏற்கெனவே பைடனுக்கு ஞாபகக் குறைபாடு, விவாதங்களில் முன்போல் ஜொலிக்க முடியாத குறை, கொரோனா இருக்க, இந்த துப்பாக்கிச்சூடு ட்ரம்ப்புக்கு ஓட்டுகளை அள்ளிவந்து கொட்டும்!
எச். மோகன், மன்னார்குடி
உங்களை அதிகம் சிரிக்க வைத்த அரசியல்வாதி யார்?
அரசியல்வாதிகளிடம் சிக்கி இந்தியாவே படாதபாடு படுகையில் சிரிக்கவா முடிகிறது! இருந்தாலும் பா.ஜ. மாநில தலைவர், சீமான் போன்றவர்களும் தேசிய அளவில் 56 இஞ்ச் மார்புக்காரரும் தங்கள் அதிரடி ஸ்டேட்மெண் டால் பலமுறை சிரிக்க வைத்திருக்கிறார்கள்.