நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.

இனி எம்.பி.க்கள் பதவி ஏற்பு உறுதிமொழியின் போது எந்த கோஷமும் எழுப்பக்கூடாது என சபாநாயகர் உத்தரவு போட்டிருப்பது குறித்து?

அரசியலமைப்புக்கு எதிராகவோ, இந்திய இறையாண்மைக்கு எதிராகவோ யாராவது கோஷம் போட்டால் சரிதான். சபாநாயகர் வருத்தப்படவேண்டியதுதான். அவரவர் கட்சித் தலைவர் பெயரையோ, அக்கட்சியின் கொள்கைக்கு அடிப்படையாக இருந்த தலைவர்கள் பெயரையோ சொல்லி வாழ்க என கோஷம்போட்டால் என்ன கேடு வந்துவிடப்போகிறது? ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறையோ, இடைத்தேர்தல் வரும் போதோ இப்படி அபூர்வமாகத்தானே உறுதிமொழி ஏற்கப்போகிறார்கள்.

எஸ். கதிரேசன், பேரணாம்பட்டு

Advertisment

எதிர்க்கட்சிகள் கண்ணியமாக நடந்துகொண்டால் நீட் விவாதத் துக்குத் தயார் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருப்பது எதைக் காட்டுகிறது?

தர்மேந்திர பிர தான் கூறும் கண்ணியம் எதுவெனத் தெரியவேண் டும். ஆளும் கட்சி கூறும் விளக்கத்தை கேள்வியின்றி ஏற்றுக்கொள்வதுதான் கண்ணியமென்றால், அத்தகைய கண்ணியம் தேவையில்லை.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

Advertisment

மக்களவையில் எதிர்க்கட்சியினர் பேசும்போது மைக்கை அணைத்துவிடுகிறார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

விவாதத்தை விவாதத் தால் எதிர்கொள்ளும் திராணி ஆளும்கட்சிக்கு இல்லை யென்பது இதில் வெளிப் படுகிறது. மக்கள் தீர்ப்பு மைனாரிட்டியாக்கி சூடுவைத்த பிறகும் எதேச் சதிகார மனப்பான்மை பா.ஜ.க.விடம் மாறவில்லை.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந் தில் தொழிலாளர் கட்சி ஆட்சியை பிடித்திருக் கிறதே...?

xx

முதலில், ஆட்சியிலிருந்த கன்சர்வேடிவ் கட்சி 14 ஆண்டுகளாக ஆட்சியில் தொடர்வதே அதன் மீதான ஆட்சியெதிர்ப்பு மனநிலையை மக்களிடம் ஏற்படுத்திவிட்டது. அதன்பிறகு கடந்த ஆட்சியின் போது போரிஸ் ஜான்சன், லிஸ் ஸ்ட்ரஸ், ரிஷிசுனக் என மூன்று பேர் மாறி மாறி ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் அவர்களுக்கிடையிலான மோதலும் கட்சியை வலுவிழக்க வைத்துள்ளது. வென்றுள்ள தொழிலாளர் கட்சியின் கீர் ஸ்டார்மர் இங்கிலாந்து பிரதமராகப் போகிறார். “பொதுசேவையை முன்னெடுத்து மக்களுக்கான அரசாகத் திகழும்’என அறிவித்திருக்கிறார். வெறும் அறிவிப்பாக மட்டுமல்லாமல், நிஜமாகவே சொன்னதைச் செய்யட்டும்.

ரீனு சுகுமாரன், மாடம்பாக்கம்

மறதி என்பது வரமா, சாபமா?

அது ஆளைப் பொறுத்தது. செய்ய வேண்டிய வேலைகளை, கடமைகளை மறந்தால் அது சாபம். மனதை அழுத்தும் கவலைகளை, மன இறுக்கங்களை, கடந்த கால துயரங்களை மறந்தால் அது வரம்!

த.சத்தியநாராயணன், அயன்புரம்

ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள மூன்று குற்றவியல் சட்டங்கள்?

முதலில் அதன் பெயர்களைப் பாருங்கள். சட்டங்களுக்கான பெயர்களிலேயே ஹிந்தியை வலியத் திணிக்கிறது. பிறகு அரசுக்கும் காவல் அமைப்புகளுக்கும் கட்டுப்பாடற்ற அதிகாரத்தைக் கொடுத்து இந்தியாவை காவல் தேசமாக்கும் முனைப்பு தெரிகிறது. மக்களுக்கான சட்டம் என்பதைவிட, இதை ஆட்சியாளர்களுக்கான சட்டம் என்பதுதான் மிகப் பொருந்தும்.

மீனா பரத்வாஜ், திருவல்லிக்கேணி

பா.ஜ.க., காங்கிரஸ் இரு கட்சிகளும் மற்றதை பரஸ்பரம் ஒட்டுண்ணி என்கின்றனவே?

வேர், இலை, கிளையென வளம்சேர்த்து நிற்கும் மரத்தின்மீது ஒட்டிக்கொண்டு, அந்த மரத்தைச் சார்ந்திருந்து அதன் சத்துக்களை உறிஞ்சியுண்ணும் தாவரத்தை ஒட்டுண்ணி என்பார்கள். அந்த வகையில் நம் நாட்டில் பல அரசியல் கட்சிகளும் ஒட்டுண்ணிகள்தான். ஆனால் பிற ஒட்டுண்ணிகள் எல்லாம் தம் வயிற்றை வளர்த்துக்கொண்டு தான் ஒட்டி யிருக்கிற மரத்தைத்தான் பாதிக்கும். பா.ஜ.க., கூடவே தன்னைச் சுற்றியுள்ள பிற ஒட்டுண்ணிகளையும் விழுங்கிச் செரிக்கும் அபாயகரமான ஒட்டுண்ணி.

ரா.ராஜ்மோகன், முட்டியூர்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச் சாரத்தின்போது, சமூக நீதிக்கு துரோகமிழைப்பதே தி.மு.க.தான் என்ற பா.ம.க. தலைவர் அன்பு மணி, மறந்தும்கூட அ.தி.மு.க.வை தொட்டுப் பேசாதது ஏன்?

போனஸாய் விழுகிற ஓட்டுகளுக்கு வேட்டு வைத்துக் கொள்ளுமளவுக்கு விவரமில் லாதவரா அன்புமணி!

ச.செந்தில், திருப்பூர்

போலே பாபா?

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பொன் னெழுத்துகளில் பொறிக்கவேண்டிய கவிதை வரிகளும் எழுதப்படும். அதேசமயம் இரட்டைக் குவளை, தீண்டாமை முறைகளும் யதார்த்தத் தில் இருக்கும். நானே கடவுள் என்ற பெரும் பாய்ச்சலும் இருக்கும். சாமியாரைப் பார்க்கப் போய் கொத்துக் கொத் தாய் சாகிற மூடத்தன மும் தொடரும். இந்தியாவில் ஆன்மிக மும் பல சமயங்களில் உயிருக்குக் கேடுதான்.