தே.மாதவராஜ். கோயமுத்தூர்-45

இந்தியா சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து வளர்ந்த நாடு, வளர்கின்ற நாடு ,வளர்ச்சி பெறும் நாடு என்கிறார்களே, எப்போது முடிவுக்கு வரும் வல்லரசு நாடாக?

வல்லரசாக வேண்டியதில்லை. நல்லரசாக ஆட்சி செய்பவர்கள் கிடைத்தால் போதும்.

வாசுதேவன், பெங்களூரு

Advertisment

ஐந்தாவது முறை ஐ.பி.எல். கோப்பை வென்று சாதித்த சி.எஸ்.கே. அணி..!

sd

Advertisment

கிரிக்கெட் விளையாட்டு பல கட்டங் களைத் தாண்டி வந்துள்ளது. 5 நாள் டெஸ்ட் மேட்ச், ஒரு நாள் 50 ஓவர் போட்டி, இருபது ஓவர் போட்டி என ஆட்ட முறைகளும் மாறியுள்ளன. இந்திய அணி, இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியா அணி உள்ளிட்ட பல்வேறு நாட்டு அணிகள் மோதிய நிலையில், ஐ.பி.எல். போட்டி பல நாட்டு வீரர்களையும் உள்ளடக்கிய அணிகளை ஏல முறையில் எடுத்தது. பெரும் பணக்காரர்கள் அதன் உரிமையாளர்களாக ஆனார்கள். ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் ரேட் நிர்ணயிக்கப்பட்டது. விளையாட்டுப் போட்டிகளில் சூதாட்டம் வெளிப்படையாகக் கொடி கட்டிப் பறக்கத் தொடங்கியது. ஆனாலும், கிரிக்கெட் விளையாட்டின் மீது இந்திய ரசிகர்களுக்குள்ள மோகம் இவை பற்றிக் கவலைப்படவில்லை. பாகிஸ்தானுடன் இந்தியா மோதும் போட்டிகளை யுத்தம் போல நினைத்து, தேசபக்தியின் அடையாளமாக்கி யவர்கள், ஐ.பி.எல். அணிகளின் பேரில் மாநிலப் பற்றாளர்களாக மாறினார்கள். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, மஞ்சள் தமிழராகவே ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு வீரர் கூட அணியில் இல்லாவிட் டாலும் சி.எஸ்.கே. என்பது தமிழ்நாட்டின் அடையாளமானது. தல தோனியை முதலமைச்சர் முதல் கடைக்கோடி கிராமத்து கிரிக்கெட் ஆர்வலர் வரை கொண்டாடத் தொடங்கினர். தன் மீதான நம்பிக்கையை உணர்ந்த தோனியும், தனது அணியின் பலவீனங் களைக்கூட ஆட்டக்களத்திற்கேற்ப சாதகமாக்கி, வெற்றிப் புள்ளிகளை ஈட்டச் செய்தார். ஏற்கெனவே 4 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற சி.எஸ். கே, இந்த முறை ஃபைனலில் எதிர்கொண் டது குஜ ராத் டைட் டான்ஸ் அணியை என்பதால் இது தமிழ் நாட்டுக்கும் குஜராத்துக்கு மான நேரடி யுத்தம் போல அரசியல் பார்வை யுடன் கவனிக்கப்பட் டது. ஐந்தாவது கோப் பையை நள்ளிரவு கடந்து சி.எஸ்.கே. வென்றபோது, தமிழ் நாட்டின் வெற்றியாக ரசிகர்கள் விடிய விடிய கொண்டாடினர். கிரிக்கெட் என்பது அதை விளையாடாத பலரையும் உணர்வுப்பூர்வமாக ஆட்கொண்டிருக்கிறது. சி.எஸ்.கே. என்பது டாஸ்மாக் போல தவிர்க்க முடியாததாகிவிட் டது. ரசிகர்களின் நம்பிக்கையை வீணடிக்காமல், கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் அடித்த ஜடேஜாவும், டோனி தலைமையிலான டீமின் கூட்டு முயற்சியும் வெற்றிக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி

புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் சம்பிரதாயத்துக்கு கூட ஜனாதிபதிக்கு அழைப்பு அனுப்பவில்லையே?

பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்ணை ஜனாதிபதியாக நிறுத்தியிருக்கிறார் மோடி. ஆனால், எதிர்க்கட்சிகள் அவரை ஆதரிக்க மறுக்கின்றன என்றார்கள் பா.ஜ.க.வினர். நாடாளுமன்றத் திறப்பு விழாவில், அந்த ஜனாதிபதியை புறக்கணித்துவிட்டார் பிரதமர் மோடி. இதற்கும் எதிர்க்கட்சிகள் மீது பாய்ந்து பிறாண்டுகிறார்கள் பா.ஜ.க.வினர். பாவம், ஒரு பா.ஜ.க.காரராக வாழ்வது என்பதுதான் எத்தனை சவாலானது, எவ்வளவு துயரமானது.

கே. சங்கர், சென்னை-.82

செங்கோல் ஏந்தியவர்களெல்லாம் நீதி நெறி தவறாமல் ஆண்டார்களா மாவலியாரே?

கிரீடமோ, வாளோ, செங்கோலோ ஒரு மன்னனின் பெருமை அல்ல. மக்கள் நலனைக் காப்பதில் எந்தளவு சிறப்பாக செயல்பட்டார் என்பதே பெருமையாகும். என்னிழல் வாழ்நர் சென்னிழற் காணாது கொடியன் எம் இறை எனக் கண்ணீர் பரப்பிக் குடியழி தூற்றுங் கோலேனாகுக என்று புறநானூற்றில் பாண்டியன் நெடுஞ்செழியன் பாடிய பாடல் உள்ளது. நான் மக்களைக் காக்கத் தவறினால், அவர்கள் வடிக்கும் கண்ணீர் என்பது என்னைக் கொடுங்கோலன் என்று தூற்றும் என்பது இதன் அர்த்தம். பாண்டியனுக்குத் தெரிந்த மக்கள் நலனை, சோழர் செங்கோல் என மேக் இன் உம்மிடி செங்கோலைக் காட்டி ஏமாற்றுபவர்களிடம் எதிர்பார்க்க முடியுமா?

எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

நான் 150 வயதுவரை உயிர்வாழ்வேன், 2026ல் என்னை அரியணை ஏற்றினால், அந்த ரகசியத்தை சொல்வேன்.. என்ற சரத்குமாரின் பேச்சு..?

அவரே அதை சீரியஸாகப் பேசவில்லை என்று சொல்லிவிட்டார். ஆக்ஷன் ஹீரோ காமெடியனாக ட்ரை பண்ணுகிறார் போல.