நடேஷ் கண்ணா, கல்லிடைக் குறிச்சி
சபரிமலை அரவணை காண்ட் ராக்ட்டை ஒரு முஸ்லிம் நபருக்கு வழங்கியிருக்கிறார்களாமே?
சபரிமலை அய்யப்பன் பக்தர்களுக் கும், முஸ்லிம்களுக்கான இணக்கமும் நட்பும் வாவர் என்ற இஸ்லாமியத் தலத்தி லிருந்து தொடங்குகிறது. அதனால் அரணை காண்ட்ராக்ட் ஆச்சரியமில்லை. இணக் கத்தை சிதைக்க நினைக்கும் மதவாத அரசியல்வாதிகள்தான் திடீர் குபீர் கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
த.சிவாஜி மூக்கையா, தர்காஸ்
திராவிடக் கட்சிகளின் பலம்- பலவீனம்?
மக்களுக்கான தேவைகளை திட்டங்களை மக்களின் மனநிலை அறிந்து நிறைவேற்றும் அரசியல் வழிமுறை திராவிடக் கட்சிகள் நன்கு அறிந்தவை. ஒவ்வொரு குடும்பத்திலும் திராவிடக் கட்சிகளில் ஏதேனும் ஒன்றைச் சார்ந்த வர்கள் இருப்பார்கள். இது பாரம்பரிய மாகத் தொடர்ந்து, கட்சிகளை வலுப்படுத் துகிறது. அது அவரது உறவினர்கள் -ஊர் மக்களிடம் செல்வாக்கை வளர்க்கிறது. தேர்தல் இல்லாத நேரத்திலும் மக்களை அன்றாடம் ஏதேனும் ஒரு வகையில் சந்திக் கவும், அவர்களுடைய நாடித் துடிப்பை அறிந்துகொள்ளவும் திராவிடக் கட்சி களால் முடிகிறது. காலத்திற்கேற்ற மாற்றங் களை உணர்ந்து செயல்படும் திராவிடக் கட்சிகள், அரசியல் களத்தில் கற்பனைக் குதிரைகளில் பயணம் செய்வதில்லை. வெற்றிக்கான இலக்கும் வியூகமும் என்ன என்பதை உணர்ந்து செயல்படுவது அவற்றின் பலமாக இருக்கிறது. இரண்டு பெரும் திராவிடக் கட்சிகளும் தேர்தல் களத் தின் வெற்றியைத் தங்களுக்கிடையிலான போட்டியாக மாற்றி வைத்திருப்பது பெரும் பலம். தேர்தல் அரசியலே முதன்மையானது என நினைப்பதும், அதற்காக இந்தியா வின் பிற மாநிலங்களைவிட மிக அதிக அளவில் பணம் செலவழிப்பதும், வாக்காளர்களுக்கு வீட்டுக்கு வீடு கச்சித மாகப் பணப் பட்டுவாடா செய்யும் அளவுக்கு கட்ட மைப்பை உருவாக்கியிருப்பதும், பணத்தை நம்பி பதவியை அடைந்துவிடலாம் என கட்சிக்கு வருபவர்களுக்கு முக்கியத்துவம் தருவதும், பதவியை அடைந்த பிறகு பணம் குவிக்கும் மனநிலையும், பலவீனங்களின் தொகுப்பு.
மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்
"வளர்ச்சியும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் சம அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை' என்கிறாரே கேரள முதல்வர் பினரயி விஜயன்?
"கடவுளின் சொந்த பூமி' எனக் கொண்டாடப்படும் கேரளா மாநிலம், அண்டை மாநிலங்களைவிட இயற் கைச் சூழல் அதிகம் நிறைந்த மாநிலம். அதே நேரத்தில், தொழிற்சாலை -தகவல் தொழில்நுட்பம் போன்ற வேலைவாய்ப்புகள் அங்கே குறைவு. மலையாளிகள் பலர் படித்துவிட்டு வெளிநாடுகளுக்கும் வெளிமாநிலங்களுக் கும் வேலைக்கு சென்றுவிடுகிறார்கள். தொழில் வளர்ச்சி என்பது இன்றைய சூழலில் கேரளாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் அவசியமாகிறது. "சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டும் -வளர்ச்சியையும் ஏற்படுத்த வேண்டும்' என்கிற நேரடி அனுபவத்திலிருந்து வார்த் தைகளை வெளிப்படுத்தியிருக்கிறார் தோழர் முதல்வர்.
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைபுதூர், தேனி
ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா பெறும் முதல் நடிகை திரிஷா என்ற பெருமையைப் பெற்றுள்ளாரே?
பல துறைகளைச் சேர்ந்தவர்களைக் கௌரவிக்கும் வகையில் தங்கள் நாட்டில் நீண்ட காலம் தங்குவதற்கான கோல்டன் விசா வழங்குவதை 2019-ல் ஐக்கிய அரபு அமீரகம் அறிமுகப்படுத்தியது. டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும், அவரது கணவர் ஷோயிப் மாலிக்கும் இந்த விசாவைப் பெற்றுள்ளனர். மலையாள நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி, துல்கர் சல்மான், பாலிவுட்டில் ஷாரூக்கான், சுனில் ஷெட்டி, போனி கபூர், ஜான்வி (ஸ்ரீதேவி) கபூர் போன்றவர்கள் இந்த விருதினைப் பெற்றிருக்கிறார்கள். எனினும், தமிழ்த் திரையுலகிலிருந்து இதனை முதலில் பெற்றிருப்பவர் நடிகை திரிஷா தான். கௌரவப் பட்டங்கள் பதவிகள் திரையுலகினருக்குக் கிடைப்பது வணிக மயமாகி விட்ட உலகில் ஆச்சரியமில்லை. தன் கலைத் திறமைக்காக மிக உயர்ந்த கௌரவத்தைப் பெறுவதுதான் கலைஞர் களுக்கு சிறப்பு. 1962-ஆம் ஆண்டு இந்திய கலாச் சாரத் தூதராக அமெரிக்காவுக்கு சென்ற நடிகர் திலகம் சிவாஜிகணேசன். அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி கென்னடியை சந்தித்தார். அமெரிக்க அரசு நிர்வாகத்தினர் சிவாஜிக்கு சிறப்பு செய்ததுடன், நயாகரா நகரின் ஒருநாள் கௌரவ மேயராக அறிவித்து, மேயர் பொறுப்புக்கான சாவியையும் அவரிடம் வழங்கினர்.
தா.விநாயகம், ராணிப்பேட்டை
"அ.தி.மு.க. ஆட்சியில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை' என்கிறாரே எடப்பாடி பழனிசாமி?
அதுவும், தனது ஆட்சியை ஊழல் -முறைகேடு ஆட்சி என்று குற்றம்சாட்டிய, "தர்மயுத்தம்'’ ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து, எதிர்க்கட்சித் தலைவராக டெல்டா மாவட்ட வெள்ளச் சேதங்களைப் பார்வையிட்ட பழனிசாமி இப்படிச் சொல்லியிருக்கிறார். பக்கத்தில் கடலூர் மாவட்டத்தில் சிதைந்த தடுப்பணை வெடிச்சிரிப்பு சிரித்ததாம்.