எம்.முஹம்மது ரபீக் ரஷாதீ,விழுப்புரம்
"என் கலாச்சாரம் எந்த ஒரு உயிரையும் கொல்வதற்கு கற்பிக்கவில்லை' என்கிறாரே பிரதமர் மோடி?
இதை அவர் குஜராத் முதல்வராக இருந்த போதே தனது கட்சியினரிடம் சொல்லி யிருந்தால் இரண்டாயிரத்துக்கும் அதிகமான உயிர்கள் பலியாகி இருக்காது.
கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு-77
காங்கிரஸ் கட்சி குறித்து வைகோ பேசியிருப்பது பற்றி?
வரலாற்றுப் பக்கங்களின் உண் மைகள் உறைந்துள்ளன. அரசியல் வெயில் படும்போது அது உருகி வழியும்.
தூயா, நெய்வேலி
ஊடகங்கள்தான் உண்மை நிலையை மக்களுக்குச் சொல்ல வேண்டும். ஆனால், பெரும்பாலானவை ஆளுந்தரப்பின் செய்தி அறிக்கையாகவே இருக்கின்றனவே?
தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, மாநில அரசே கேபிள் நிறுவனத்தை நடத்துவதால், அரசின் செயல்பாடுகள் குறித்த உண்மையான செய்திகளை வெளியிடும் ஊடகங் களைத் திட்டமிட்டு பழிவாங்கும் போக்கு தொடர்ந்து வருகிறது. அரசு கேபிள் என்பது தொலைக்காட்சி ஊடகங்களின் கழுத்தில் சுற்றிய கயிறாக உள்ளது. அது எப்போது வேண்டுமானாலும் இழுக்கப்பட்டு, கழுத்து நெரிக்கப்படும். மத்தியில் உள்ள பா.ஜ.க. ஆட்சியைப் பொறுத்தவரை, ஊடகத்தின் அனைத்து நிலைகளிலும் தங்களுக்கு ஆதரவான கருத்துகளைக் கொண்டிருப்போரை நியமித்தாக வேண்டும் என்பதில் கவனமாக உள்ளது. அரசியலில் மாற்றுக் கருத்துள்ள ஊடகத்தினரை நேரலையில் விமர்சிப்பது -கொச்சைப்படுத்துவது -பெயரைக் குறிப்பிட்டு அச்சுறுத்துவதுடன், ஊடக நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுத்து அவர்களை பணியிலிருந்து நீக்குவதும் தொடர் கிறது. ஊடக நிர்வாகம் அதற்கு ஒத்துழைக்கா விட்டால், அதிகார மையங்கள் மூலம் வழக்குப் போட்டு, உரிய நேரத்தில் பழிவாங்குவதும் நடக்கிறது. புகழ்பெற்ற என்.டி.டி.வி. சேனலின் மூத்த ஊடகவியலாளர் பிரணாய் ராயும் அவரது மனைவி யும் வெளிநாடு செல்ல விமான நிலையத்திற்கு வந்தபோது அனுமதி மறுக்கப்பட்டு, திருப்பி அனுப்பப் பட்டனர். காரணம், வங்கியில் வாங்கிய கடன்தொகை காரணமாக சில ஆண்டுகளுக்கு முன் என்.டி .டி.வி. மீது சி.பி.ஐ. போட்ட வழக்கு. இது வரை விசாரணை மேற் கொள்ளாமல், இப் போது நெருக்கடியைத் தொடங்கியுள்ளனர். பிரணாய் ராய் தனது உரிமைக்கான குரலை உயர்த்துகிறார். எத்தனை பேரால் அரசின் நெருக் கடியை எதிர்கொள்ள முடியும்?
வி.கார்மேகம், தேவகோட்டை
அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவை அதிகம் பயன்படுத்திய காங்கிரசுக்கும், 370-வது பிரிவை நீக்கிய பா.ஜ. க.வுக்கும் என்ன வேறுபாடு?
ஜனநாயகத்தின் கழுத்தை அறுக்கும் கத்தி கை மாறி யிருக்கிறது என்பது மட்டுமே.
நித்திலா, தேவதானப்பட்டி
"ப.சிதம்பரம் பிறந்ததே பூமிக்கு பாரம்' என்கிறாரே எடப்பாடி பழனிச்சாமி?
அவர்தானே பதவி வாங்குவதற்காக பூமியைத் தடவிப் பார்த்தவர். எது பாரம், எது லேசானது என்பதை அப்போது அறிந்துகொண்டார் போல.
______________
காந்திதேசம்
எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு
காந்திஜியின் மிகவும் நெருங்கிய நண்பர்கள் யார், யார்?
நெருக்கமான நட்பு என்பது ஆபத்தானது என்றே காந்தி கருதினார். காரணம், நெருக்கமான நண்பர்கள் என்றால் ஒருவருக்கேற்ப இன்னொருவர் வினையாற்றுவார்கள். குறிப்பாக, இத்தகைய நெருக்கமான நட்பில் உள்ள அன்பு -விசுவாசம் ஆகியவை ஒருவரிட முள்ள குறை களை வெளிப் படையாக எடுத்துச் சொல் வதற்குத் தயங் கும். அது மட்டுமின்றி, ஒருவர் கடவுள் மீதோ அல்லது ஒட்டுமொத்த மனித குலத்தின் மீதோ அன்பு செலுத்துபவராக இருக்கும்போது, தனிப்பட்ட ஒருவரிடம் பிரத்யேகமான நட்பு -விசுவாசம் கொண்டிருக்க வேண்டியதில்லை என்பதே காந்தியின் நிலைப்பாடாக இருந்தது. எனினும், காந்திக்கு நெருக்கமான பலரும் அவரை மகாத்மா என போற்றியதால், காந்தி விரும்பிய வெளிப்படைத் தன்மையை, அவரது செயல்பாடுகள் குறித்த விமர்சனங்களை, அவரது உத்தரவுகளை நிறைவேற்றுவதில் இருக்கக்கூடிய தயக்கங்களை வெளிப்படையாகச் சொல்லத் தயங்கினர். இவர்களில் மோதிலால் நேரு, கான் அப்துல் கஃபார் கான் போன்றவர்கள் காந்தியின் நட்பிற்குரியவர்களாக இருந்தனர்.
காந்தியிடம் வெளிநாட்டவர்கள் -குறிப்பாக ஆங்கிலேயர்கள் உள்ளிட்ட ஐரோப்பிய வெள்ளைக்காரர்கள் பாராட்டிய நட்பும், அதற்கு காந்தி கொடுத்த முக்கியத்துவமும் ஆச்சரியகரமானவை. தென்னாப்பிரிக்காவில் அவர் வெள்ளை ஆதிக்கத்திற்கு எதிராக சத்யாகிரகம் நடத்திய காலத்திலேயே இத்தகைய நட்பு அமைந்தது. இந்தியாவில் காந்தி நடத்திய சுதந்திரப் போராட்டத்தின்போதும் வெள்ளைக்காரர்கள் -அதிலும் குறிப்பாக, ஆங்கிலேய அதிகாரிகளான இர்வின் போன்றவர்கள் காந்தியிடம் நட்பும் மதிப்பும் கொண்டி ருந்தனர். டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 3 பெண்கள் காந்தியிடம் கொண்டிருந்த நட்பும் அவர்களுக்கு காந்தி எழுதிய கடிதங்கள் குறித்தும் எழ்ண்ங்ய்க்ள் ர்ச் ஏஹய்க்ட்ண் எனத் தனிப் புத்தகமாகவே வெளியாகியுள்ளது. எஸ்தர் ஃபேரிங், ஆனி மேரி பீட்டர்சன், எல்லன் ஹோரூப் இவர்களில் முதல் இருவரும் கிறிஸ்தவ மிஷனரி பணிகளுக்காக இந்தியாவுக்கு வந்து, காந்தியின் சபர்மதி ஆசிரமத்தைப் பார்த்து வியந்து, நட்பானவர்கள். காந்தியுடனான இவர்களின் நட்பும், அவரைக் காண இவர்கள் காட்டும் ஆர்வத்தையும் பார்த்து மிஷனரி இவர்களிடம் கேள்வி எழுப்ப, வேலையை விட்டுவிட்டனர். காந்தியுடனான கடிதப் போக்குவரத்து தொடர்ந்தது. அதுபோலவே எல்லன் ஹோரூப்புக்கு ஒரு கட்டத்தில் காந்தி எழுதிய கடிதங்கள் தனது மகன்களுக்கு எழுதிய கடிதங்களின் எண்ணிக்கையைவிட அதிகம் என்கிறது அந்தப் புத்தகம்.