சி. கார்த்திகேயன், சாத்தூர்
பொது இடங்களில் ஆள் பாதி ஆடை பாதி, ஒப்பனை போன்ற விஷயங்களை ஏன் ராகுல்காந்தி பெரிதும் விரும்புவது இல்லை?
ராகுல், மோடி இருவருமே விளம்பரதாரிகள்தான். கட்சியின் பிரதான முகங்களாய், அது இருவருக்கும் அத்தியாவசியமானதும்கூட. இருவரது விளம்பர யுக்திகளும் வெவ் வேறானவை. ராகுலால் முகத்தை மூடும் தாடியோடும், சவரம் செய்து சில நாட்களான முகத்தோடும் நடமாடமுடியும். உண்மையி லேயே அடித்தட்டிலிருக்கும் மக்க ளோடு அமர்ந்து சாப்பிடவும், மணிப்பூர் வன்முறையில் பாதிக்கப் பட்ட மக்களை அணைத்து ஆறு தல் கூறவும் முடியும். மோடிக்கு அத்த கைய விளம்பர பாணிகள் செட்டாகாது. ஆனால், போர் விமானத்தை ஓட்டுவது போன்றும், உரிய உடைகளோடு கடலுக்கடியில் அமர்ந்து தியானம் செய்வதுபோலவும், எல்லாம் தெரிந்த பாவனை வகை விளம்பரங்களில் கெத்துக் காட்டமுடியும். நீட் அண்ட் ஜென்டில்மேன் கெட்-அப் விளம்பர மோடை மோடி கையிலெடுத்துக்கொண்டதால், ரப் அண்ட் டப் மற்றும் ஏழைப் பங்காளன் விளம்பர மோடில் ராகுல் அசத்திக்கொண்டி ருக்கிறார்.
ரா.ராஜ்மோகன், முட்டியூர்
"காவல் அதிகாரிகளை இடம்மாற்றினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை மாற்றிவிட முடியாது''’என்றிருக்கிறாரே எடப்பாடி கே பழனிச்சாமி?
ஆளுங்கட்சி யின் பிரச்சனை, எதிர்க்கட்சியின் வரப்பிரசாதம். தேர்தலுக்கு தேர் தல் அடிவாங்கி நொந்து போயிருக் கும் எடப் பாடிக்கு கள் ளச்சாராய சாவுகள், பகுஜன் சமாஜ் கட்சியின் ஆம்ஸ்ட்ராங் கின் படுகொலை போன்றவை வலி நிவாரணி ஆகும். ஆக, ஸ்டாலின் என்ன செய் தாலுமே எடப் பாடி அதை விமர் சனம்தான் செய்வார்.
மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
இன்றைய இளைஞர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தில் முற்றிலும் சிதைந்துபோயிருக் கிறார்கள் என்று கூறுகிறாரே எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி...?
2014 தேர்தலின்போது பா.ஜ.க. அழுத்த மாக முன்வைத்த கோஷங்களில் ஒன்று வேலை யில்லாத் திண்டாட்டம். அன்றைய இந்தியாவின் வேலையின்மை விகிதம் 5.44. 2024, ஜூனில் இந்தியாவின் வேலையின்மை விகிதம் 9.4, கிட்டத்தட்ட இரு மடங்கு. எதிர்க்கட்சித் தலை வர் சொல்வதிலோ, இல்லை வேலையின்மை விகிதம் குறித்து பிரச்சாரம் செய்வதிலோ என்ன தவறு!
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.
மத்திய, மாநில அரசுகள் கடமையை சரிவரச் செய்தால் எடப்பாடி உள்ளே இருப்பார் என புகழேந்தி கூறியிருக்கிறாரே?
மத்திய, மாநில அரசுகள் கடமையை சரிவரச் செய்தால் எடப்பாடி மட்டும்தான் உள்ளே இருப்பாரா...? இல்லை அந்த வேறு பலரும் உள்ளே போவதில் புகழேந்திக்கு ஆட்சேபனை ஒன்றுமில்லையா?
தே.மாதவராஜ், கோயமுத்தூர்
போலி நிறுவனங்களில் மக்கள் பணத்தை போட்டுவிட்டு பிறகு காவல்துறைக்கும், நீதிமன்றத்திற் கும் அல்லாடுகிறார்களே... எப்போதுதான் திருந்துவார்கள்?
பேராசை முடிவுக்கு வரும்போது. அல்லது முறையான வழிகளில் தங்கள் பணத்தை முதலீடு செய்து சம்பாதிக்கும் வழிமுறைகள் தெரிய வரும்போது. வங்கிகளில் ஆறு முதல் ஏழு சத விகிதம் வட்டி தருகிறார்கள். பிக்சட் டெபா சிட்டுகளுக்கு இன்னும் ஒரு சதவிகிதம் வரை கூடுதலாகக் கிடைக்கலாம். திறமையாகத் தொழில் செய்பவர்களின் லாப விகிதம் வேறு. ஆனால், உட்கார்ந்த இடத்திலேயே பணத்தைப் போட்டு ஆறு மாதத்தில் இரட்டிப்பு, ஒரு வருடத்தில் இரட்டிப்பு என ஆசைப்படுபவர் களுக்கு நட்டம் மட்டும்தான் இரட்டிப்பாகும்.
குடந்தை பரிபூரணன், கும்பகோணம்.
தேர்தல் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில் வேட்பாளர் மது பாட்டில்கள் விநியோகம் செய்துள்ளது பற்றி...?
கர்நாடகாவின் சிக்கபல்லபூர் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் கே. சுதாகர், காங்கிரஸ் வேட்பாளரை வென்று எம்.பி.யானார். வாக்காளர்களுக்கு நன்றி தெரி விக்க வைத்த விருந்தில் அசைவ உணவுகளுடன் மதுபானங்களும் பரிமாறப்பட்டன. வாக்காளர் களுக்கு மது வழங்கப்போவதாகவும் அதற்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என குறிப்பிட்டே எம்.பி. காவல்துறைக்கு எழுதிய கடிதம் வெளியாகி சர்ச்சையாகியுள்ளது. 10,000 பேர் வருவர் என அவர் எதிர்பார்க்க, 60,000 பேர் திரண்டதால் நிலைமை கைமீறிப்போக, நான் விருந்துதான் வைத்தேன். வந்தவர்கள் கையோடு மதுவைக் கொண்டுவந்திருக்கலாம் என டபாய்த்திருக்கிறார் சுதாகர்.
எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு
சபரிமலையை யாரும் தொடமுடியாது என்று மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி எச்சரிக்கை விடுத்திருக்கிறாரே?
எம்.பி. தேர்தலில் ஒரு தொகுதி ஜெயித் திருக்கிறார்கள் அல்லவா! அதனால் ஏதாவது சர்ச்சையைக் கிளப்பாவிட்டால்தான் ஆச்சரியம்!