எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு
ராகுல்காந்தி தேசத்துக்கு எதிராகச் செயல் படுகிறார் என்று அமித்ஷா குற்றம்சாட்டுவது சரியா?
அமித்ஷாவைப் பொறுத்தவரை பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.ஸும் இவையிரண்டிலும் இருக்கும் உறுப்பினர்களும்தான், தேசமும் குடிமக்களும். ராகுல், விடாமல் இவற்றுக்கு எதிராக இங்கிலாந்திலும், அமெரிக்காவிலுமாக குற்றங்களை அடுக்கினால்... பதிலுக்கு, அவர் தன் பங்குக்கு சேற்றை வாரியிறைக்கிறார்.
வண்ணைகணேசன், பொன்னியம்மன்மேடு
இமாசலப்பிரதேசத்தில் அமைந்துள்ள காங் கிரஸ் அரசு, கடன் வாங்கி சோனியாவிடம் கொடுக் கிறது என்று கங்கணா ரணவத் பேசுகிறாரே?
ஆதாரமில்லாமல் பா.ஜ.க.வினர் அடித்துவிடுவ தென்ன புதிதா? மாறாக, மகாராஷ்டிர மாநிலத்தில் நாக்பூர் கோரடி பகுதியில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள 5 ஹெக்டேர் நிலத்தை, மாநில பா.ஜ.க. தலைவர் களில் ஒருவரான சந்திரசேகர் பவான்குலேயின் ட்ரஸ்டுக்கு விதிமுறைகளை மீறியும், நிதித் துறையின் ஆட்சேபனையை மீறியும் அந்த மாநில அரசு ஒதுக்கியுள்ளது. பண்ணுவது திருட்டுத்தனம். ஆனால் ஆளுக்கு முந்தி மற்றவர்களை திருடர்கள் என்று முத்திரை குத்திவிடுவது. இதுவும் பா.ஜ.க.வின் யுக்திதான்.
ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு
மகாத்மா காந்தி திடீரென உயிர்பெற்று வந்துவிட்டால்?
இன்னும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இந்தியாவில் இருக்கவே செய்கிறார்கள். கூடவே அவர்களுக்கு வேண்டிய அரசுதான் ஆட்சிப் பொறுப்பிலும் இருக் கிறது. ஆனால், அப்படி வந்தால் தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் தற்போதைய அரசுக்கு எதிராகவும், மாட்டுக் கறியின் பெயரால் உயிர்க்கொலை புரிபவர் களுக்கு எதிராகவும் போராட்டத்தை ஆரம்பித்து விடுவார்.
மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் இதுதான் இந்தியாவின் லட்சியம் என் கிறாரே பிரதமர் மோடி...?
ஒரே பூமியெல்லாம் இருக் கட்டும்... இங்கே இந்தியாவில் அம்பானி, அதானிகளுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளி அச்சுறுத்தும் வகையில் அதிகரித்துக் கொண்டேபோகிறது என்கிறார்கள் பொருளாதார அறிஞர்கள். இல்லாதவன் கோவணத்தை உருவுவதை விட்டு, கொஞ்சம் இருப்பவன் கோட்டுப் பையிலிருந்து பணத்தை எடுத்துப் பகிர்ந்து சமநிலையை ஏற்படுத்த மோடி முயற்சிசெய்யட்டும்.
ஆர்.ராஜ்மோகன், முட்டியூர்
ராமரின் இருக்கையில் பரதன் அமர சங்கடப்பட்டதுபோல் கெஜ்ரிவால் இருக்கையில் அமர நானும் சங்கடப்படுகிறேன் என்றிருக்கிறாரே டில்லி மாநில அரசின் புதிய முதல்வர் அதிஷி?
அதெல்லாம் விளம்பர ஸ்டண்ட். கெஜ்ரி வாலையோ, டில்லி மக்களையோ வசீகரிப்பதற்காகச் சொல்லப்படுவது. இந்தியா எத்தனையோ, பிரதமர் களையும் முதல்வர்களையும் பார்த்துவிட்டது. ஆட்சிப் பொறுப்பேற்ற ஜோரில் சொல்லும் பஞ்ச் வசனங்களை ஆயிரக் கணக்கில் கேட்டுவிட்டது.
என். இளங்கோவன், மயிலாடுதுறை.
ரயில்கள் தடம்புரள்வதில் இந்திய ரயில்வே சாதனை புரிந்துவருகிறது என்று கூறுகிறாரே மம்தா?
ரயில்கள் மட்டும்தான் தடம்புரண்டுகொண்டி ருக்கிறதா? மோடி பிரதமரானபின் இந்தியாவில் எத்த னையோ விஷயங்கள் தடம்புரண்டுகொண்டிருக்கின்றன. மம்தா அவற்றையெல்லாம் கவனிக்கவில்லை போல!
எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
மதச்சார்பின்மை என்பது ஐரோப்பிய கருத்து. இந்தியாவுக்கு சரிப்பட்டு வராது என்ற ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சு?
கலப்பேயின்றி, தன் சொந்த நாட்டுக் கருத்தை மட்டுமே பின்பற்றும், நடைமுறைப்படுத்தும் ஒரேயொரு நாடுகூட உலகத்தில் கிடையாது. நல்லது என்றால் எங்கிருந்தும் எடுத்துக் கொள்ளவேண்டியது தான். மேற்கத்திய நாடுகள் மட்டும், நாத்திகத்திலேயே பிறந் தவையா! அங்கேயும் சிலுவைப் போர், மத குருமார் களின் அரசியல் ஆதிக்கத்தைப் பார்த்து விட்டுத்தான் அரசியலிலிருந்து மதத்தை விலக்கி வைத்தார்கள். மதச்சார் பின்மையைக் கொண்டு வந்தார்கள். மேற் கத்திய சமாச்சாரங்கள் வேண்டாமென்றால், கவர் னர் தான் அணிந்திருக் கும் கோட்டு, சூட்டைக் கூட கழற்றி எறிந்துவிட்டு வேட்டி யும் அங்கவஸ்திரமுமாகத்தான் இருக்கவேண்டும்.
தே.மாதவராஜ், கோயமுத்தூர்
என்கவுன்டர் செய்தால் குற்றங் கள் குறைந்து விடுமா?
நல்ல கேள்விதான். சட்டம் ஒழுங் கைக் கட்டுக்குள் வைப்பது என்பதை என்கவுன்டர் என்று புரிந்து கொண்டி ருக்கிறதோ அரசு!
விஜய ஜெயராமன், அஸ்தினாபுரம்.
காங்கிரஸ் தனித்து நின்றால் எத்தனை இடங்களில் டெபா சிட் கிடைக்கும்?
இதற்கு செல்வப் பெருந்தகையும், கார்கே வும், காங்கிரஸ் தொண் டர்களும் தானே பதிலை யோசிக்க வேண்டும்!