மிழகம் முழுவதும் தியேட்டர்களில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளிப்பது சம்பந்தமாக பொங்கலுக்கு ரிலீசாகும் "மாஸ் டர்'’படத்தின் ஹீரோ விஜய், முதல்வர் எடப்பாடியைச் சந்தித்தார். தேர்தல் நிதியும் கைமாறியது. இதைத் தொடர்ந்து 100%க்கு அனுமதியளித்து அரசாணை வெளியானது. இதனால் கோலிவுட்டில் 100% மகிழ்ச்சியும் கரை புரண்டது. இதை 2021 ஜன.06-08, 09-12 நக்கீரன் இதழ்களில் பதிவு செய்திருந்தோம்.

cinema

"மத்திய மோடி சர்க்காரோ, 100% இருக்கை அனுமதி என்பது தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி குற்றம். எனவே தமிழக அரசு தியேட்டர்களுக்கு வழங்கிய அனுமதியை வாபஸ் பெறவேண்டும்' என வற்புறுத்தியதைத் தொடர்ந்து, "50% சீட்தான்' என்றது எடப்பாடி அரசு. இந்த அறிவிப்பு சினிமா உலகினருக்கு பேரிடியாக வந்திறங்கியதால், பொங்கலுக்கு ரிலீசாகும் விஜய்யின் "மாஸ்டர்'’, சிம்புவின் "ஈஸ்வரன்'’ படங்களின் வியாபாரத்தில் இடியாப்பச் சிக்கலானது.

""50% சீட்தான் என்பதால் விஜய்யின் "மாஸ்டர்' படத்தை மட்டும் பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணினால்தான் தயாரிப் பாளர்களுக்கும் தியேட்டர் அதிபர்களுக்கும் நஷ்டம் ஏற்படாமல் இருக்கும். எனவே "ஈஸ்வரன்'’படத்தை தைப்பூச தினமான ஜன. 28-ஆம் தேதி ரிலீஸ் பண்ணலாம்'' என திரியைக் கொளுத்திப் போட்டார் தியேட்டர் அதிபர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம்.

Advertisment

இதற்கு வினியோகஸ்தர்கள் தரப்பி லிருந்தே கடும் எதிர்ப்புக் கிளம்பியது. கோவையைச் சேர்ந்த ஒரு வினியோகஸ்தரோ, ""ஏனுங்க திருப்பூர் சுப்பிரமணி, மாஸ்டரும் ஈஸ்வரனும் ரிலீஸாவதுல உங்களுக்கு என்ன பிரச்சினை? பெரியமனுஷனான நீங்களே இப்படிச் சொன்னா எப்படிங்க?'' என பேசிய பரபரப்பு ஆடியோவை வாட்ஸ்-அப்பில் ரிலீஸ் பண்ணினார்.

"ஈஸ்வரன்'’ படத்தின் தமிழக வினியோக உரிமையை 9 கோடிக்கு வாங்கிய "7 ஜி'’ சிவாவோ, ""என்ன ஆனாலும் சரி, படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணியே ஆகவேண்டும்'' என களத்தில் குதித்தார். ‘"மாஸ்டர்'’ படத்திற்கு தியேட் டர்களை புக்பண்ணுவதில் லேட்டாகும் கேப்பைப் பயன்படுத்தி சென்னை ஷாகிர் உசேன், செங்கல்பட்டு காளையப்பன், கோவை ஸ்கிரீன் சீன், மதுரை அழகர்சாமி (மெகா ஃபைனான்சியர் மதுரை அன்புவின் தம்பி), திருச்சி ராமநாதன், வேலூர்-புதுச்சேரி சுரேஷ் என ஏரியாவாரியாக படத்தை வினியோகம் செய்து, கிட்டத்தட்ட தியேட்டர்களையும் புக்பண்ணி, பத்திரிகை களில் விளம்பரமும் கொடுத்துவிட்டார் சிவா. (17 கோடியில் தயாரான ‘ஈஸ்வரன்’30 கோடிக்கு வியாபாரமாகியுள்ளது)

இந்த வேலைகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, சிம்புவின் தந்தையான டி.ஆர். கடந்த 08-ஆம் தேதி ஒரு வீடியோவை ரிலீஸ்பண்ணினார்.

Advertisment

அதில், “""முதல்வர் எடப்பாடி அரசு அனுமதித்ததோ 100% இருக்கை. அதற்கு மத்திய அரசு போடுகிறது தணிக்கை. 50% இருக்கைகள்தான் என்றால் நாங்கள் ஏன் 12% ஜிஎஸ்.டி வரி கட்டவேண்டும். ஐயா எடப்பாடி அவர்களே 8% உள்ளாட்சி வரியை யாவது ரத்து பண்ணி எங்கள பொங் கல் வைக்க விடுங்க''’என வேண்டுகோள் விடுத்தார் டி.ஆர்.

cinema

இந்த நிலையில்தான்... “டாஸ்மாக்கில் 100%, தியேட்டர்களுக்கு 50 சதவிகிதமா? என கடந்த வாரம் குமுறிய பா.ஜ.க.வின் லேட்டஸ்ட் ஸ்டார் குஷ்பு, மத்திய அரசின் கண்டிப்புக் கடிதம் வந்ததும், "ஆமாமா அதுவும் சரிதான்... மக்களின் உயிர்தான் முக்கியம்'’என இந்த வாரம் பல்டியடித்தார்.

குஷ்புவின் பல்டி குறித்து தயாரிப்பாளர் கவுன்சிலின் நிர்வாகி ஒருவர் நம்மிடம் பேசிய போது... “""சினிமாவுக்கு எதிரி வெளியில இல்ல, சினிமாவுக்குள்ளேயேதான் இருக்கிறார்கள். தியேட்டர்களை அடச்சுவச்சு ஏ.சி. போட்டா கொரோனா ஈஸியா பரவும்னு டாக்டர்கள் சொல்கிறார்கள். மக்களின் பாதுகாப்பு முக்கியம்தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் சென்னை, மதுரை, கோவை போன்ற பெருநகரங்களில் இருக்கும் ஜவுளிக்கடை, நகைக்கடைகளில் நான்கைந்து ஃபுளோர்களில் ஃபுல் ஏ.சி. போடுகிறார்கள். தினமும் ஒரு கடைக்கு 20 ஆயிரம் பேராவது வந்து போகிறார்கள். இப்படி இருக்கும்போது நாங்க மட்டும் என்னங்க பாவம் செஞ்சோம்?'' என உருக்கமாகப் பேசினார்.

சரி நடப்பது நடக்கும், கிடைப்பது கிடைக்கும் என்ற முடிவுடன் விஜய்மேல் பாரத்தைப் போட்டு ‘"மாஸ்டர்'’ பிஸ்னெஸ்சை ஆரம்பித்தார் இணைத் தயாரிப்பாளரான லலித்குமார். "எம்.ஜி. வேண்டாம், டிஸ்ட்ரிபியூசன் அடிப்படையில் வியாபாரம் பண்ணுங்க' என விஜய் கேட்டுக்கொண்டதால் சென்னை கற்பக வினாயகர் பிலிம் 5.5 கோடி, செங்கல்பட்டு படூர் ரமேஷ் 15 கோடி, வேலூர்-புதுச்சேரி செந்தில் 8.5 கோடி, சேலம் சுப்புராஜ் 6.5 கோடி, கோவை ராஜமன்னார் 11.5 கோடி, திருச்சி அரவிந்த் 8.25 கோடி, மதுரை (ஃபைவ் ஸ்டார் கதிரேசன் மூலமாக) அழகர்சாமி 9 கோடி, திருநெல்வேலி ஏரியா 5 கோடி என தமிழகத்தின் மொத்த வினியோக உரிமையை 84 கோடிக்கு விற்பனை செய்தார் லலித்.

விஜய்யின் 80 கோடி சம்பளம் + தயாரிப்புச் செலவு 50 கோடியை கணக்கிட்டு 199 கோடிக்கு படத்தை வாங்கிய லலித்தும் ரிஸ்க் எடுத்துத்தான் ரஸ்க் சாப்பிட்டிருக்கிறார்.

ஏனெனில் பெரும்பாலான வெளி நாடுகளில் கொரோனா பீதி இன்னும் விலகாததால், ஒரு சில நாடுகளில் மட்டுமே எஃப்.எம்.எஸ். ரைட்ஸ் விலை போயுள்ளது. அதேபோல் விஜய்க்கு நல்ல மார்க்கெட் உள்ள கேரளாவில் தியேட்டர்களைத் திறப்பது இன்னும் முடிவாகவில்லை. இருந்தாலும் 6.5 கோடிக்கு அங்கே "மாஸ்டர்' விற்பனையாகியுள்ளது.

கேரள தியேட்டர்கள் நிலவரம் குறித்து, அங்கு 40-க்கும் மேற்பட்ட படங்களை வினியோகம் செய்துள்ள ‘"சுந்தரா டிராவல்ஸ்'’ எஸ்.வி.தங்கராஜ் நம்மிடம் பேசினார்.

""பத்து மாச கரண்ட் பில், வரி, லோக்கல் டேக்ஸ் இதையெல்லாம் ரத்து பண்ணினால் ஜன. 13-ஆம் தேதி கேரளாவில் 250 தியேட்டர் களில் மாஸ்டரும் 80 தியேட்டர்களில் ஈஸ்வரனும் ரிலீசாகலாம். இது சம்பந்தமாக அங்குள்ள தியேட்டர் அதிபர்கள் சங்கத் தலைவர் ஆண்டனி பெரும்பாவூர் தலைமையில் 11-ஆம் தேதி முதல்வர் பினராய் விஜயனை சந்திக்கிறார்கள், பார்ப்போம் என்ன நடக்குதுன்னு''’என்றார்.

"50% சீட்களால் மாஸ்டரும் ஈஸ்வரனும் தப்பிக்குமா?' என சேலம் வினியோகஸ்தரும் தென்மாவட்டத்தில் 5 தியேட்டர்களை லீசுக்கு எடுத்து நடத்துபவருமான ராமானுஜத்திடம் நாம் கேட்டோம். ""கண்டிப்பா ரெண்டுமே தப்பிச்சுரும். விஜய்க்கு இருக்கும் 1 கோடி ரசிகர்களால் ஒரு வாரம் தாண்டினாலே "மாஸ்டர்'’ஹிட்தான். இதனால் 50% சீட் என்பதால் இரு படங்களின் தயாரிப்பாளர்களும் வினியோகஸ்தர்களும் பதட்டப்படத் தேவையில்லை''’என்கிறார் கூலாக.

"பொங்கலோ பொங்கல்' என பொங்கல் பொங்கட்டும். எல்லோரின் வாழ்வும் இனிக்கட்டும்.

-ஈ.பா.பரமேஷ்வரன்

______________

பொன்விழா ஆண்டில் கௌரவம்!

thanu

1971-ல் வினியோகஸ்தராக சினிமாப் பயணத்தை ஆரம்பித்த கலைப்புலி எஸ்.தாணு, 25 வருடங்களாக பிரம்மாண்ட படங்களின் தயாரிப்பாளர், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைத் தலைவர், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தார். இந்த பொன்விழா ஆண்டின் மிகப் பெரிய கௌரவமாக அகில இந்திய திரைப்பட சம்மேளனத்தின் (Film Federation of India) 71-ஆவது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் தாணு. தமிழகத்திலிருந்து எஸ்.எஸ்.வாசன், நாகிரெட்டிக்குப் பிறகு அந்த அமைப்பின் தலைவராகியிருக்கும் கலைப்புலி தாணு வருகிற பிப். 01-ஆம் தேதி அந்தப் பொறுப்பை ஏற்கிறார்.